Sunday, February 19, 2012

வீடு வரும்வரை காய்ந்திருக்கும் மக்கள்


அன்று பலபேருக்கு நல்ல நாளாக இருக்க வேண்டும். ஏதோமுண்டியடித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் பின்னால் கூடிநின்று ஏதேதோபேசிக்கொண்டும் இருந்தார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பின்தங்கிய கிராமம் அது, இயற்கைத் தோற்றமுடைய அந்தக் கிராமத்தில் உட்கட்டமைப்பு வதிகள் போதுமானதாக இல்லை. கிளிநொச்சி நகரத்திலிருந்து மேற்குப் பக்கமாக கிட்டத்தட்ட 20 25 கிலோமீற்றர் பயணித்தால் சென்றடையக் கூடிய கிராமத்தில் 420இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

வீதிப்போக்குவரத்துச் ரியாக முழுமைப்படுத்தப்பட இல்லை. மின்சார வதியில்லை. சொல்லப் போனால், குக்கிராமம் போலத்தான் அது இருக்கிறது.

னக்கூட்டம் ஏன் இவ்வாறு கூடியிருக்கிறது? என்று பார்ப்பதற்கான ஆர்வம் மேலெழுந்ததால் அருகில் சென்று பார்த்தேன். அங்கு, கொஞ் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. தங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதா? என்ற ஆவலில் முண்டியடித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் அதை நான் பார்த்தேன்.

93 பெயர்கள் அந்தப் பட்டியலில் அடக்கப்பட்டிருந்தன. இந்தத் தடவை அர உத்தியோகத்தர்களுக்கும் அதில் இடம் வழங்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்தக் கிராமத்தில் 195 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுக் கணிமானவை கட்டிமுடிக்கப்பட்டன. பெருமளவில் வழங்கப்பட்ட அளவுத் திட்டங்களுக்கு அப்பால் பயனாளர்களும் தங்கள் பணத்தைச் சேர்த்து 3 அறைகள், ஒரு கோல், ஒரு மையலறை என்ற அமைப்பில் ஒரு உருப்படியான வீட்டைக் கட்டிமுடித்தார்கள்.

இந்த வீட்டுத்திட்டத்துக்காக வீட்டு உரிமையாளரின் பெயரில் காணி உறுதி அல்லது உரிமைப் பத்திரம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டதால் இத்திட்டத்திலிருந்து பலர் விலக்கப்பட வேண்டியவர்கள் ஆயினர்.

இதனால் அடுத்த கட்டத் திட்டத்தில் தமக்கு விரைவாக வீட்டுத்திட்டம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு அதிகாரிகளின் வரவையும் இந்த பெயர்ப் பட்டியலின் வரவையும் எதிர்பார்த்தபடியேபல மாதங்கள் கழிந்தன. இந்தக் கிராமத்தில் 2010 ஆரம்பத்தில் மீள்குடியமர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டு வருடங்கள் ஆனபோதும் மீதிப்பேருக்கு வீட்டுத்திட்டம் வந்துசேரவில்லை. (இப்போதும் பெயர்ப்பட்டியல்)

வீட்டுத்திட்டம் பற்றி அதிகாரிகளிடம் அந்தக் குடும்பங்கள் கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டங்கட்டமாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் குறித்த கிராமம் முதற்கட்டமான அதிக எண்ணிக்கையான வீடுகளைப் பெற்றுள்ளது. எனவே முதல் சுற்றில் எல்லாக் கிராமங்களுக்கும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரேஇரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். அப்போது உங்களுக்கும் வீடு கிடைத்துவிடும் என்ற பதில் கிடைத்தது.

நீண்டநாள் காத்திருப்புக்களின் மத்தியில் அந்த னக்கூட்டம் கூடியிருந்த நாள் அதில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா எனத் தேடிய நாள் கடந்தவருடம் 12ஆம் மாதம் 15ஆம் திகதியாக இருந்தது.

ஓரளவுக்கு மனத்திருப்தி, வீட்டுத்திட்டம் வந்துவிடும் என்ற பெருமிதம் அவர்கள் மத்தியில் புரையோடியிருந்தது.

இன்று 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அதுபற்றி எந்தவிதமான அடுத்தகட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அந்த மக்கள் நாளை கூட்டம் கூடுவார்கள். திட்டம் பற்றி அறிவுறுத்துவதற்கு அதிகாரிகள் வருவார்கள் என்று வழி மீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.

ஆனால் பெயர்விவரம் ஒட்டப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. யாரும் இதுவரை திரும்பிக்கூடப் பார்த்ததாகத் தெரியவில்லை. இப்போது அந்த ஊருக்குப் போனால் அந்தப் பெயர்ப் பட்டியலையும் காணவில்லை.

மீள்குடியமர்த்தப்பட்டு இரண்டு வருடங்கள் தற்காலிக குடிசைகளில் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்வைக் கழித்துவிட்ட அந்த மக்கள் இப்போது ஒட்டப்பட்ட பெயர் விவரங்களையும் மறந்துவிட்டார்கள்.

