Sunday, November 3, 2013

சிங்களத்தில் பேசுங்கோ..


போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவ ரைக்கும் பயங்கரவாதம், பிரிவினை என்று பேசப்பட்ட விடயங் கள் இல்லையயன்றும் புதிதாக ஜன நாயக நாடொன்று பரிணமித்து இருப் பதாகவும் இலங்கை அரசு சொல் கிறது. ஜனநாயக நாட்டுக்கு இருக்க வேண்டிய பண்புகள், அடிப்படைத் தகுதிகள் என்ற நிலைப்பாட்டில் இலங்கையை இந்த தராசில் எந்தப் பக்கத்தில் வைப்பது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
போருக்குப் பின்னர் வடக்கு, கிழக் கில் அமைதி நிலை ஏற்படுத்தப்பட் டதாக அறிவிக்கப்பட்ட சூழலில் இரண்டு  மாகாணங்களுக்குமே தேர்தல் நடைபெற்றது. கிழக்கு அரசின் வசமாக வடக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ளது.

ஆனால் இந்திய இலங்கை உடன் படிக்கையின் பிரகாரம் ஏற்படுத் தப்பட்ட அரசமைப்பின் பதின்மூன் றாவது திருத்தத்தின் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை.
இதனை விட மாகாண சபைக்கு இருக்கக்கூடிய சில அதிகாரங்களை மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட சில வழிமுறைகள் மூலம் பறித் தெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பொலிஸ் அதிகாரம் மறுப்பு
வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்க ளின் மொழி, கலை, கலாசார பண் பாட்டு  முறைகளை புரிந்து கொள்ளக் கூடிய வகையில் பொலிஸ் நிர்வாகம் அமைய வேண்டும் அதனூடாகவே அமைதியான சூழலை உருவாக்க முடியும். மாறாக தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு எந்த விதத்திலும்   பொருத்தமற்ற சிங்கள மொழி பேசுபவர்கள் தொடர்ந்தும் பணியாற் றுவது இங்கு ஜனநாயக சூழலை ஏற்படுத்துவதற்கு தடையாக இருக் கும். எனவே வடக்கில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப் பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர்  க.வி.விக்னேஸ் வரன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை யும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்வதற்கு தமது கலாசாரத்தை புரிந்து கொள்ளக் கூடிய ஒரு பிரதி நிதியைத் தேடுகின்றனர்.
கருத்து வெளிப்பாடு, பிரச்சினை களை ஒளிவின்றி பேசுதல், நீதி கிடைக் கும் என்ற நம்பிக்கையை கட்டியயழுப் புதல் போன்ற காரணங்களுக்காக தமிழ் மக்கள் தமக்கு சார்பானவர்களையே ‡ பரிச்சயமுடையவர்களையே எதிர் பார்க்கின்றனர்.
ஆனால் வடக்கில் நீண்ட காலமாக இந்தப் பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
பொலிஸ் நிலையங்களில் தமது பிரச்சினைகளை முறையிடச் செல் வோர் மொழி, கலாசாரம், பண்பாடு போன்ற விடயங்களில் நெருக்கடி களை எதிர்நோக்கு கின்றனர்.
சாட்சி கூறச்  செல்பவர்கள் ஏளனம் செய்யப்படுவது, முறைப்பாடு செய்ப வர்கள் அலைக்கழிக்கப்படுவது, அலட்சியப்படுத்தப்படுவது மொழித் தொடர்பாடல் புரியாததால் இரண்டு தரப்பினருமே வெவ்வேறான அர்த் தங்களை கொள்வது என்று மொழி நிலை முரண்பாடுகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

பொலிஸ் பேச்சாளரின் மறுப்பு
புதிதாக தமிழ்ப் பொலிஸாரை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் வடக்குக்கு இல்லை. ஒரு தொகுதி தமிழ் பொலிஸார் ஏற்கனவே இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளனர். தவிர தமிழ் தெரிந்த பொலிஸார் அநேகமானவர் அங்கு கடமையாற்றுகின்றனர். இதற்கு மேலதிகமாக ஆளணிகளை பெருக்க வேண்டிய அவசியம் அங்கு இல்லை. வடக்கில் உள்ள எல்லா பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் தெரிந்த பொலிஸார் உள்ளனர். அங்கு தமி ழில் முறைப்பாடு செய்யவும் முறைப் பாட்டுப் பிரதியை தமிழில் பெற்றுக் கொள்ளவும் வசதிகள் இருக்கின்றன.
எனவே முதலமைச்சர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பொலிஸ் பேச்சாளர் மறுத்திருக்கிறார். 

தமிழ் தெரியாத பொலிஸார்

இரு தரப்பு வாதங்கள் இப்படி இருக்க இன்றும் வடக்கில் தமிழ் தெரியாத பொலிஸார் கடமையில் இருக்கின் றனர்.
ஓர் இடத்தில் நடக்கும் வன்முறை சம்பவம் தொடர்பில் அதை அவதா னிக்கும் ஒருவர் உடனடியாக தொலை பேசி மூலம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்க முடியாத நிலை காணப் படுகிறது.
சமூக அக்கறை காரணமாக பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவரிடம் "" தமிழ் தெரி யாது. சிங்களத்தில் பேசுங்க'' என்று கூறுகிறார் பொலிஸ் அதிகாரி என்று கவலையுடன் தெரி விக்கிறார் அந்த அக்கறைவாதி.
இன்றும் பல பொலிஸ் நிலை யங்களில் சிங்க ளத்தில் முறைப் பாடு கள் பதிவு செய் யப்படுகின்றன. முறைப்பாடு செய்ய போகும் ஒருவர் தமிழ் தெரிந்த பொலி ஸார் வரும் வரை பொலிஸ் நிலை யத்தில் காத்தி ருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வீதிகளில் போக் குவரத்து ஒழுங்கு முறைகளை சோதனையிடும் சிலருக்கு தமது நிலைப்பாட்டை சரியாக விளங்கப்படுத்த முடியாமல் தமிழ் மக்கள் திண்டாடுகின்றனர்.
அனுமதிப் பத்திரத்துடன் தமது தேவைகளுக்காக காட்டு மரங்கள் , கட்டடப் பொருள்கள் என்பனவற்றை கொண்டு செல்லும் மக்களை இடை மறிக்கும் பொலிஸார் தேவையற்ற வகையில் அணுகுகின்றனர். இது இலஞ்சம் வரை செல்கிறது. வன்னிப் பகுதியில் பொலிஸார் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மக்கள் வெளிப்படுத்திய சம்பவங்கள் பத்திரிகைகள் வாயிலாக அறிய முடிகிறது.

பொலிஸ் கடமையில் இராணுவம்
இவற்றை விட பொலிஸார் செய்ய வேண்டிய பல வேலைகளை வட பகுதியில் இராணுவத்தினர் செய்யும் நிலை அவதானிக்கப்படுகிறது.
விபத்து நடைபெறும் இடம் அல்லது குழு மோதல், பிரச்சினைகள் இடம் பெறும் இடங்களுக்கு முதலில் இரா ணுவத்தினரே வருகின்றனர். இவர் கள் வந்தவுடன் தாமே நீதிபதிகள் போலவும், பொலிஸார்கள் போல வும் நடந்து கொள்கின்றனர். தமக்கு வேண்டியவர்கள் எனில் உடனடி யாக அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி பாதிக்கப்பட் டவர்களை மிரட்டி வெளியேற்றி விடு கின்றனர். குறிப்பாக தென்பகுதியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணி களின் வாகனங்களின் தறிகெட்ட ஓட்டத்தால் விபத்துக்கள் நேருகின் றன. ஆனால் சம்பவ இடத்திற்கு வரும் இராணுவத்தினர் துப்பாக்கி முனையில் காரியத்தை சாதித்து விடுகின்றனர்.
தடயங்களை அழித்தல், குற்றத்தை நியாயப்படுத்தல், குற்றவாளிகளை தப் பிக்கவிடுதல் போன்ற செயற்பாடு களில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.
பாதுகாப்பு என்ற போர்வையில் வீதியில் செல்பவரை இடைமறித்து தொந்தரவு செய்தல், பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.
முல்லைத்தீவில் கடை உரிமையா ளர் ஒருவர் தனது பாரவூர்தியை கடைக்கு முன் நிறுத்தி வைத்ததற் காக இராணுவத்தினரால் அச்சுறுத் தப்பட்டுள்ளார். மறுநாள் காலை கடையை பூட்டி விட்டு விசாரணைக்கு வரு மாறும் அழைக்கப்பட்டிருக்கிறார். இது கடந்த வாரம் முல்லைத்தீவில் இடம்பெற்ற சம்பவம்.
இப்படி பொலிஸாருக்கு உரித்தான கட மைகள் பலவற்றை வட பகுதியில்  இராணுவத்தினர் செய்வதை அவ தானிக்க முடிகிறது.

மக்களுக்கு அச்சுறுத்தல்

ஜனநாயக   நாட்டில் பொலிஸ் நிர்வா கம் துப்பாக்கிகள் அற்ற சாதாரண மனித பண்பு கொண்ட நிர்வாக முறைமை. இங்கு மக்கள் பயமின்றி  சட்ட திட்டங் களுக்கு கட்டுப்பட்டு ஒழுகுவர். ஆனால் இலங்கையில் அப்படி ஒரு நிலை இல்லை. பொலிஸாரும் இரா ணுவத்தினரை போன்று அடக்கு முறைவாதிகளாக தம்மை அறிமுகப் படுத்திக் கொள்கின்றனர். இதனால் தற்போதும் பொலிஸ் மற்றும் இரா ணுவத்தினரை மக்கள் எதிரிகளாக நோக்குகின்றனர்.

நிலைமை மாற வேண்டும்

வடக்கில் அதிகார தொனியிலான பொலிஸ் நிர்வாகம் மாற்றப்பட்டு மக்கள் இயல்பாகச் சென்று தமது பிரச்சினைகளை முறையிட்டு தீர்த் துக் கொள்ளும் நிலை ஏற்படுத்தப் பட வேண்டும்.
ஒரு சம்பவம் தொடர்பாக சாட்சி சொல் பவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மாறாக அவர்களைத் தொந்தரவு செய்வதன் மூலம் சாட்சியாளர்கள் சம்பவம் நடைபெற்ற இடங்களி ருந்து நழுவிச் செல்லும் முறையே தோற்றுவிக்கப்படும். தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள் இருபத்தி நான்கு மணி நேரமும் கடைமை யில் ஈடுபடுத்தப்பட வேண்டும். முறைப் பாடு பதிவு செய்யச் செல்பவர் தமிழ் பேசும் அதிகாரிக்காக காத்திருக்கும் நிலைமை மாற்றப்பட வேண்டும்.

தமிழ்ப் பொலிஸாரை
இணைத்துக் கொள்ளல்

பொலிஸ் தரப்பு தமிழ் இளைஞர் யுவதிகளை சேவையில் இணைத் துக் கொள்வதற்கு விரும்பவில்லை. இதுவே பொலிஸ் பேச்சாளரின் கருத் தில் இருந்து வெளிவருகிறது.
ஆனால் இந்த மனோநிலை மாற்றப் பட வேண்டும். நல்லிணக்கம் ஏற் படுத்தப்பட வேண்டுமாயின் நிர் வாக கட்டமைப்புகளிலும் மாற்றீட்டு கொள்கைகள் அவசியம்.
அதாவது தமிழர்களுக்கு அதிகாரங் களை வழங்குவதால் நெருக்கடி ஏற் படும் என்ற இனத்துவ எண்ணக் கருவை விலக்கி மாகாண அதிகாரங் களுக்கு ஏற்புடையதாக நிர்வாக கட்ட மைப்பை செயல் உரு பெற செய்ய வேண்டும்.

கருத்துக்கு எதிர்க் கருத்து
வட மாகாண சபை இயங்க ஆரம் பித்தது முதல்  சபையால் வெளியி டப்படும் ஒவ்வொரு கருத்துக்கும் அரச தரப்பில் இருந்து எதிர்க் கருத்தே வெளிவருகின்றது. இந்த நிலை எதிர்காலத்தில் நெருக்கடியையே  உருவாக்கும். தமிழ்த் தரப்பு தமக் கான உரிமை விடயங்கள் வலு வாக  இருக்க வேண்டும் என்று விரும் புகின்றது.
அதே சமயம் தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகளை வழங்க அரச தரப்பு சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
ஒருவர் கூற அதற்கு மறுப்பு கூறுவ தற்கு காத்திருப்பது அபாயத்தின்  விளிம் புகளுக்கே அழைத்துச் செல்லும்.

நன்றி சூரியகாந்தி(03.11.2013)

Monday, October 28, 2013

உயிர் பறிப்புக்கு யார் காரணம்?

சதீஸ்குமாரின் எதிர்கால கனவு தட்டா தெருச்சந்தியில் கலைந்துபோயிருக்கிறது. அந்த நிமிடம் வரை எத்தனையோ ஆசைகளைக் கொண்டிருந்த அவனது பயணத்தில் இணை பிரிந்து போயிருக்கிறது. திருமணம் முடித்து ஏழு மாதங்களேயான சதீஸ்குமார் கீர்த்தனா மீது வைத்திருந்த பாசம் தட்டாதெருவில் அவள் குற்று யிராய் கிடக்கையில் கொட்டித் தீர்த்தது. பார்ப்பவர்கள் மனதை பிசைந்த அந்தக் கொடூர விபத்துக்கு யார் காரணம்? யார் காரணமாக இருந்தால் என்ன போன உயிர் திரும்பிவந்து விடுமா?
ஆசிரியரான சதீஸ்குமாரும் மனைவியும்
பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிந்தனர். இரவு 10 மணி இருக்கும் யாழ்.நகரப்பக்கம் இருந்து கே.கே.எஸ். பிரதான வீதியூடாகச் சென்ற இவர்கள் தட்டா தெருச்சந்தியில் நல்லூர் வீதிக்குத் திரும்பியுள்ளனர்.
கிட்டத்தட்ட 20 மீற்றருக்கு முன்பாகவே இவர்களது மோட்டார் சைக்கிள் நல்லூர் வீதிக்குத் திரும்பும் பக்கமாக செலுத்தப் பட்டிருக்கிறது. அப்படியாயின் பின்னே வரும் வாகனங்கள் மோட்டார் சைக்கிள் நகர்வை கருத்தில் கொண்டு தமது வழித்தடத்தைத் தீர்மானித்திருக்க வேண்டும்.
இவை எல்லாம் சிறு பொழுதில் வேறு விதமாக நடந்தேறிவிட்டன. வீதியின் முக்கால் பங்கைக் கடந்துவிட்ட மோட்டார் சைக்கிளை துரத்திவந்து வேண்டுமென்றே இடித்ததுபோல் விபத்து நடந்திருக்கிறது.

இராணுவ பஸ்
மோட்டார் சைக்கிளை மோதியது இராணு வத்தினரை ஏற்றிவந்த பஸ். இந்த பஸ் பின் பக்கமாக மோட்டார் சைக்கிளை மோதியிருக் கிறது. அதுவும் பஸ் செல்லவேண்டிய பக்கத் துக்கு எதிர்ப்பக்கமாக வைத்தே மோதியுள்ளது. பஸ்சாரதி மீதே முழுப்பிழையையும் சுமத்து கின்றனர் சம்பவத்தை நேரில் கண்டவர்கள். யார் மீது பிழை இருப்பினும் ஒர் உயிர் காவுகொள்ளப்பட்டுவிட்டது. இதற்கு எவரைத் தண்டித்தாலும் தீர்வுகிட்டாது.

ஆபத்தான அமைவிடம்
வீதி அகலிப்புக்குப் பின்னர் தட்டாதெருச் சந்தி ஆபத்துக்கள் நிறைந்ததாக மாறியுள்ளது. அதாவது கே.கே.எஸ்.பிரதான வீதி மானிப் பாய் வீதி நல்லூர் வீதி என்பன இடைவெட்டு கின்றன. இவை நேருக்கு நேராக இன்றி சற்று முன்னும் பின்னுமாக அமைந்திருப்பது ஆபத் தாக உள்ளது. குறிப்பாக வீதி விதிமுறைகளை சிலர் சற்றேனும் கடைப்பிடிக்காமல் இந்தக் கடவையைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மானிப்பாய் வீதியில் இருந்து கே.கே.எஸ். வீதிக்கு உட்புகும் ஒருவர் நல்லூர் வீதிக்கு செல்லும்போதும், நல்லூர் வீதியில் இருந்து மானிப்பாய் வீதிக்குச் செல்லும் போதும் வீதி விதிமுறை எவற்றையும் சிலர் பின்பற்று வதில்லை. இதனால் இந்தச் சந்தியில் அடிக்கடி போக்குவரத்துத் தடங்கல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

சமிக்ஞை இல்லை
வீதிப் புனரமைப்பு பணிகள் நீண்ட காலமாக பூர்த்திசெய்யப்படாத நிலையில் பிரதான வீதி யில் வீதிக்குறியீடுகள் எவையும் போடப்பட வில்லை. இதனால் வெளியிடத்தில் இருந்து வரும் சாரதிகளுக்கு வீதி அமைப்பை அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. இதனால் புதிய வீதியில் பறந்துவரும் இவர்களது கால்கள் பிறேக்கில் முட்டுவதில்லை. இதனாலும் விபத் துக்கள் தவிர்க்கமுடியாததாகின்றன.
இராணுவ பஸ்சும் வேகக்கட்டுப்பாட்டை மீறிக் கட்டுப்படுத்தமுடியாத நிலையிலேயே தமது தடத்துக்கு எதிர்ப்பக்கம் சென்றுள்ளது.

சாட்சிக்கு மறுத்த பார்வையாளர்
சம்பவம் நடந்ததும் பொலிஸாரும் இராணு வத்தினரும் குவிந்தனர். சந்தி நிறைந்த சனக் கூட்டம். பஸ்ஸிலும் இராணுவத்தினர். அதை விட சி.ஐ.டி. என்று கூறும் சில சிவில் சிக்கல் களும் நின்றன.
இதன்போது பொலிஸார் சம்பவத்தை நேரில் கண்டவர்களை விசாரிக்க பொலிஸார் அழைத்த போது எவரும் முன்வரவில்லை. தமக்கு இத னால் ஆபத்துவரும், பொலிஸாருடன் இழுபட வேண்டும் என்பதற்காக அவர்கள் இந்தப் பொறுப்பில் இருந்து நழுவிவிட்டனர். ஒரு ஆசிரியரைத்தவிர.
இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் பலர். இவர்கள் எவரையும் தண்டிக்கமுடியாது. அப் படி தேடித்தேடித் தண்டித்தாலும்கூட பிரிந்த உயிரைப்பெற்றுவிடமுடியாது.
குற்றம் இழைத்தவர் யார் என்ற கேள்விக்கு எல்லாத்திசைகளிலும் விரல்கள் நீளும். கண்ணீர் துயரமும் நம் உயிருக்கு நாமே பாதுகாப்பு ஆனாலும் தேடிவரும் வீண் இழப்புக்களை தவிர்ப்போம்..

நன்றி சுடர்ஒளி 09-15.ஒக்ரோபர் 2013

தந்தி அறுந்த வீணை


நடைபெற்றுமுடிந்த வடமாகாண சபைத் தேர்தல் பல மறந்துபோன கதைகளைப் புதிப்பித்திருக்கின்றன. தாம் எங்கு இருக் கிறோம். எதைச் செய்கிறோம் என்ற சிந்திப் பையும் தூண்டியிருக்கின்றது.
கண்கெட்ட பின் சிலர் சூரிய நமஸ்காரத் துக்குத் தயாராகியுள்ளனர்.
அஸ்த்தமனத்தின்போது விடியலுக்காகவும் விடியலின்போது அஸ்த்தமனத்துக்காகவும் அழுத சிலரது புருவங்கள் மக்களால் திறக்கப் பட்டுள்ளன.
தொழில் நுட்பத்தின் பாதிப்பு வடக்கு மக் களை கண்திறக்கவைத்திருக்கிறது என்று சொல்ல வேண்டும். புத்திசாதுரியமான சிந்தனை களை மக்கள் கொண்டுள்ளனர். சொல்லப் போனால் பத்துவருடங்களுக்கு முன் இருந்த வடபகுதி மக் களுக்கும் இப்போதுள்ள மக்களுக்கும் நிறைய வேறுபாடு காணப்படுகிறது.
அறிவியல் வளர்ச்சிக்கு இவர்கள் இடமளித் திருக்கிறார்கள். குறிப்பாக அரசியல் சாக்கடை களுக்குள் இருந்து மீள்வதற்கான இவர்களது துணிச்சலும் சிந்தனையும் இதைப் பறைசாற்று கின்றன.