யாராவது அதிகாரிகள் வந்தால் எங்களுக்கு வீட்டுத்திட்டம் வருமா? என்று கேட்டால் வந்துவிடும் என்றேபதில் கிடைக்கும். இரண்டு வருடங்களாக குடிசைகளில் இருந்தபடியேவீட்டுத்திட்டம் பற்றியும் கல்வீட்டில் எங்கள் புது வாழ்க்கை பற்றியும் கனவு கண்டபடியேஇருக்கின்றோம். இவற்றுக்கு உருப்படியான பதில் கிடைப்பதோஎங்கள் வாழ்க்கைக்கு விமோனம் கிடைப்பதோஇப்போதைக்கு இல்லையென்றேஎமக்குத் தோன்றுகின்றது.

சாதாரண மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அத்தியாவசியப் பொருள்கள் நாளுக்கு நாள் விலை@யறிக்கொண்டேஇருக்கின்றன. இந்த நெருக்கடிகளுக்குக் குடிசைகளில் இருந்தபடியேநாங்கள் முகங்கொடுக்கின்றோம். இதை பொறுப்பான எவரும் நினைத்துப் பார்ப்பதே இல்லை என்கின்றனர் அந்தக் கிராமத்து மக்கள்.

வன்னியில் பல கிராமங்கள் இந்தக் கிராமத்தைப் போவேதான் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. ஆனால் அதற்கான தீர்வு, மக்களின் தேவைகள் பற்றி எவரும் சிந்திப்பதே கிடையாது.

பல கிராமங்களுக்கு முதற் கட்டமாக "சாம்பிளுக்கு' கொஞ்க் கொஞ் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. பரவலாக மீள்குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் இவ்வாறு கட்டிக் கொடுக்கப்பட்டதால் பல பேருக்குக் கணக்குக் காட்ட நல்ல வதியாகவும் இருக்கிறது.

கிராம எண்ணிக்கை அடிப்படையில் எல்லாக் கிராமங்களுக்கும் இவை அமைந்துவிட்டதால் வெளியிடங்களில் இருந்து வருவோருக்கும் வெளிநாட்டு இராஜ தந்திரிகளுக்கும் பட்டியலைத் தூக்கிப் போட்டு வீராப்பும் பேசமுடிகிறது.

ஆனால் பத்தில் ஒன்றேநிறைவேறிய கதை வந்துபோகும் பல பேருக்கு தெரியவே தெரியாது. தெரிவிக்கவும் அனுமதியில்லை. தெரியப்படுத்தவும் அதிகாரம் இல்லை. அறிக்கைகளில் சோடிக்கப்படும் கதையாகவே வகையாகவே அபிவிருத்திகள் தொடர்கின்றன.

பாவம், அர நிர்வாகத்தில் வேலை செய்பவர்கள். அவர்கள் தான் அவலப்படும் மக்களால் தினமும் ஏச்சுக் கேட்கும் பாவிகளாக உள்ளனர். அவர்கள் என்னதான் செய்துவிட முடியும். மேலதிகாரிகள் பணிப்பவற்றையும் சொல்பவற்றையும் கேட்டுத் தலையசைப்பதே அவர்களின் பணியாக உள்ளது.

எது எப்படியிருந்தபோதிலும் மக்களுக்கு ஆசைகளைத் தூண்டிவிட்டு அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்யாது அவர்களது கேள்விகளுக்குப் பதில் கூறாது தட்டிக்கழிப்பது அரசின் மற்றுமொரு அமந்தப் போக்காக உள்ளது.

நாளுக்குநாள் அதிகரித்துவரும் வாழ்க்கைச் சுமை அதை ஈடு செய்வதற்கு அவர்கள் எதிர்நோக்கும் வால்கள் என்பவற்றுக்கு மத்தியில் அரசு இதுவரையில் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் பொறுப்புக் கூறும் தன்மையிலிருந்தும் கடமையிலிருந்தும் விலகியிருப்பது எதிர்காலத்தில் அந்த மக்களின் வாழ்க்கையையேகேள்விக்குறியாக்கிவிடும்.

இன்றுவரும் நாளைவரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உருப்படியாக என்று வரும் என்பதையாவது சொல்லிவிட்டால் அவர்கள் தம்பாட்டில் இருந்துவிடுவார்கள். யுத்தத்தின்போது இருந்த எல்லாவற்றையும் இழந்துவிட்ட அந்த மக்களுக்கு இதிலென்ன அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கப் போகின்றது.

எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது போல மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் அரசிடமிருந்து ஏதாவது கிள்ளித் தெளிக்கப்பட்டால் அது மட்டுமே அவர்களுக்குச் சொத்தாக மாறும். கிள்ளல்கள் தொடரும் நிலையில் எப்போதுதான் தெளிப்பார்களோ?