தவறான கணிப்பு
நீண்டகாலப்போர் மக்களை நிலைகுலையச் செய்ய அதை சாதகமாகக் கொண்டு சிலர் அரசி யல் நகர்வை மாற்றியிருந்தனர். இதுவரை அடி நாதமாக இருந்த கொள்கைகளும் கோட்பாடு களும் கைவிடப்பட்டு மக்களை சலுகை சார்ந்த மனவிருப்புமாற்றத்துக்கு கொண்டு செல்ல இவர்கள் முயற்சித்திருக்கின்றனர்.
ஆரம்பத்தில் இவர்களது சூழ்ச்சி நகரல்லாத கிராமமட்டத்தில் சாத்தியமானதை இவர்கள் உணர்திருந்தனர். குறிப்பாக கரையோரப் பகுதி கள், வளர்ச்சி குன்றிய கிராமங்கள் இவர் களது மாற்று அரசியலுக்கு வலுச்சேர்த்தன.
சிறு வெற்றிகளை கொண்டு ஏமாற்றுவாதிகள் பொது முடிவுக்குவந்தனர். அதுதான் சலுகை அரசியல்.

சமூகமயமாக்கம்
கடந்த ஓர் இரண்டு சதாப்தம்வரை பண் டிகைகள், கோயில் திருவிழாக்கள், கொண் டாட்டங்கள் வாயிலாக சமூகமயப்பட்டுக் கொண்ட மக்கள் இன்று அதிலிருந்து மாற்றம் பெற்று சமூக வலைத் தளங்கள் ஊடாக சமூ கத்தைப் புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டி ருக்கிறது.( நன்மை,தீமைக்கு அப்பால்) அரசியல் பெரு எழுச்சி கண்டுள்ளது.
தவறான தகவல்களுடன் சலுகை, ஆசை வார்த்தை என்று மக்களை நம்பவைத்து அவர் களை தமது ஆதரவாளர்களாகக் காட்டி, தமது பலத்தை வெளிக்கொணர்ந்த சில அரசியல் வாதிகள், பதவிகளைப் பெற்றதும் தாம் முன்னர் செய்த அரசியலை மறந்து, அல்லது  நியாயப் படுத்திக்கொண்டு அடுத்த சந்ததியிடமும் அதை விற்பனைக்காக அறிமுகப்படுத்த முயற்சித் துள்ளனர். இது முற்றிலும் தவறானது.
காரணம் இவர்கள் நம்பிய மக்கள் இன்று உலகத்து மூலைமுடுக்கெல்லாம் சென்று வரு கின்றனர் என்பது புரியாமையே.
நடந்துமுடிந்த தேர்தலில் இரு ஆசனங் களைக் கைப்பற்ற பெரும்பாடுபட்ட கட்சிக்கு இன்று ஞானம் பிறந்திருக்கிறதாம்.

மறக்கப்பட்ட சின்னம்
கடந்தவாரம் அவசர கூட்டம் நடத்திய அமைச்சர் ""இனி நாங்கள் அதில கேட்பம்'' என்று தீர்மானிச்சவையாம். ஈழமக்களுக்கான ஜனநாயகப்போராட்டம்  மீள ஆரம்பிக்கப் படுகிறது.
சலுகைக்கும் உரிமைக்கும் இடையிலான கயிறிழுப்பு முடிவடைந்ததும் இந்த முடிவு மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை உண்டுபண் ணியுள்ளது. இவர்களது வேடம் இன்னும் நிறம் மாறவுள்ளது. இன்னும் பயங்கரங்களைத் தரப் போகிறது என்றதே மக்கள் பயம்.
கடந்த தேர்தலில் ஜனநாயக விரோத நட வடிக்கைகள் பல அரங்கேற்றப்பட்டன.இவை இயலாமையின் வெளிப்பாடுகள். தாம் வெல்ல வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் இப்போது தமது பாதை பிழைத்திருப்பதை உணர்ந்திருக்கின்ற னர்.
பாதையைப் புனரமைக்க எத்தணை காலம் எடுக்குமோ.....லயம், நாதம் பிழைத்திருக் கிறது...... சூரியன் இருக்கும் திசை தெளி வில்லை. உத்தேசப்படி நமஸ்காரம்! நமஸ் காரம்!! நமஸ்காரம்!!!.()

நிறுத்து: உயிராபத்து!


அபிவிருத்தி பற்றிய விமர்சனங்களுக்கு அப்பால் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் கிளிநொச்சிக்கு ரயில் வந்திருக்கிறது. இது பொதுப்போக்குவரத்தின் திருப்புமுனைதான். அவசரக்காரர்களின் தேவைகருதி அரைகுறை பணிகளுடன் வரவழைக்கப்பட்டிருக்கும் ரயில் சேவை மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.
சில இடங்களில் சமிஞ்ஞைகள் இருந்தாலும் பலஇடங்களில் அவை அமைக்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து தவிர்க்கமுடியாததாகியுள்ளது.
குற்றவாளிகள் என்று அரசுப்பக்கம் கைநீட்டி னாலும் தவறுகள் பொதுசனங்கள் மீதும் இருக்கிறது.

புதிய வரவு
ரயில் வடக்குக்கு நீண்ட காலத்தின்பின் புதிய வரவாக உள்ளது.இதனால் ரயில் போக்கு வரத்தின்போதான விதிமுறைகள் கட்டுப்பாடு கள் குறித்த அறிவு பெரும்பாலான மக் களிடத்து இருப்பதை எதிர்பார்க்கமுடியாது.
எனவே மக்களை விழிப்படைய வைக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளது கடமையாகும். இல்லாதவிடத்து மக்களின் கட்டுமீறல்கள் உயிராபத்துக்களை ஏற்படுத் தும். அதன்பின் ஆர்ப்பாட்டம் நடத்து வதில் எந்த அர்த்தமும் கிடையாது.
கிளிநொச்சியில் கடந்த வாரம் இடம் பெற்ற சம்பவம் இதற்கு நல்ல உதாரணம்.
ரயில் வரவுக்காக கனகபுரம் வீதியில் இரு பக்கமும் ரயில் கடவைகள் மூடப்பட்டி ருந்தன. "என்ன குறுக்கால போவார் கம்பிய றோட் டில் போட்டிருக்கிறாங்கள்' என்பதுதான் பலபேரது நினைப்பு. நினைப்பு மட்டுமல்ல அதை தாண்டியும் சென்றுவிட்டனர். ரயில் வந்துகொண்டிருந்தது. ஐந்து நிமிடங்களில் கனகபுரம் வீதியை ரயில் கடக்கவேண்டும். நல்லவேளையாக கடமையிலிருந்த பொலிஸார் விரைந்து செயற்பட்டு பெரும் விபத்தை தவிர்த்துக்கொண்டனர்.

குறுக்கு வீதிகள்
ஏd9 வீதிக்கு மேற்குப்பக்கமாக ரயில்பாதை செல்கிறது. இந்தபாதையை இடையிடையே கிராமப்புற வீதிகள் குறுக்கறுக்கின்றன. இவற் றுக்கான பாதுகாப்பு கடவைகள் முழுமைப் படுத்தப்படவில்லை.
பாதுகாப்பு கடவையையே மீறிச் செல்லும் மக்கள் பாதுகாப்பற்ற கடவையில் பொறுமை காப்பார்களா என்ன?

மக்கள் பொறுப்பு
விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமாக ரயிலையோ,அதிகாரிகளையோ உடனடியாகக் குற்றம்சாட்டிவிடமுடியாது. பொதுமக்கள் தான் பொறுப்புடனும், விழிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
பரீட்சார்த்த சேவையிலேயே கிளிநொச் சியில் ஒரு பலியயடுப்பு நிகழ்ந்திருக்கிறது.இதை மக்கள் நினைவில்கொள்ளவேண்டும்.
தற்போது கிளிநொச்சிவரை ரயில் சேவை இடம்பெறுகிறது. தினமும் மூன்று சேவைகள். நேர அட்டவணைப்படி குறிப்பிட்ட கட வைகளைத் தாண்டிச்செல்லும் நேரத்தை மக் கள் அவதானித்துக்கொள்ளவேண்டும்.
அதிகாரிகளது அறிவிப்பை முந்திக்கொண்டு, மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த இதுவே சாத்தியம்.
ரயில்பாதைகளில் குழந்தைகளை விளை யாடவிடுவது, சிறுபிள்ளைகளைகளையும் முதி யவர்களையும் தனியே ரயில்பாதையை கடக்க விடுவது, ரயில் வருவதற்கான சமிஞ்ஞை விளக்கு களை அலட்சியம் செய்வது போன்ற காரியங் கள் உயிராபத்தை உண்டுபண்டும். கண்ணி மைக்கும் நேரத்தில் விபத்து நடந்து முடிந்து விடும். அதன்பின் ஏங்குவதில் பயனில்லை. தமது உயிரைப்பாதுகாத்துக்கொள்ள ஒவ் வொருவரும் அக்கறை கொள்ளவேண்டும். இது பொது விழிப்புணர்வாகிவிடும். புதிய வரவை இழப்புக்கள் இன்றி வரவேற்போம்.

நன்றி சுடர்ஒளி 18-24.09.2013

கணக்குக்காட்டல்


அபிவிருத்திப் புள்ளிவிவரங்களுடன் வந்த அரச அதிபர்கள்

"நான் வந்திருப்பதன்நோக்கம் ஐ.நாவின் கொள்கைகள் எல்லா மட்டங்களிலும்  நடை முறையில் உள்ளதா என்பது குறித்து ஆராய் வதற்கு, இலங்கையின் வடக்கு கிழக்கில்  வாழும் மக்கள் அனுபவித்துக் கொண்டி ருக்கும் மனித உரிமைகள் குறித்து  தரவு சேகரிப்பதற்கு' பொது நூலகத்தில் நடை பெற்ற நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய  நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.அவர் இப்படி ஒரு கருத்தை கூறுவதற்கு காரணம் எங்கள் அதிகாரிகள் தான்.

பொருளாதார முன்னேற்ற அறிக்கை

நவநீதம்பிள்ளையை உலக பொருளாதார, அபிவிருத்தி ஆய்வாளராக நினைத்து ஏகப் பட்ட  பைல்களுடன் வந்திறங்கிய வடமா காண அரச அதிகாரிகள்,போருக்குப்பின்னர் கண்டுள்ள  அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து மல்ரி மீடியா புரஜெக்ரர் மூலம் "பிரசன்ரேசன்'  நடத்தினர். எல்லாவற்றையும் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தார் நவி.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்தின் பிரகாரம்  இலங்கையில் மனிதஉரிமைகள் விட யத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து  ஆராயும் பொருட்டு ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு  பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவர் தனது நேரடி அவதானிப் புக்காக வடபகுதியை தேர்ந்தெடுத்தார்.  குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட பகுதியை அவதானிப்பது அவரது நோக்கமாக இருந்தது.
கிட்டத்தட்ட போர் இடம்பெற்ற இடத்தை நவிப்பிள்ளை பார்வையிட்டாரா என்பது  சந்தேகமே. ஏனென்றால் உண்மையில் போர் நடைபெற்ற இடங்கள் விசேடமாக  உருமறைப் புச்செய்யப்பட்டுவிட்டன நவி வருகைக்கு முன் னரே. அதனால் அவரை  ஆச்சரியப்படுத்து மளவுக்கு ஒன்றும் இருக்கவில்லை. பதிலாக அரச அதிகாரிகள்  நடந்துகொண்ட விதமே அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
வடக்கு ஆளுநர்,செயலர் உட்பட ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த அரச அதிபர்களும்  வடக்கில் நடைபெற்ற, நடைபெறும் அபி விருத்தி வேலைகளை விளக்கினர்.
வடக்கின் வசந்தம், மஹிந்தோதைய அபி விருத்திகள் குறித்து ஜனாதிபதி, அமைச்சர் களது  வர்ணப்படங்களை பின்னணியாகக் கொண்ட "சிலைற்றுகள்' விரிந்து கொண்டி ருந்தன.
"ஓ! அப்படியா?' என்று பார்த்துக்கொண் டிருந்தார் நவி.
ஆர்வத்தின் மிகுதி ஒவ்வொரு அரச அதிகாரிகளது முகத்திலும் தெரிந்தது. அவர் கள் பார்வையில் நவிப்பிள்ளை ஒரு பொரு ளாதார முன்னனேற்ற ஆய்வாளராக இருந் திருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருந் திருக்கும்? எதுவோ எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் இதுதான்.விட்டுவிடாமல் விளாசுவோம் என்று எல்லா அபிவிருத்தி வேலைகளையும் பட்டியலிட்டனர் அவர்கள்.
ஒரு அதிகாரிகூட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து வாய் திறக்கவில்லை.

உரிமை வேறு அபிவிருத்தி வேறு

பொதுவான உலக நடைமுறைகளின் கீழ் ஒருநாட்டில் வாழும் மக்கள் சட்டரீதியாக வும் பண்பாட்டு, கலாசார ரீதியாகவும் பெற்றுக்கொள்ளும் அம்சங்களை உரிமை களாக வகைப்படுத்தலாம். இவை உலக வரன்முறைக்கமைய மக்களுக்கு வழங்கப்பட வேண்டியவை.
உரிமைகள் குறித்த மிகப் பிந்திய கருத் துருக்கள்  சமத்துவ நோக்கம் கொண்டவை. அதாவது, எல்லோருக்கும் சம உரிமை என் பதாகும். உரிமைகள் தொடர்பாக தற்காலத் தில் இரண்டு முக்கியமான கருத்துக்கள் நிலவுகின்றன. ஒன்று, இயல்புரிமை.இது, ஒரு நாடு,ஒரு இனம்,ஒரு குழுவுக்கு இயற்கையாக அமைந்த உரிமையைக் குறிக்கிறது.இதில் எந்த மனித சக்தியும், முறையாக மாற்றம் செய்ய முடியாது. இரண்டாவது, சட்ட உரிமை.
இது, உரிமை என்பது சமுதாயத்தால் ஆக் கப்படுவதும், அரசால் நடை முறைப்படுத்தப் படுவதும், மாற்றங்களுக்கு உட்படக்கூடியது மான மனித உருவாக்கம்.
அபிவிருத்தி என்பது இதிலிருந்து மாறுபடு கிறது. அதாவது ஒருநாட்டின் சமூக,பொருளாதார நிலைகளில் படிப்படியாக ஏற்படுத் தப்படும் வளம்மிக்க மாற்றமே அபிவிருத்தி எனப்படுகிறது.
மனித உரிமைகள் அபிவிருத்திக்குள் உள்ள டக்கப்படகூடியவை என்ற அடிப்படை நிலவி வந்தாலும் எல்லா மட்டங்களிலும் இவை பின்பற்றப்படாமையே முரண்பாட்டுக்கு கார ணமாகிறது.
இலங்கையில் தற்போது பெரும்பாலான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முரண்பாட்டு டன் கடியவையாகக் காணப்படுவதே பிரச் சினையாகும். தேசிய கொள்கைகளுக்கு உட் பட்ட அபிவிருத்தி திட்டங்களால் இனம் சார்ந்த, சமூகம்சார்ந்த உரிமைகள் மதிக்கப் படாத நிலை தோற்றுவிக்கப்படுகிறது.
இதுவே ஆரம்பம் தொட்டு இன்றுவரையான முரண்பாட்டு தோற்றுவாய்களாகக்காணப் படுகின்றன.
இந்த அடிப்படையில் நவிப்பிள்ளையிடமும் எமது அதிகாரிகள் முரண்பாட்டு தோற்று வாய்களைக் காண்பித்து, இங்கு மக்களுக்கு பிரச்சினை கிடையாது என்று விளம்பியுள்ளனர்.
நவிப்பிள்ளையின் பயணத்தின் நோக்கம் அது அல்ல என்று அரச அதிகாரிகளுக்கு நன்கு தெரி யும். ஆனால் விரும்பியோ விரும்பாமலோ தத் தமது நியாயப்பாடுகளை தெளிவுபடுத்த வேண் டியது அதிகாரிகளது கடமையாக்கப்பட்டி ருந்தது. அபிவிருத்தி குறித்த முன்னேற்ற அறிக்கை மூலமாவது சில சம்பவங்களை மூடி மறைக்கவோ அல்லது திசை திருப்பி விடவோ முடியும் என்பதே அரசின் நோக்கம். இதற் காகவே அரச அதிபர்கள் அபிவிருத்தியைப்பட் டியலிட பணிக்கப்பட்டனர்.
எது எப்படியோ நவிப்பிள்ளை உண்மை நிலையை தெளிவாக அவதானிப்பது போலவே அவரது அனைத்து செயற்பாடுகளும் இருந்தது என்பதை அவதானிக்கமுடிந்தது. அவரது அவதா னிப்புக்களும் நடவடிக்கைகளும் அடுத்த ஐ.நா. மனிதஉரிமைகள் கூட்டத்தில் தெரியவரும்.

நன்றி சுடர்ஒளி 04-10.09.2013

சாப்பிட்டுப் போங்கோ.....!


"நாளைக்கு மீற்றிங்' என்ற தகவலோடு இன்று தான் பல அலுவலகங்களுக்கு கடிதம் வந்து சேர்ந்தது. முக்கிய கலந்துரையாடல் இருப்பதால் சம் பந்தப்பட்ட அனைவரையும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் அன்று அந்தக் கடிதத்தில் குறிப் பிடப்பட்டிருந்தது.
பலவருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி தற்போதுதான் ஆசிரிய உதவியாளர் களாக மிகக்குறைந்த கொடுப்பனவுடன் உள்வாங் கப் பட்டவர்கள், சமுர்த்தி ஊழியர்கள்,அலுவலக பணியாளர்கள் என்று அனைவருக்கும் இந்த அவசர அறிவிப்பு அந்தந்தப் பிரிவுகளின் ஊடாக அனுப் பப்பட்டிருந்நது.
புதிதாக நியமனம் பெற்றவர்கள் என்பதால் கட்டாயம் அந்த "மீற்றிங்கில்' கலந்துகொள்ள வேண் டிய  ஏற்பட்டது. காரணம் "வேலை இல்லாமல் செய்துபோடுவினம்' என்ற பயம் தான்.
"இவ்வளவு காலமா கஸ்ரப்பட்டு ஒரு வேலை கிடைச்சிருக்கு. அதையும் இப்பிடி ஏதும் சாட்டா வைச்சு பறிச்சிட்டா அதோ கதிதான்'
இந்த ஏக்கத்தோடு இரவோடிரவா வெளிக் கிட்ட பாதிப்பேர், விடியக்காலம வெளிக்கிட்ட பாதிப்பேர் என்று ஒரு அறுநூறுபேருக்கு மேலான வர்கள் குறித்த இடத்துக்கு வந்து சேர்ந்திட்டினம்.
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப் பாணம் என்று தூர இடங்களில்  இருந்து இவர் கள் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அவசரக் கூட்டம் எண்டதால பலபேரது நினைப் பும் பேச்சும் "இது தேர்தல் மீற்றிங்' எண்டு தான். ஆனால் கூட்டத்தில எந்த அரசியல்வாதியும் கலந்து கொள்ளவில்ல. அதைவிட அரசியலும் கதைக் கல்லை. இதுதான் ஏற்பாட்டாளர்களது கெட்டித்தனம்.
போன வாரம் நவிப்பிள்ளைக்கு காட்டத் தயா ரிச்ச அபிவிருத்தி அறிக்கைகளைதான் இவர்களுக் கும் போட்டுக்காட்டி, பாருங்கோ நாட்டில எவ்வளவு அபிவிருத்தி வேலையள் நடந்து கொண்டு இருக்கு எண்டுறதுக்குத் தான்  இந்த மீற்றிங்.
வடக்கில் புதிதாகநியமனம் பெற்றுக்கொண்ட வர்களுக்கான கலந்துரையாடலே அது. கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் வடக்கு ஆளுநர் தலைமையில் தான் கூட் டம் நடைபெற்றது. வடக்குக் கான அரச அதிகாரிகளும், அமைச்சு அதிகாரிகளும் கலந்துகொண்டு தத்தமது அமைச்சு, திணைக்களங் களில் நடந்த, நடந்து கொண்டிருக் கும் அபிவிருத்தி வேலைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இடையிடையே ஆளுநர் வந்து ""உங்கள் எல்லாருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திருக்கு கட்டாயம் சாப்பிட்டுட்டு போங்கோ'' எண்டு அறிவிச்சாராம்.  பெரிய கைதட்டல் ஆரவாரம் அவருடைய அறிவிப்புக்கு.
ஒருமாதிரி கூட்டம் முடிஞ்சுது. அதிகாரிகள் வெளி யேறி விட்டனர். அவசர அவசரமாக மேடைக்கு வந்த ஒருவர் ""யாழ்ப்பாணத்தில இருந்து வந்தவை யளுக்கு சாப் பாடு ஒழுங்குபடுத்தேலை. நீங்கள் வீட்டைபோய் சாப்பிடுங்கோ. வெளிமாவட்டத் தில இருந்து வந்த எல்லாருக்கும் சாப்பாடு இருக்கு'' என்று அறிவித்தார். அறிவிப்பை கேட்டதும் யாழ்ப் பாணத்தில இருந்து வந்த எல்லோரும் வீட்டுக்கு புறப்பட வெளி மாவட்டக்காரருக்கு, ""கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ சாப் பாடு வந்திடும்'' எண்டு தகவல் கொடுத்திருக்கினம். ஒருமணி, ஒன்றரை, இரண்டு என்று நேரம் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் சாப்பாடு தான் வந்த பாடாக இல்லை.
 தூரத்தில இருந்து முதல்நாளே வந்தவை, அதிகாலை வெளிக்கிட்டவை என்று பலபேர்.... பொறுமை இழந்து கூட்டம் கூட்டமாகப் புறப்பட ஆரம்பித்தனர்.
அப்பாடா !கொஞ்ச நேரத்தில கூட்டம் கலைஞ் சிட்டுது. ஏற்பாட்டாளர்களுக்கு மிக்க சந்தோசம். ஒருமாதிரி ஏமாத்தி அனுப்பிட்டம் எண்டு.
யாழ்ப்பாணம் பஸ்ரான்ட் வரை ஓட்டோக் கள், தனியார் பஸ்களில் தாவி வந்து சேர்ந்த பலர் கூட்டம் கூட்டமாக ஏதோ பேசிக் கொண்டிருந் திச்சினம். அதில எனக்கு அறிஞ்ச ஒருத்தரும் இருந்தார். ""அண்னை என்னாச்சு.என்ன இந்தப் பக்கம்?'' எண்டு கதையக் குடுக்க..
""நாங்கள் ஆளுநற்ர மீற்றிங்குக்கு வந்தனாங்க. ஊருக்குப்போக நிக்கிறம்.கூட்டத்தில சாப்பாடு தாறம் தாறம் எண்டு அறிவிச்சாங்கள். தரல்ல. அதுதான் எங்கட ஆக்களின்ர அறிவிப்புக்கள் எப்பிடி எண்டு பெடியளோட கதைச்சுக்கொண்டு நிண்டன். தம்பி இதை பேப்பரில எழுதிடாதை. வெக்கக்கேடு எங்களுக்குத் தான்'' சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறிப்புறப்பட்டுவிட்டார் அவர்.
பாத்தீர்களா  இந்த விருந்தோம்பல் பண்பை. கிடைச்சா எங்களுக்கு இப்பிடி  இன்னும் கொஞ்சபேர் கிடைக்கணும். நல்லா வருவீங்கள். போங்கோ.