அடிபட்டு நின்று தங்கள் பெயர்களை வாசித்த அந்தக் கூட்டத்தினர் இப்போது அந்தப் பக்கமே வருவதில்லை. மன உளைச்லில் தங்கள் வேலைகளைப் பார்த்தபடி வீடுகளுக்குள்ளேமுடங்கிக் கிடக்கின்றனர். அரசு தமக்கான கடமைகளைச் செய்துகொண்டேஇருக்கின்றது. மக்களுக்காக அல்ல தமக்காகவே. *

நன்றி உதயன்-சூரியகாந்தி (19.02.2012)

Saturday, February 11, 2012

நியாயம் கிடைக்குமா ? ஏங்கும் விவசாயிகள்


""ராமு, என் ராசவன்னா குடிச்சுடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம்.'' "நாளைக்குப் பாற்கஞ்சி...''

""சும்மா போம்மா. நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா.''

"இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே''

முருகேசனின் கனவு மழையோடு கரைந்துபோக ராமு ஏதுமறியாதவனாய் தன் விருப்பத்தையே கேட்டுக்கொண்டு இருந்தான்.

"அநேகநாள் பழக்கத்தினாலே நாளைக்கு என்று மட்டுமே அவளால் சொல்லமுடிந்தது. அந்த அரைகுறையான வார்த்தை முருகேசன் வயிற்றில் நெருப்பை அள்ளிக்கொட்டியது.''

--

ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தின் வாழ்வைச் சித்தரிக்கும் இந்தச் சிறுகதை ஈழத்தில் உருவான ஒரு அற்புத படைப்பு. சி.வைத்திலிங்கத்தின் எண்ணங்கள் இளையோடிய இந்தச் சிறுகதை எல்லோர் மனதிலும் பொறிபோலத் தைப்பது தவிர்க்க முடியாதது.

ஒரு ஏழை விவசாயியின் கனவுகளையும் ஆசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் கொண்டுசெல்லும் இந்தக் கதையில் ராமு என்ற சிறுவனின் பாத்திரப் படைப்பும் அவனது ஏக்கமும் உணர்ச்சிபூர்வமானது.

இன்று இப்படித்தான் பல விவசாயக் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை ஏக்கத்துடன் கழிக்கின்றனர். அவர்களது ஆசைகளும் கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் ஏதோஒரு கெடுதல்களால் நெருப்பில் பொங்குவதுபோல மாறிவிடுகின்றன.

நவநாகரீகம் வளர்ந்துவிட்ட இன்று விவசாயத்தைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு நெருக்கடியே தோன்றியுள்ளது. அவர்கள் ஏனைய வாழ்க்கைத் தேவைகளுக்காக ஒவ்வொருநாளும் போராட வேண்டியவர்களாகவே மாறியுள்ளனர்.

கிளிநொச்சியில் ஒரு விவசாய குடும்பஸ்தர் தனது நாளாந்த வாழ்க்கையைப் பூர்த்தியாக்குவதற்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளையும் எதிர்நோக்கும் வால்களையும் விவரிக்கும்போது, ஈழத்து எழுத்தாளர் சி.வைத்திலிங்கம் படைத்த "பாற்கஞ்சி'' படைப்பு ஞாபகத்துக்கு வருவது தவிர்க்கமுடியாமல் போயிருந்தது.

கிளிநொச்சியில் காலபோக நெற்செய்கைக்கான அறுவடை முடிவுற்றதும் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யப் பலநோக்குக் கூட்டுறவுச் ங்கங்களூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அர அதிபர் தெரிவித்திருக்கிறார்.

ஏழை விவசாயிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். இருப்பதற்கு, உறங்குவதற்கு, விருந்தாளி வந்தால் உபரிப்பதற்கு ஒரு உருப்படியான வீடற்ற விவசாயிகளுக்கு தாம் அறுவடை செய்யும் நெல்லை நியாயமான விலைக்குச் ந்தைப்படுத்த முடியும் என்ற செய்தி அடுத்த ஆண்டில் அவர்களின் முயற்சியை இரட்டிப்பாக்கும் என்பது உண்மைதான். ஆனால், கடந்த காலங்களில் இப்படியான நெல் கொள்வனவு எந்தளவுக்கு நடைபெற்றது என்பதை அந்த ஏழை விவசாயி புரட்டியபோது அந்தக் கனவுகளெல்லாம் அவர்களிடத்திலிருந்து ட்டென்றேகலைந்துபோவதாகத் தென்பட்டது.

"இந்த ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கைமூலம் கிடைக்கும் நெல்லை விவசாயிகளிடமிருந்து தீர்மானிக்கப்பட்ட விலையில் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு பலநோக்குக் கூட்டுறவுச் ங்கங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். இதன்மூலம் விவசாயிகள் கடந்த வருடம் காலபோக நெற்செய்கையின்போது நிர்ணயிக்கப்பட்ட விலைப்படி நெல்லைச் ந்தைப்படுத்த முடியும். இதுதான் அந்த மகிழ்ச்சிகரமான செய்தி.