நன்றி சுடர்ஒளி11 -17.09.2013

குருக்கள் செய்தால்....



""ஆலயம் தொழுவது சாலமும் நன்று... ஆனால் நல்லூரானை அரசியல் வாதிகள் தொழுவது நன்றல்ல.''
பெரும்பாலான மக்களுக்கு இந்தக் கருத் தில் உடன்பாடு இருக்காது. ஆனால் சில வேளை களில் உடன்பட்டுத்தான் ஆகவேண்டும்.
எங்கள் நாட்டு அரசியல் திட்டங்களும் அர சியல் விண்ணர்களும் இனிவரும் நாட்களில் இதை வலியுறுத்தும்போது நாம் அதை எற்றுக் கொள்ளத் தயாராகத்தான் இருக்கவேண்டும்.
பெரும்பாலும் நல்லூர்க்கந்தனை தரிசிக்க குடும்பமாக,சுற்றத்தாருடன்,அயலவருடன் என்று எல்லோரும்  வழிபடப் போவது வழக் கம். அதிலும் தேர்த் திருவிழா என்றால் வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவார் கள். தன்னை நாடிவரும் பக்தர்களில் யார் அர சியல்வாதி  யார் சாதாரண குடி மகன்  என்ற பேதம் கந்தனுக்குக் கிடையாது. யாழ்ப்பாணத்துக்கு வருகின்ற பிரபலங்கள் எல்லாமே மேலாடை யைக் கழற்றி விட்டு, அர்ச்சனைத் தட்டுகளோடு நல்லூரானை வழிபடாமல்  போனது கிடை யாது. ஏனெனில் யாழ்ப்பாணத் தின் அடை யாளமாக மாறிப்போய் விட்டது நல்லூர்.
வடக்குமாகாணத்துக்கு முதன்முறையாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான தேர் தல் பிரசாரப் பணிகளை  வேட்பாளர்கள் முடுக்கி விட்டுள்ளனர்.   இந்த வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்   வேட்பாளர்களும் தமது  ஆதர வாளர்கள் சகிதம்   பிரசாரக் களத்தில் குதித் துள்ளனர். தேர்தல் பற்றியோ பிரசாரம் பற் றியோ நல்லூர்க் கந்தனுக்கு எதுவும்  தெரி யாது. அவர் ஒரு அப்பாவி. 
சம்பந்தரும் கூட்டமைப்புச் சார்பாக தேர் தலில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாள ரான விக்கி ஐயாவும் நல்லூர் தேர்த்திரு விழாவுக்கு  கும்பிடப் போயிருந்தவை. இதை மீடியாகாரர் போட்டோ, வீடியோ எடுத்தது பரவலா செய்தியும் வந்திருந்தது..
 நிறை மீடியாக்களின்ர திருவிழாக்கால சிறப்பு அலுவலகங்கள் ஏராளமாக நல்லூர் ஆலயச் சூழலில் இருந்தது. அப்பிடித்தான் யாழ்ப்பாணத்து ரீவி ஒன்றும்  தனது ஒளிபரப்புக் காரியாலயத்தை வைச்சு போற, வாற பக்தர் களை இழுத்துப் பிடித்து தேர்த் திருவிழா பற்றி கருத்துக் கேட்டுக்கொண்டு இருந்திச்சினம். அப் பிடி கருத்து கேக்கேக்க "மைக்கை' சம்பந்தர் ஐயாட்டையும் நீட்டியிருக்கினம். அவரும் ஏதோ கருத்துச் சொல்லியிருக்கிறார்.

இது இணக்கப்படுத்தல்காரரின்ர காதிலையும்  கேட்டிட்டுதுபோல. வேட்டியைக் கட்டிக் கொண்டு கோயில் வாசல்ல அமைச்சருக்குப் பின் னால நிண்டு  அடியார்களுக்கு  ஏதோ அள்ளி  வழங்கிக்கொண்டிருந்த ஒருத்தர், அரை வாசியோட முருகனோட கோவிச்சுக் கொண்டு வீட்டை வந்திட்டார். வந்தவர் சும்மா நிற் கேல்லை. சூட்டோடுசூடா பத்திரிகை களுக்கு ""கோயிலுக்கு வந்து கூட்டமைப்பு பரப் புரை செய்யினம். பாத்துக்கொண்டு பேசாம இருக் கிறார் முருகன்'' எண்டு கண்டன  அறிக்கை எழுதி அனுப்பியும் போட்டார்.
கோயிலுக்கு போறது சாமி கும்பிடத் தான். ஆனால் இப்ப எல்லாம் அப்பிடி இல்ல. ஆற்ற  கழுத்தில பெரிசா ஏதும் தொங்குது, பிடுங்கினா எவ்வளவு தேறும் எண்டு ஒரு கூட்டம். யார் வாயில இருந்து என்ன கதை வருகுது எண்டு கேட்டு வீட்டுக்கு வந்து போட்டு குடுக்க இன்னொரு கூட்டம்.  இன்னும் கன நோக்கத்துக்காகத் தானே கன பேர் கோயிலுக்குப் போகினம். பக்திப் பர வசத்தோட கும்பிடப்போனா அடுத்த வன் என்னசெய்தா எங்களுக்கென்ன? நான் வந் தது கோயிலுக்கு சாமிகும்பிட. அதை கச்சிதமா முடிச்சிட்டு வீட்டுக்குப் போவம் எண்டு பெருந்தன்மையோட திரும்பியிருக்கவேணும்.
இணக்ககாரரும் அங்க என்ன கும்பிடவோ போனவை. அவை அங்க என்ன செய்தவை எண்டதை பல்லாயிரம் பக்தர்களும் கண்டவை. ஆனால் கோயில் கும்பிடப்போன சம்பந்தரும் விக்கினேஸ்வரனும்தான் மேடை போட்டு பரப்புரை செய்தவை எண்டு தங்கட கூத்துக் களை மறைக்க அறிக்கை வெளியிடுகினம்.
இப்பிடியே போனால் கொஞ்ச நாளில தேர் தல் காலத்தில் முருகனுக்கு தேரும் இழுக்கக் கூடாது, இன்னார் இன்ன இன்ன இடத்துக்கு மட்டுமே போகமுடியும் எண்டு லிஸ்ற் தருவினம். கவனம்!
பாவம்  முருகனுக்கு இது ஒண்டும் தெரி யாது.

நன்றி சுடர்ஒளி 11.-17.09.2013

வருகிறாள் தேர்தல் தேவி


--
யாழ் தேவியில் நாங்கள் காதல் செய்தால்
யாழ் மீட்டுமே ரயில் தண்டவாளம்
யாழ் மண்ணிலே நாங்கள் கால்பதிக்கவே
வாழ்த்துரைக்குமே ரயில் தண்டவாளம்
எங்கடை மக்களுக்கு d ஓர்
உறவுப் பாலம் நீ d சிறு
சங்கடம் இல்லாமல்
தேசிய சினேகம் வளர்த்திருப்பாய்.....