கடந்தவருட காலபோக நெற்செய்கையின்போது சிவப்புநாடு ஒரு கிலோ 28 ரூபாவும் ம்பா 32 ரூபாவும் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி நெல் கொள்வனவு இடம்பெற்றால் விவசாயிகளுக்கு மூடை ஒன்றுக்கு 1,680 ரூபா கிடைக்கும். ம்பாவுக்கு 1,920 ரூபா கிடைக்கும். தனியார் இவற்றைவிட கூடுதல் விலை கொடுத்துக் கொள்வனவு செய்தால் விவசாயிகள் தமது உற்பத்தியை நல்ல வகையில் ந்தைப்படுத்தலாம். ஆனால் ""தவிச் முயல் அடிக்கும்'' தனியார் துறையினர் நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து மிகக் குறைவான விலையிலேயே கொள்வனவு செய்ய முன்வருகின்றனர்.

நாளாந்த வாழ்க்கையுடன் போராடும் விவசாயிகள் தம்மிடம் இருக்கக்கூடிய பெறுமதி வாய்ந்த ஏதோஒரு பொருளை அடகு வைத்தோஅல்லது ஒரு நம்பிக்கையானவரிடம் கடன் பெற்@றா விவசாயத்தை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு உடனடித் தேவையாக இருப்பது அடகை மீள்வதோஅல்லது கடனைச் செலுத்துவதோதான். அதற்காக அறுவடை செய்த நெல்லை உடனடியாக விற்றேஆகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. மாறாக வீட்டில் நெல்லைப் பராமரிப்பதற்கு களஞ்சியவதிகூட அவர்களிடம் இல்லை. இதனாலும் அகப்படும் விலையில் நெல்லை விற்கவேண்டியுள்ளது.

அந்த ஏழை விவசாயி குறிப்பிடுவதும் இதுதான்.

ப.நோ.கூ. ங்கம் இதுவரை காலமும் எங்களிடம் நெல்லைக் கொள்வனவு செய்தது. எப்படியென்றால் விவசாய அங்கத்தவர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை நெல்மூடைகள் என்ற அடிப்படையில் (மிகச் öசாற்ப அளவே) தான். அதற்கும் நீண்டநாள் காத்திருக்க வேண்டும். நெல்லைக் கொடுத்துவிட்டால் அதற்கான பணத்தைப் பெறுவதற்கு நீண்டநாள் அலைய வேண்டும். மிகுதி நெல்லை வேறு யாருக்காவது அவர்கள் கேட்கும் விலையில்தான் கொடுக்க வேண்டும். இப்படி இழுபறிப் படுவதைவிட ஐஞ்சுபத்து நட்டம் வந்தாலும் யாருக்காவது முழுவதையும் கொடுத்து காசுகையில் கிடைத்தால் அதுதான் எமக்கு உதவியாக இருக்கும். நியாய விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ங்கங்கள் முன்வந்தால் மட்டும் போதாது. எங்களது தேவைகளையும் கஷ்டங்களையும் உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயற்பட்டால் அதுதான் எங்களுக்கு உதவியாக இருக்கும். அப்போதுதான் அவர்கள் கேட்டதைப்போல் நாங்கள் ஒத்துழைப்பு வழங்கமுடியும். கடன் தொல்லையாலும் அன்றாட வாழ்க்கைக்காகவும் எப்படியோ நெல்லை விற்றாக வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. இதற்கு தகுந்தாற்போல் ஒரு நல்ல தீர்வை எங்களுக்கு ஏற்படுத்தித் தருவதே இப்போதைக்குப் பொருத்தமானது என்கிறார் அந்த ஏழை விவசாயி.

உண்மையில் வன்னியில் பெரும்பாலான இடங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டாலும் அவர்களுக்கான அடிப்படை வதிகள் இன்றுவரை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் மக்கள் இன்றும் குடிசைகளிலேயே தங்கியுள்ளனர். இவர்களது தேவைகள், எதிர்பார்ப்புக்கள் பூரணப்படுத்தப்படாது அரசின் அபிவிருத்திகளை அரசியல் போக்கில் செல்கிறது.

இந்த நிலையில் விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பியிருக்கக் கூடியவர்கள் தங்கள் உற்பத்தியை நியாயமான விலையில் ந்தைப்படுத்துவதற்கு பக்கபலமான ஒரு வழியையே எதிர்பார்க்கின்றனர். பெயரளவில், பகுதியளவில் அவர்கள் தங்கள் உழைப்பின் ஊதியத்தை எதிர்பார்க்கவில்லை. இதற்கேற்பவே செயல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

வன்னியிலும் முருகேசனைப் போலவும் காமாட்சியைப் போலவும் ராமுவைப் போலவும் பலர் வாழ்கின்றனர். இவர்களது ஆசைகளும் எண்ணங்களும் கற்பனைகளும் தினமும் சிதைந்து போகின்றன. முருகேசனது கனவுகளை ஒரு மழை அழித்துச் சென்றது. அது முருகேசனின் கனவு மட்டுமல்ல. ராமுவின் பால்கஞ்சி என்ற அவாவையும் அடியோடு அழித்துவிட்டிருந்தது. இதுபோல வன்னியில் இப்போது மழை மேகங்கள் ழ்ந்திருப்பது பல விவசாயக் குடும்பங்களின் கனவுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுப்பதாகவே இருக்கின்றது. இயற்கையின் நியதிகளை மனிதனால் வெல்லமுடியாத போதும் மனிதனது ஆசைகளையும் தேவைகளையும் உரிமைகளையும் இன்னொரு மனிதனால் புரிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படையில் ஏழை விவசாயிகளின் எதிர்கால வாழ்வுக்குப் பொருத்தமான அபிவிருத்தி நோக்கிலான திட்டமொன்று கட்டாயமாகின்றது. பெயரளவிலோ சொல்லளவிலோ சில காரியங்களை அறிவிப்பதை விடுத்து மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பூரணம் அடையக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியதுமே இப்போதைய தேவையாக உள்ளது.

அர அதிபரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் ப.நோ.கூ. ங்கங்கள் முழு அளவில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லைக் கொள்வனவு செய்யுமா என்பது அவர்களிடத்திலே கேள்வியாக மாறியுள்ளதால் உண்மையான கரினையுடன் இந்த அறிவிப்பைச் செயற்படுத்த வேண்டியது தார்மீகப் பொறுப்பாக உள்ளது. இதுவே ஏழை விவசாயிகளின் கனவுக்கு நல்லதொரு விடையாக அமையும். *

நன்றி-உதயன் சூரியகாந்தி (12.02.2012)

Monday, February 6, 2012

ந(வ)ல்லிணக்கம் ஆகிவிடுமோ


சுட்ட மண்ணும் பச்சமண்ணும் ஓட்டுமா கூறப்பா, சுண்ணாம்பும் தயிரும் சேர்ந்தா திங்கிறவன் யாரப்பா' இது உணர்ச்சி கவிஞர் காசியானந்தனின் வரிகள். இரு இனங்களுக்கிடையே எந்த வகையிலும் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை என்பதை இந்தப் பாடல் வரிகள் எடுத் தியம்புகின்றன. இலங்கையில் இன நல்லிணக்கம், ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற சொற்கள் இப்போது தாராளமாகப் பாவிக்கப்படுகின்றன. அறிக்கைகளிலும் பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் திருவாய் களிலும் இவற்றுக்குப் பஞ்சமில்லை.

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கென பல்வேறு மட்டங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் முக்கிய கருவியாக இராணுவத்தினர் பயன்படுத் தப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கைகளையும் கவனிப்பர் என ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்டதுடன் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிர்வாகமும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இங்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துக்கும் இராணுவத்தின் அனுமதியும், பிரசன்னமும் அவசியமானதாகின்றது. அத்துடன் நிகழ்வுகளுக்குச் சில முன் மாதிரியானவர்களை அழைப்பதும் கட்டுப்பாடுகள் எழுதப்படாத சட்டமாகியுள்ளன.

கடந்த மாதம் கிளிநொச்சியில் இரா ணுவச் சிப்பாய்க்கும் முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் ஜனாதிபதி செயலகத்தால் திருமணம் செய்துவைக்கப்பட்டது. இதனை இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக அரசு பிரசாரப்படுத்தியது.

கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற இராணுவச் சிப்பாய்க்கும், மலையாளபுரத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளியான சந்திரசேக ரன் சர்மிளாவுக்கும் ஜனாதிபதி செயலகம் இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

உண்மையில் முன்னாள் பெண் போராளியின் பெற்றோர் இனக்கலவரம் இடம்பெற்ற போது மலைநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள். இவர்களுக்கு சிங்கள மொழிபேசத் தெரியும். அதுமட்டுமல்ல தாய் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் மற்றும் நாளாந்த கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் இவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள்.

இந்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திய இராணுவச் சிப்பாய், பெண்போராளி பம்பைமடு தடுப்புமுகா மில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது அவரிடத்தில் பேசிப்பழகி காதல் கொண்டுள்ளார். சற்றுச் சிங்களம் பேசத்தெரிந்த பெண் போராளியும் அதைச் சம்மதித்துள் ளார். பெண் போராளி தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கபட்டபோது இராணுவச் சிப்பாயும் கிளிநொச்சி இராணுவ முகாமுக்கு மாற்றம் பொற்றுள்ளார்.

பின்னர் போராளிப் பெண்ணின் பெற் றோருடன் இராணுவத்தினர் பேசிப்பழகி அவர்களிடத்தில் அனுமதி பெற்றுள்ளனர். தொடர்ந்து இராணுவத் தலைமை அதிகாரி ஊடாக ஜனாதிபதி செயலகம் இருவருக்கும் திருமணம் செய்துவைத்து பிரசாரத்துக்கு வாய்ப்பாக இதனைக் காட்டியுள்ளது.

அத்தோடு தமது காரியத்தை நிறுத்திவிடாத இராணுவத்தினர் கிளி. மத்திய கல்லூரியில் தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் மாணவர்களை ஒன்று திரட்டி அவர்கள் மத்தியில் புதுமணத் தம்பதியரை விசேட விருந்தாளர்களாக அழைத்து அவர்களது அனுபவங்களையும் மாணவர்கள் மத்தியில் பகிரச் செய்தனர்.