--

சந்தேக வருகை

    வடக்கு மக்களின் வாழ்வியலோடு ஒரு காலத்தில் ஒன்றிப் போயி ருந்தவள் யாழ்தேவி. கொழும்பில் பணிபுரிந்த யாழ்ப்பாணத்தவர் களுக்கான புஷ்பகவிமானம் யாழ்தேவிதான். வெள்ளிக்கிழமைகளில் பணிமுடிந்த கையோடு யாழ்தேவியில் ஏறினால் அடுத்தநாள் விடிகாலையில் வீட்டில் நிற்கலாம். ஆனால் இடைப்பட்ட போர்க்காலத்தில் அவள் எங்களிடமிருந்து தூரப்போயிருந்தாள். வவுனியாவோடு அவளின் வருகை மட்டுப்படுத் தப்பட்டிருந்தது. இப்போது கிளிநொச்சி வரை யாழ்தேவி அவசர வெள் ளோட்டமாக வந்து போயி ருக்கிறாள். சாதாரண நாள் களில் இந்த  பரீட்சார்த்த வருகை நிகழ்ந் திருந்தால் அது கொண்டாட் டத்துக் குரியதாக இருந்தி ருக்கும். ஆனால் தேர்தல் காலத்தில் நிகழ்ந்த இந்தத் தற்காலிக வருகை ஒரு சந் தேகத்தையே எல்லோருக் கும் ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையிலேயே தொடர்ச்சி யான போக்குவரத்துக்காகத் தான் அவளின் இந்த வருகை நிகழ்ந்ததா? அல்லது வடக் கில் இயல்பு வாழ்வு திரும்பி விட்டது என்று நம்பவைத்து வாக்குகளை கவரத் தான் இந்த வருகையா? என்ற கேள்விகளுக்கு இனி விடி யப் போகும் பொழுதுகளே பதில் சொல்லவேண்டும்.
------
இயற்கை உணர்வுடன் கூடிய இந்தப் பாடல் எல்லோரையும் கவர்ந்தது. பாடல் கவர்ந்த அளவுக்கு யாழ்தேவி யாரையும் கவரவில்லை என்பதுதான் வரலாறு.
வடக்கு மாகாணத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு,அந்த நாளும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அமளியோடு அடுத்த மாதம் யாழ்தேவி ரயில் கிளிநொச்சிவரை தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது.
அபிவிருத்தியின் பிரதான ஊடகமாக இருப்பது வீதி வலையமைப்பே. இதனூடான போக்குவரத்து சேவைகள் அபிவிருத்திக்கான ஏதுக்களை ஊக்குவிக்கின்றன. ஆனால், வடக்கின் விவசாய உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பை போக்குவரத்துக் காரணிகள் தடைசெய்ய,வடமாகாணத்தின் உற்பத்தித் திறன் மங்கிப்போனது.
வடபகுதிக்கான ரயில் சேவை முதன்முதலில் 1902 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது பயணிகள் சேவை அல்ல.இதனூடாகத் தபால் பொதிகளும் வர்த்தகப் பொருட்களுமே பரிமாறப்பட்டன. மிகவும் மந்தமான வேகம் கொண்டதாக இந்த ரயில்சேவை இருந்தது.
இந்த நிலையில் 1956 ஆம் ஆண்டு யாழ்தேவி ஆரம்பிக்கப்பட்டது. வடக்குக்கும் தெற்குக்குமான உறவுப்பாலமாக இந்தச் சேவை அமைந்தது. 411கீ.மீ. தூரம்கொண்ட கொழும்பு கோட்டைக்கும் dகாங்கேசன்துறைக்குமான யாழ்தேவி ரயில் பயணத்தின் அனுபவங்களை இப்போதிருக்கும் இளம் தலைமுறை அனுபவிக்கவில்லை.
வயதானவர்கள் மட்டுமே அந்தச் சுவார்சியமான கதைகளைச் சொல்வர்.
மூன்றுபத்தாண்டுகளாக இந்தத் தொடர்பு பேணப்பட, 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி யாழ்தேவி  முறிகண்டியில் வைத்து தாக்கப்பட்டது. உயிர் இழப்புடன் கூடிய இந்தத் தாக்குதல் காரணமாகத் தெற்கிற்கான ரயில் தொடர்பும் அறுந்து போனது. இந்தத் தொடர்பின் அறுப்பு ஒரு பிரயாணத்தின் துண்டிப்பு மட்டுமல்லாது,இரண்டு சமூகத்தினருக்குமிடையிலாக அறுப்பானது எனலாம்.
இன்று ""தேவி திரும்பி வருகிறாள்'' என்ற செய்தியை ஊடகங்களில் வெளிப்படுத்தும்போது, உணர்வார்ந்த பேச்சுக்களும், கதைகளும் இப்போதுள்ள, அந்தக் காலத்து  தேவியை அனுபவித்தவர்களிடம் மிளிர்வதைக் காணமுடிகிறது.
கலகலப்பு, ஆரவாரம், புதிய இடத்தைப் பார்க்கும் துடிப்பு, நட்புக்களின் சந்திப்பு என்று இந்தப் புதினங்கள் சொல்லி முற்றுறாதவை.
இன்று வடக்கில் தேர்தல் ஆரவாரத்தோடுதான் தேவி வரும் அறிவிப்பும் வெளிவந்திருக்கிறது. அதுமட்டுமல்ல கிளிநொச்சிவரை பரீட்சார்த்தப் பயணத்தை யும் தேவி மேற்கொண்டு வெற்றிபெற்றுள்ளாள்.
90ஆம் ஆண்டுக்குப் பின்னர் மதவாச்சிவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த தேவியின் பயணம் போருக்குப் பின்னர் வவுனியா, ஓமந்தை என விரிவாக் கப்பட்டு அடுத்தமாதம் கிளிநொச்சி வரைக்கும் தொடரவுள்ளது.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ்தேவி ரயில் சேவையை காங்கேசன் துறைவரை நடத்துவதற்கு, புனர்நிர்மாணப் பணிகள் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம்ஆரம்பிக்கப்பட்டது.
பழைமைகளை வெளிக்கொண்டுவர இருக்கும் தேவியின் பயணம் தேர்தல் அறிவிப்பாக இருக்கக்கூடாது. அபிவிருத்தியின் வெளிக்கூறுகள் மட்டும் மக்களின் இயல்புவாழ்வுக்கு உதவிடப்போவதில்லை.பதிலாக உட்கூறுகளில் நிறைவு காணப்படவேண்டும். இன்றும் அடிப்படைவசதிகள் இன்றி வடக்குமக்கள் பெரும்பாலானவர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு தேவிவருவது தேவை யற்றவிடயம்.
அடிக்கட்டுமக்களின் தேவைகளும் அபிவிருத்தி உள்ளடக்கமாக மாறவேண்டும். வடக்கு தெற்கை வேகமாக இணைக்க அதிவேக சாலையும் தயார். ஆனால்....அகதிகள் குடிசைகள் வரப்போகும் மழையில் அடித்துச் செல்லாதிருக்கவும் ஒரு ஆயத்தம் தேவை என்பதை அபிவிருத்தியாளர்கள் கவனிக்கவேண்டும்.

நன்றி சுடர்ஒளி (14-20.08.2013)

சில்லறைச் சண்டை


அவரது முகத்தைப் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது.வாய் திறந்து கேட்பதற்கு வெட்கம்.போய்ச் சேரும்வரை மனசுக்குள் சில்லறைச்சண்டை. கடைசிவரை பிரச்சினை தீரவில்லை. யாழ்ப்பாணம் தனியார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்ட பஸ்.கிளி நொச்சிக்கு செல்கிறது. நானும் கிளிநொச்சி செல்லவேண்டும். 93 ரூபா ரிக்கற். நூறு ரூபா கொடுத்தேன். எனக்கு அருகில் இருந்தவரும் அப்படித்தான். ஆனால் அவருக்கு பத்து ரூபா திருப்பிக் கொடுக்கப்பட்டது.
எனக்குத் தரப்படவில்லை.சரி இல்லையாக் கும் தருவார் என்ற நம்பிக்கை.போய்ச் சேரும் வரை அவர் சிட்டை எழுதுவதற்காக அங்கும் இங்கும் சென்றுவந்தார். அப்போதெல்லாம் அவரது முகத்தைப் பார்த்தேன். ஞாபகப்படுத்தலுக்காக. ஆனால் அவர் நினைப்பில் அந்த சில்லறை இல்லை. அவருக்கு 7 ரூபா லாபம். எனக்கு ஏழு ரூபாவுடன் "ரிக்கற்' போட்டது முதல் இறங்கும் வரையான நேரம் வரை சிந் தனைகளும் நட்டம்.
திரும்பி வரும்போது இ.போ.ச.பஸ்.92ரூபா டிக்கற்.100ரூபா கொடுத்தேன். 10ரூபா தந்தார். அவருக்கு 2 ரூபா நட்டம்.

கடைகளிலும் இதே நிலை

இப்படித்தான் தினமும் நாம் நுகரும் பொருள்களுக்கான மீதிப்பணம் வழங்கப் படுவதில்லை. அல்லது மேலதிகமாக நாமே பெறுமதி இழக்க நேரிடுகின்றது. பொதுப் பாவனையில் சில்லறைக் காசுகள் புழக்கத்தில் இல்லாததால் நுகர்வோரும் அதை எடுத்துச் செல்லவோ, மீளப் பெறவோ விரும்புவதில்லை. இதனால் கடைக்காரரை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. விலைப் பதிப்புக்களும் தந்திர மானவை. சில்லறைப்பணத்தை கொள்ளையடிப்பதாகவே அவை அமைகின்றன.
இப்போதெல்லாம் சட்டைப்பையில் இப்போது ஒரு ரூபா கிடந்தாலும் கனமாக இருக்கிறது. எப்படியாவது அதை அகற்றுவதே சிந்தனை. ஒருலட்சம் ரூபாவை 20 தாள்கள் மட் டும் நிரப்பிவிடுகின்றன. அப்படியானால் சாதாரண சட்டைப்பையே 5 லட்சம் ரூபாவை யாருக்கும் தெரியாது வெளியில் எடுத்துச் செல்ல உதவியாக இருக்கிறது. பட்டப்பகலில் உயிருடன் இருக்கும் ஒருவரது காதுகளை அறுத்து கொள்ளையடிக்கும் ஊரில் அரசின் நாணயத்தாள் அச்சிடும் உத்தி பாராட்டுக்குரியது. ஆனால் போலி??