அத்துடன் அவர்களைக் கௌரவிக்கு மாறும் இராணுவத்தினர் மாணவர்களைப் பணித்துள்ளனர். இவர்கள் ஒரு முன்மாதிரியான செயலைச் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவுக்குமாறும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரும் ஜனாதிபதி செயலகமும் திட்டமிட்டு செய்த இந்த நாடகத்தை தமிழ்ச் சமூகமும், மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. இதற்காக நலிந்த பிரிவு மக்களை சிங்கள ஆட்சியாளர்கள் கருவியாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சியில் இது போன்ற முயற்சிகள் பல இடம்பெற்றுவரு வதாகக் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாடசாலை மாணவிகளைக் குறிவைக்கும் இராணுவத்தினர் அவர்களைத் திருமணம் செய்வதற்குச் சம்மதம் வாங்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் தெரி விக்கப்படுகின்றது.

இராணுவ மயப்படுத்தப்பட்ட வன்னிப் பகுதியில் குற்றச் செயல்களும் பிறழ் நடத்தைகளும் அதிகரித்துவரும் நிலையில் மாணவர்கள் மத்தியில் தவறான தமிழ்க் கலாசாரத்துக்கு ஒவ்வாத கருத்துக்களைப் பரப்புவதும், திணிப்பதும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இது விடயத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் விழிப்பாக இருக்கவேண்டியது அவசியமாகின்றது. எத்தனை திருமணங்கள் நடந்தாலும் சுட்ட மண்ணும் பச்மண்ணும் ஒட்டியதாக இல்லை. பிரச்சினைகளும், முரண்பாடு களும் வலுக்கவேசெய்யும்

அரசு நேரிய வழியில் சென்று அரசியல் தீர்வைக் காண்பதற்குப் பதிலாகக் குறுக்கு வழிகளைக் கையாண்டு தமிழ் சமூகத்தின் இருப்பைச் சீர்குலைக்க முற்படுகிறது என்பதே அவர்களது செயற்பாடுகளிலிருந்து தெளிவாகிறது. *

நன்றி-உதயன் சூரியகாந்தி (05.02.2012)


புரட்டிப் போடும் ஞாபகங்கள்


நடுஇராத்திரியும்

15வயது சிறுவனும்

பேரிரைச்சல்... ஓட ஆரம்பித்த நிகேஷ் நிற்கவே இல்லை. சத்தம் அவனையே குறிவைத்துக் கலைத்தது. பங்கருக்குள் போக அவன் தயாரில்லை. காரணம் அவனோடு நேற்றுக் காலைவரை விளை யாடிக் கொண்டிருந்த புதிய நண்பனும் அவனது குடும்பமும் பங்கருக்குள்ளேயே அன்று மாலை மாண்டுபோன ஞாபகம்.

சற்றுநேரத்திலே செவிப்பறை முழங் கும்படியாக பெரும் சத்தங்கள். மின்னல் வேகத்தில் ஏதேதோ வானைப் பிழந்தன...

சிறிதுநேர அமைதியின்பின் முனகல் சத்தமும், அழுகுரல்களும்....இரத்தமும் சதையுமான காட்சிகள்...அம்மா!! என்ற சத்தத்துடன் திடுக்கிட்டு விழித்துவிட்டான் நிகேஷ்.

இதுவரை அவனது மனம் வன்னி இறுதிப் போரின் ஒரு பகுதியை திரை யிட்டுக்கொண்டிருந்தது... காட்சிகளைப் பாரத்து சகிக்கமுடியாமல் திடுக்கிட்டு விழித்தவனுக்கு அன்றிரவு நித்திரை மீண்டும் வரவேஇல்லை.

வன்னியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 12 வயதாக இருந்தபோது நிகேஷ் எதிர்கொண்ட காட்சிகளும் துன்பங்களும் இப்போது மனதில் காட்சிகளாகப் பதியப்பட் டுள்ளன.

இடப்பெயர்வின்போது சந்தித்துக் கொண்ட அவனது நண்பனும் குடும்பத்தி னரும் விமானக் குண்டுவீச்சில் இறந்து போக, அவர்களை அந்தப் பங்கருக் குள்ளேயே போட்டுமூடிவிட்டு வேறு இடத்துக்குச் சென்றபோது நிகேசுக்கு அந்த காட்சியும் சம்பவமும் பெரிதாகப் படவில்லை. காரணம் அடுத்து எங்கள் உயிர் என்பது இந்தச் சிந்தனைகளை அவன் மத்தியிலோ அல்லது இடம் பெயர்ந்து கொண்டவர்கள் மத்தியிலோ இருந்து நீக்கியிருந்தது.

இப்போது 10ஆம் தரத்தில்படிக்கும் நிகேஷ் மூன்றேமூன்று நாள்மட்டும் பழகிய தனது நண்பன் குடும்பத்தோடு மரணித்து விட்டதை மனதில் கொண்டு திரிகிறான்.

இருந்தாலும் அம்மா! என்று அலறிக்கொண்டு நித்திரையிலிருந்து எழுந் தவனை அவனது தாயார் என்னப்பன்! என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில் ஒன்றுமில்லை என்பதே.