வியாபார உளவியல்

மனித நடத்தை உளவியலுக்கு அப்பால் இன்று மனிதர்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்தும் வர்த்தக உளவியல் மேலோங்கியிருக் கிறது. அதாவது உலகின் வாணிப மறுமலர்ச்சி, அதனூடான சர்வதேச கம்பனிகளின் உருவாக்கம் இந்த தந்திரங்களைக் கையாள்கின்றன.
உதாரணமாக நாம் காலணியைக் கொள்வனவு செய்யும்போது சத பெறுமதியை அவதானிக்கிறோம். எங்களிடம் இருந்து சத பெறுமதி நீக் கப்பட்டு வெகு நாளாகிவிட்டது.ஆனாலும் கம்பனிகளது கவரும் தந் திரம் அதைத் தன்வசம் வைத் திருக்கிறது.
ஒரு காலணியில் 999.90 சதம் பொறிக்கப்பட்டிருக்கும். (கம் கனி, பொருள்தரம் என் பனவற் றுக்கு ஏற்ப விலை வேறுபடும்)பார்க்கும் போது அது  பணப்பெறுமதியைக் குறைத்துக் காட்டுவது போலத் தெரியும். ஆனால் அதன் விற்பனைப் பெறுமதி 1000.00 ரூபா. இந்த தொகையை விற்கப்படும் பொருளில் பொறித்திருந்தால் பார்ப்பவர்கள் ஆயிரம் ரூபாவா? என்று வாயைப் பிழக்கக்கூடாது என்பதே வாணிப உளவியலின் நோக்கம்.

நண்பரின் பெறுமதி

காலத்தால் பழமையான ஐந்து சதக் குற்றியைத் துளையிட்டு தனது கழுத்தில் அணிந் திருக்கிறார் எனது நண்பர் ஒருவர்.அவரது விளக்கம் "பணம் இண்டைக்கு இருக்கும் நாளைக்கு போய்விடும்'. இப்பிடி போயிட்டா என்னைப் பாத்து ஒருவன் "அஞ்சு சதத்துக்கு பெறுமதி இல்லாதவன்' எண்டு பேசக்கூடாது என்பது தான்.
அந்த ஆசை என்னையும் விட்டுவைக்கவில்லை. நானும் ஒரு சதத்தை கழுத்தில் அணிய ஆசைப்பட்டேன். ஆனால் அதை "உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்'  (காதல் அல்ல) என்று சொல்லும் ஒருவர் அணியவிடாது தடுத்து விட்டார். ஆனால் அவருக்கு இப்போ என்னைப் பிடிக்காது. பணம் தான் ஆள்மாறுகிறது எண்டால் அன்பும் இப்ப அப்பிடித் தானே? ஐயகோ அதை பற்றி பேசவே வேண்டாம்.

அன்பும் சில்லறை

காதல், அன்பு பற்றிய பழங்காலக் கட்ட மைப்புக்கள் மாற்றப்பட்டுவிட்டன. இப் போது சமூகவலைத்தளங்கள்தான் காதல், அன்புக்கு அடித்தளங்கள். இதில் தொலைபேசி களும் அடக்கம். கட் ஆவதும் இணைக்கப்படு வதும் அவரவர் விதி. ஆனால் வரைவிலக்கணங் களும் எடுத்து காட்டுகைகளும் பாரம்பரிய மான தாகவே இருந்தாலும் பிரையோகமாற்றம், விதிகளுக்கு அப்பால் விடுபட்டு சீரழிவுக்கான ஆரம்பத்தை அறிமுகப்படுத்துகின்றன.
உன்னைத் தவிர அனைவரும் உத்தமர்கள் என்பதே குற்றம் நீரூபிக்கப் பட்டவனதும் வாக்குமூலமாக இருக்கிறது.அப்படியானால் குற்றவாளி இந்த உலகமே.மனித நாகரிகம் இன்று உலகை குற்றவாழிக் கூண்டில் அடைக்க தலைப்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது.அதுவே அழிவின் விளிம்பு.

சில்லறை வழக்குகள்

பேச்சுத் தொனியும் கருத்தாடலும் திறம்படக் கொண்ட நம் உத்தமர்கள் உண்மையை பொய்யாக்குவதிலும் பொய்யை உண்மையாக்குவதிலும் வல்லவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழ் மக்களின் எதிர்காலம் தவிர இவர்கள் ஆடிய வழக்குகள் அனைத்தும் வெற்றியே.
நீதிமன்றுகள் அதிரும்படியாக வழக்காடும் ஆற்றல் கொண்ட நம் முன்னோர்கள் தமிழ் மக்களது எதிர்காலத்தை சில்லறையாக்கிவிட்டு ஒரு ரூபா பணத்துக்காக வழக்காடியுள்ளனர் என்பது வேதனைக்குரியது.
இன்றும் தமிழனின் இருப்பு கேவலப்படுவதற்கு இந்த அடித்தளங்களே காரணமாகின என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுத்தான் ஆகவேண்டும். வரலாறுதான் தமிழினத்துக்கு துரோகம் இழைத்திருக் கிறது.
மீண்டும் ஒரு சில்லறை சம்பவத்துடன் சந்திப்போம்.

நன்றி சுடர்ஒளி 23-29.10.2013

தமிழருக்கு இலுப்பம்பூ சர்க்கரையா?



தமிழ் போசும் மக்கள் செறிந்துவாழும் வடக்கில் முதல் முறையாக மாகாண சபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. இது உலகறிந்த உண்மை. ஆனால் தாம் வழங்கிய ஆணையை கூட்டமைப்பு சரியாகப் பயன் படுத்துகிறதா என்பதில் வாக்களித்த மக்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.இதற்கு முழுமுதற் காரணமும் கூட்டமைப்பு கட்சிகளே.
விடுதலைப்புலிகள் தமிழ்த்தேசியத்தை கட்டி யயழுப்பும் நோக்குடன் கூட்டமைப்பை உருவாக்கினர். அது தமிழ்மக்களது எதிர்கால அரசியலை கட்டியயழுப்பும் ஒரு முயற்சியாக அமைந்தது. கூட்டமைக்கப்பட்ட கட்சிகளை கண்காணித்து நெறிப்படுத்தும் நடவடிக்கை களை விடுதலைப்புலிகள் செய்ததால் முரண்பாடு கள் தவிர்க்கப்பட்டன. முரண்படுபவர்கள் எச் சரிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட அது பழக்கப் படாத குதிரைக்கான ஒரு கடிவாளமே. அப் போதும் வற்புறுத்தப்பட்ட ஒற்றுமைத் தன் மையே இவர்களுக்குள் இருந்திருக்கவேண்டும். அதாவது கடிவாள அசைவுகளுக்கு ஏற்ப இயங்குதல்.
2009 போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் கடிவாளம் அறுக்கப்பட்டுவிட்டது கூட்டுகுதிரைகளுக்கு. அன்றில் இருந்து இன்று வரை இவர்களுக்குள் போட்டியும் அதிகார வேற்றுமையும் படிப்படியாக உருவெடுக்கத் தொடங்கிவிட்டன. ஐந்து கட்சிக்கூட்டமைப்பு நான்காக மாறி மாகாண சபை நிர்வாகத்தோடு இல்லாமலே போய்விடுமோ என்ற சந்தேகம் மக்கள்மத்தியில் தோன்றியுள்ளது.

மக்களின் வாக்களிப்பு

வடமாகாண சபைத் தேர்தலில் பெரும் பாண்மைத்  தமிழ் மக்கள் வாக்களித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே. காரணம் ஒன்றல்ல.
சர்வதேசத்தின் பார்வையைத் தம்பக்கம் இழுக்கவும்,தமிழ் மக்களுக்கு இலங்கையில் நெருக்கடி இருக்கிறது. அதை தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற எண்ணப்பாட்டுடனும், வீடுதலைப் போராட் டத்தின் மெளனிப்பு dஅந்த உணர்வின் வழியாக ஒரு சுதந்திர உரிமையை பெறும் நீண்டநாள் அபிலாசை, அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்கான எதிர்கால அரசியல் புலம்,தமிழ் தேசியக்கூட்டமைப்பே தமிழ்மக்களைப் பிரதி பலிக்கும் ஒரே ஒரு தமிழ் கட்சி. இவ்வாறான காரணங்களே தமிழ்மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதற்கான காரணங்களாக அமைந் தன. அதாவது மஹிந்த அரசின் மீதான ஒட்டு மொத்த எதிர்ப்பை மக்கள் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதற்காகக் களதாரிகளாகவே கூட்டமைப்பை மக்கள் பயன்படுத்துவதற்கு காரணமாகியது.
இப்போதுள்ள நிலைமைகளின்படி ஆலை இல்லாக்காட்டுக்கு இலுப்பம் பூ சக்கரை என் பது போலவே கூட்டமைப்பு காரரது நட வடிக்கைகள் இருப்பதாக வாக்களித்த மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
அதாவது மக்கள் வழங்கிய ஆணையை, விலை பேசவும், தமக்குள் பதவிகளுக்காக அடிபடவும் கூட்டுக்குள் பிழவை ஏற்படுத்தவும் பயன்படுத்துவதாகவே அதனைக் கருத வேண் டும்.

நவிப்பிள்ளை வருகை

வடக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்திருந்தார். அவர் போருக்குப்பின்னரான இலங்கையின் மனித உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தனது கள அவதானிப்புக்களைச் செய் யும் பொருட்டு இறுதிப்போர் இடம்பெற்ற இடங்களையும் பார்வையிட்டிருந்தார்.
இலங்கையில் தங்கியிருந்த வேளை நவிப் பிள்ளை, தமிழ்மக்களை சந்தித்து கலந்துரை யாடினார். அவரது கலந்துரையாடல், அல்லல் பட்ட தமது நீண்டபெரும் மனச் சுமையை கீழே இறக்கிவைத்த சுகத்தை அந்த மக்களுக்கு வழங் கியிருந்தது. அவர் மக்களுக்கு சில வாக்குறு திகளை வழங்கியிருந்தார். அதுமட்டுமல்லாது இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்தும் தனது அதிருப்பியை இலங்கையில் வைத்தே தெரிவித்தார். இதுவும் மக்களை ஒரு படி சிந்திப்புக்குத் தூண்டியது.
நவிப்பிள்ளை போன கையோடு வடக்கு தேர் தலுக்கான பரப்புரைப் பணிகளை போட்டி யிடும் கட்சிகள் ஆரம்பித்தன. இதில் அபி விருத்திdசலுகை, உரிமை என்பன  பேசுபொருள் களாகின.
இதன்போது உரிமை அரசியல் மக்கள் மத்தி யில் செல்லாக்கு செலுத்தியது. இதற்கான காரணத்தில் ஒன்று நவிப்பிள்ளையின் வருகை என்பது மறுக்கமுடியாதது.