வன்னிப்போர் முடிந்துவிட்டது. நாட்டில் அமைதி நிலை நாட்டப்பட்டுவிட்டது. தமிழ் மக்களுக்கு விமோஷனம் வந்து விட்டது என்று அரட் டிக்கொள்ளும் ஆட் சியாளர்களது கோணத்தில் நிகேஷின் கனவை எப்படிபார்ப்பது?

இப்படித்தான் தங்கள் உறவுகளை இழந்தவர்களும், தொலைத்தவர்களும், இறுதிப்போரை எதிர்கொண்டவர்களும் ஒவ்வொரு இர வையும் கழிக்கின்றனர் என்பதை எவர்தான் உணருவாரோ???

மரணச்சடங்கும்

ஒரு தாயின் புலம்பலும்

கொண்டாட்டங்கள் நடந்தால் போகா விட்டாலும் செத்தவீட்டுக்கு கட்டாயம் போகவேணும். இது எம்மில் பலபேரது அபிப்பராயம். துன்பத்தில் தோள்கொடுப் பதுதான் இந்த முயற்சியாக இருக்கவேண்டும்.

வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்த பலருக்கு விரக்தி கூட களியாட்டங்களை விலக்களிக்குமாறு பணிக்கின்றது.

வயதான ஒருவரின் மரணச் சடங்கில் ஒரு தாய் ஒப்பாரி சொல்லி அழுது கொண்டிருந்தாள். ""ஐயா! என்னவிட்டு போயிட்டியே! நான் என்னசெய்வேன்! அம்மா அழாமல் இருங்கோ நான் வந்திடுவன் எண்டு செல்லிட்டு என்னவிட்டு எங்கடா போய்ட்ட?.....'' என்று அவளின் புலம்பல்நீண்டது...

அந்த மரணச்சடங்குக்கு சம்மந்தமே இல்லாத இந்த ஒப்பாரி அவளின் மகன் போரில் கொல்லப்பட்டதையும் அவனுக்காக தான் ஒரு கடமைகூடச் செய்ய வில்லை என்பதையும் வெளிக்காட்டியது.

போருக்குப் பின்னர் எத்தனை தாய்மார் இப்படிப் புலம்புகிறார்கள் என்பதை யார் கருத்தில் கொள்கிறார்கள்?

தென்னிலங்கை அரசியல்வாதிகளும் சரி வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களும் சரி சுற் றுலா நோக்கிலேயே போர் நடைபெற்ற பகுதி களைப் பார்வையிடு கின்றனர்.

போதாக்குறைக்கு யாழ்ப்பாணம் வந்த இந்திய முன்னாள் ஜனாதி பதி அப்துல்கலாம் கூட கனவு காணுங்கள் என்று தான் சொல்லிவிட்டு சென்றார். இந்த மக்கள் காணும் கனவுகளும் , ஏக்கங்களுக்கும் எந்த வகையில் இலட்சியம் ஆவது? கனவுகளும் புலம்பல்களும் தொடர்கின்றன. தென்னிலங்கையின் கொக்கரிப்பும் தொடர்கிறது.


நன்றி-உதயன் சூரியகாந்தி (05.02.2012)

கிளிநொச்சி ""கொலை வெறி''


Why this kolaveri di பாடல் வெளியாகி அது பலரின் மத்தியில் பிரபலமாகிவிட்டது. பட்டி தொட்டி யெல்லாம் ஒலிக்கும் இந்தப் பாடல் தமிழை யும் ஆங்கிலத்தையும் கொலை செய்துள் ளதாகப் பேசப்படுகின்றது. இருப்பினும் இன்று கூடுதலான மக்கள் தாம் தமிழ் பேசுவதாக, ஆங்கிலத்தைக் கலந்து புது மொழி பேசுகின்றனர். அதுபோல ஆங்கில மொழிக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றுடன் கொலைவெறிப் பாடலை ஒப்பிட்டால் அது ஒன்றும் புதிதல்ல என்று எண்ணத் தோன்றுகிறது.

பாடல்கள் இயோடு வரும்போது எல்லோரும் தமக்கு இருக்கக் கூடிய இரசனை யுடன் அவற்றை நோக்குகின்றனர். இவை ஆளுக்காள் வேறுபடும். “Why this kolaveri diசுபாடலை "யூரியூப்' ஊடாக இதுவரை 39,529,223 பேர் பார்த்துள்ளனர். அதில் 220,252 பேர் தமக்குப் பிடித்திருக்கிறது என்றும் 12,804 பேர் தமக்குப் பிடிக்கவே இல்லை என்றும் கூறியுள்ளனர். ஏனையோர் பார்த்துடன் நிறுத்திவிட்டனர்.

இது தென்னிந்திய தமிழ் திரைப்படம் ஒன்றில் இடம்பெறும் பாடல் ஒன்றின் மக்கள் அபிப்பிராயத்தில் சிறுபாதி மட்டும்தான். கலை இரசனைக்காகத்தான் கொலை வெறி பாடப்பட்டது. காதலின் தோல்விக் காகக் கொலை வெறிபாடப்பட்டது. ஒரு பெண்ணின் அழகும் அவளின் குணமும் பற்றிப் பாடப்பட்டது. அதை அந்த மாத்திரத்திலேயேவிட்டுவிடலாம்.

ஆனால், நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி கொலை செய்யப்படுவதை எவ்வாறு பார்ப்பது? திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த முதன்மையான மொழியும் செம்மொழியும் எனப் போற்றப்படுவது தமிழ்மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ளது இந்த மொழி, கல்தோன்றி மண் தோன்றா முன்தோன்றிய மூத்த மொழியாகப் பேசப்படுகின்றது. இதன்மீது பொறுப்பற்றவிதமாக நடந்துகொள்வதென்பது அனாகரிகமானது.

எம்நாட்டில் பாரம்பரியங்களைக் கொண்ட தமிழ் மொழிக்கு இப்போது நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதன்மீது ஆட்சியாளர்களுக்கு கொலை வெறி ஏற்பட்டுள்ளது. அரசு தகவல்களை உத்தியோகபூர்வமாக வெளியிடும் வர்த்தமானிப் பத்திரிகை, துறைசார் திணைக்களச் சுற்றுநிருபங்கள், காட்சிப் பலகைகள், விளம்பரப் பலகைகள் எல்லா வற்றிலும் தமிழ்மொழி கொச்ப்படுத்தப்படுகின்றது.

அரசுமட்டும் சிங்களத் தலைவர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதல்ல. காலத்துக்குக் காலம் ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் அரசியல் வாதிகளும் செயற்பட்டுள்ளனர். இப்போதும் ஒட்டி உறவாடுகின்றனர். அரசு கட்டமைப்பில் பெரும்பாலான துறை களில் தமிழ் அறிந்த தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். இந்தத் தோரணை உயர்மட்டத் திலிருந்து கீழ் மட்டம்வரை தொங்குகிறது.

அவர்கள் சொன்னால் சரி என்று தலையாட்டிப் பழகிவிட்டதால் பிழையானதைக் காட்டினாலும், சரி என்று தலை அக்கும் சக்திகளாக தோரணைகள் மாறிவிட்டன.

போதாக்குறைக்கு இலாபநோக்கிலான நிறுவனங்கள், வர்த்தக வங்கிகளும் தமிழைக் கொலை செய்வதில் ஆர்வமாக உள்ளன. விளம்பரத்துக்காக இவற்றால் அமைக்கப் படும் பெயர்பலகைகளில் இந்த வண்டவாளம் புலப்படுகின்றது. யாழ்ப்பாணத்து வீதிகளில் இந்த அலங்கோல அலங்காரங் களை நாம் தினமும் பார்க்கிறோம்.

கிளிநொச்சி நகர்ப் பகுதியில் கூட்டுறவு மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சு நெல் வர்த்தக நிலையம் ஒன்றை அண்மையில் திறந்துவைத்தது. விவசாய நிலப் பகுதியில் இந்த வருகை மகிழ்ச்சியானதுதான். ஆனால் அதன் பெயர்பலகை அமைந்ததுதான் மக்களின் நெல்சந்தைப்படுத்தும் கனவையும் கலைத்தது .

களஞ்சியசாலை கட்டடத் தொகுதி கிளிநொச்சி என்ற வசனம் "கனஞ்சியசாலைக் கட்ஷடத்தொஞதி கிலிநொச்சி' என்று எழு தப்பட்டுள்ளது. டீஜிற்றல் தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த பெயர்பலகை யில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களது திருவுருவங்களும் பொறிக்கப்பட்டுள் ளன.

இதுமட்டுமல்ல கிளிநொச்சியில் அமைந்துள்ள தொலைபேசி நிறுவனம் ஒன்றின் பெயர்ப் பலகையில் கிளிநொச்சிக்கு பதிலாக "கினிநொச்சி' என எழுதப்பட்டுள்ளது. கரைச்சி பலநோக்கு கூட்டுறவுச்சங் கத்துக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றில் ஆங்கிலத்தில் A9 வீதி எனவும் தமிழில் "யு 9' வீதி எனவும் எழுதப்பட்டுள்ளது.

""எவ்வளவு காச் செலவழிச்சு செய்து போட்டினம் இனி. எப்பிட மாத்திறது? பிழை யெண்டு சொன்னாலும் எங்களில அவையள் வச்சிருக்கிற நம்பிக்கை போயிடும். ஏன் எங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? என்னண்டாலும் செய்யட்டும்'' என்று பொறுப்புக்கூறவேண்டியவர்கள் விலக தமிழ் தெரியாதவர்கள் இன்னும் தமிழைக் கொச்ப்படுத்தியவண்ணமே உள்ளனர்.

எல்லா விடயத்திலையும் அவையள் தானே முடிவெடுக்கிறது. பிறகு எப்படி கொலை வெறிய மாத்தமுடியும். முடிஞ்சா பக்கப்பாட் டுக்கு தந்தனத்தோம் தான் பாடணும்.. *

நன்றி -உதயன் சூரியகாந்தி(29.01.2012)