மக்களுக்கு அழுத்தம்

தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களித் தமை, ஆதரவாகச் செயற்பட்டமை போன்ற காரணங்களுக்காகத் தமிழ்மக்களைச் சிலர் இன்றும் தண்டிக்கின்றனர். தொழில் இடங் களில் பாரபாட்சம், தனிமையில் அச்சுறுத்தல், உதவிகளை இல்லாமற்செய்தல், பழிவாங்கல் என்று இந்த நிலைமை தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதை கூட்டமைப்பினர் கருத்தில் கொள்ளவில்லை என்றே கருதவேண்டும். காரணம் மக்கள் தமது உயிரை துச்சமாக வைத்தே வடக்கு தேர்தலில் வாக்களித்தனர். இதை வாக் களிப்பு வீதத்தில் வைத்து உணரலாம்.
வாக்களித்த, ஆதரவளித்த மக்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர். 3க்கும் மேற்பட்ட வீடு கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.இன்றும் புல னாய்வாளர்களால் பலர் அச்சுறுத்தலுக்கு ஆளா கின்றனர். இது ஒரு இனத்தின் உரிமையை அடக்கும் செயல். இலங்கையில் ஜனநாயகப் பண்புகள் இந்தளவுக்கு இருக்கையில்தான் மக் களின் எழுச்சியும் பேராதரவும் கூட்டமைப் புக்கு கிடைத்தது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது,

வெற்றி பெற்றவர்கள்  பதவியேற்கவில்லை

வடமாகாண சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து உறுப்பினர்கள் சிலர் வடமாகாண அமைச்சு பதவியேற்பில் கலந்து கொள்ளவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து சர்வேஸ்வரன், சிவாஜிலிங்கம், மன்னாரில் இருந்து குணசீலன், முல்லைத்தீவிலிருந்து சிவ மோகன், வவுனியாவில் இருந்து மூவர் வைப வத்துக்கு வரவில்லை. கிட்டத்தட்ட பத்து உறுப்பினர்கள் நிகழ்வுக்கு வரவில்லை என்றால்????  இந்தப் புறக்கணிப்புக்கு கட்சிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகளே காரணம் என்று கூறப்பட்டது.
ஆரம்ப நிகழ்வொன்றிலேயே உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமை கவலைக்குரியது. இவர் களது கோரிக்கை, நிலைப்பாட்டுக்கு அப்பால் மக்களின் உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் மதிப்பளிக்கச் சிலர் தவறியுள்ளனர் என்றே கருதவேண்டும்.

மாற்று கட்சிகள் அறிவுரை

பெரும்பான்மை ஆதரவை வழங்கி வடக்கை ஆட்சி செய்து அபிவிருத்தி செய்யுங்கள் என்று மக்கள் வழங்கிய ஆதரவை கட்சி பேதங்களால் கூட்டமைப்பு மறந்துவிட்டது. தமக்குள் சண்டை யிட்டு பதவிகள் இழுபறியில் இருற்தபோது மக் களால் ஒதுக்கப்பட்ட கட்சிகள் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் செயற்படவேண்டும் என்று அறிவுரை கூறின. இதை தமக்குள் அடிபடுபவர் கள் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். அல்லது வெட்கப்படவேண்டும்.
ஒரு கூட்டு குழு ஒருவரது தலைமையின் கீழ் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். அதை விடுத்து மாற்றுத் தெரிவு இல்லை என்பதற்காக மக்களை ஏமாற்றும் அளவுக்கு மாறிவிடக் கூடாது. தமிழ்தேசியக்கூட்டமைப்பு இதை உணரவேண்டும்.
தமிழ் மக்களது உரிமையைக் கொண்டு கட்சி வினைகளை ஆற் றாது மக்கள் வினை போக்க முன்வர வேண்டும். இதுவே  எதிர்கால அரசி யலுக்கு சாணக்கியமானது.

நன்றி சுடர்ஒளி 16-22.10.2013

Sunday, October 27, 2013

இன அழிப்பா?கட்டாய கருகலைப்பு


கிளிநொச்சி மாவட்டத்தில் கரையோரக் கிராமங்கள் அவை. கிளிநொச்சிக்கு மேற் காக அந்த மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களாக இருக்கின்றன. பெரும் பாலும் கடற்றொழிலை பிரதான மாகக் கொண்டு, மற்றைய தொழில் களையும் செய்யக் கூடிய குடும்பங் கள் இங்கு வசிக்கின்றன. 
கூடுதலாக இந்தக் கிராமங்களி லுள்ள குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவையாக அடை யாளம் காணப்பட்டுள்ளன. 
கடல் ரீதியாக இவர்களுக்கு இருக் கும் தொழில் நெருக்கடியும், பிரதான நகரங்களுடனான தொடர்பின்மை யும் இந்தக் கிராமங்களை தனிமைப் படுத்தி தொழில் ரீதியாக பின்னிலைப் படுத்தி வைத்திருக்கின்றன. ஆங் காங்கே விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்டம் என்பனவற்றையும் இந்தக் கிராமத்தின் மக்கள் செய்துவருகின் றனர்.
இவ்வாறான ஒரு மக்கள் சமூகத் தைக் கொண்ட வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி ஆகிய கிராமங்களே இவை.  
அண்மையில் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் பெரும் பாலும் பேசப்பட்ட ஒரு விடயம் இந் தக் கிராமங்களிலே நடத்தப்பட்டது. 
வடக்கு‡ கிழக்குத் தமிழ் மக்கள் அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் தமக்கான உரிமை களை பெற்றுக் கொள்ள முயற்சித்து தசாப்தங்கள் வீணாகிப் போக, சிங் களப் பெரும்பான்மைத் தேசிய வாதி கள் காலத்துக்குக் காலம் தமிழ் மக் கள் மீதான இனஅழிப்பு உத்திகளை கையாண்டமை வரலாறாக நிகழ் காலத்திலும் தொடர்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது. 

வரலாற்று அழிப்புகள்
குறிப்பாக தமிழ் மக்களது முக்கிய மான பொருளாதாரக் கட்டமைப்புக் கள் கல்வி, கலாசார பண்பாட்டு கட்ட மைப்புக்களில் திருட்டுத்தனமாக புகுந்து அவற்றை இல்லாது அழிக்கும் முயற்சிகள் இவையயனக் குறிப்பிட லாம். 
நீண்ட காலப் போராட் டம் முள்ளிவாய்க்காலோடு முடிவுக்குக் கொண்டுவரப் பட்டு அதன் பின்னர் வடக்கு ‡  கிழக்கில் தமிழ் மக்களுக்கு எந்த வகை யான நெருக்கடிகளோ குறைபாடுகளோ இல்லை யயன வெளி உலகுக்கு அரசு வலுக்கட்டாயமாக பரப்புரை செய்து வரு கிறது. 

அத்தியாவசிய நெருக்கடி
ஆனால் அந்தப் பகுதி களில் இன்றளவும் தமிழ் மக்கள் வாழ்வாதாரக் கட்டமைப்புக்களால் சீர் குலைக்கப்பட்டே இருக் கிறார்கள். இல்லிட வசதி யில்லை. சுகாதார மருத்துவ வசதிகள் இல்லை. சுத்தமான குடிநீர் இல்லை. பாதுகாப்பு இல்லை. கருத்து மற்றும் நடமாடுவதற்கான சுதந் திரம் மறுக்கப்படுகிறது. 
இவ்வாறு பரவலாக இங்குள்ள தமிழ் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக் கியே வருகின்றனர். 

சீருடையிலிருந்து
சிவிலுக்கு
எல்லாவகையிலும் வடக்கு ‡ கிழக் குப் பகுதியிலிருந்து இராணுவ பிர சன்னம் குறைக்கப்பட வேண்டும் என பேசப்பட்டாலும் அது சாத்திய மாகப் போவதில்லை. பதிலாக இராணு வத்தினர் சீருடையிலிருந்து சிவில் உடைக்கு மாற்றப்படும் அபாயத் துக்குள்ளேயே வடக்கு ‡ கிழக்கு மாற்றப்படுகிறது. 
குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு சீருடை யிலிருந்து சிவிலுக்கு மாறிய சில ரால் இன்றளவும் அச்சுறுத்தல் இருந்தே வருகிறது. 
இவ்வாறாக மக்களை நெருக்கடிக் குள்ளும் பயப்பீதியுடனும் வழி நடத் துவதன் மூலமே எதிர்காலத்தில் தமிழ் மக்கள் துணிந்து அரசுக்கு எதிராக இன்னுமொரு புரட்சியை ஏற்படுத்த மாட்டார்கள் என்ற நிலையை ஏற் படுத்த முடியும். இதனையே அரசு சூழ்ச்சிகரமாகச் செய்து வருகிறது. 
கண்ணுக்குத் தெரியாத சில இன அழிப்பு நடவடிக்கைகள் இப்போது வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பரவ விடப்பட்டுள்ளன. 

பொறுப்பற்ற அதிகாரிகள்
இதற்கு அரச அதிகாரிகளும் பொது நல உத்தியோகத்தர்களும் அவர் களுக்குத் தெரியாமலேயே பயன் படுத்தப்படுகின்றனர்.
கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு ஆகிய மூன்று கிராமங்களில் வசிக்கும் பெண்கள் மீது இப்படியயாரு சூழ்ச்சி கரமான தமிழர்களது எண்ணிக் கையைக் குறைக்கும் செயற்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் இந்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வருகிறது. 
மருத்துவ வசதிகள் அற்ற அந்தக் கிராமங்களில் வேரவில் மாவட்ட மருத்துவமனை நெருக்கடிகளுடன் இயங்கிவருகிறது. மேலதிக சிகிச்சை களுக்காக முழங்காவில் மருத்து வமனையையோ அல்லது நீண்ட தூரத்துக்கு அப்பாலுள்ள கிளிநொச்சி பொதுமருத்துவ மனையோ தான் இந்த மக்கள் நாடவேண்டியிருக்கிறது. 
நடமாடும் சேவையயான்றின் மூலம் இந்தக் கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதற்கு முழங்கா வில் மருத்துவமனை கிளிநொச்சி பொதுமருத்துவமனையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டது. 
அது ""ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகளது போஷாக்கை அள விடுதல், தாய்மார்களுக்கான போஷாக்கை அளவிடுதல்'' என்ற வகையில் மேற்கொள்ளப்பட்டது. 
இதற்கென விசேடமாக அமைக்கப் பட்ட குழு குறித்த கிராமங்களுக்குச் சென்று அங்கு வீடு வீடாகச் சென்று குறித்த தகவலைப் பரப்பி அவர் களை மருத்துவமனைக்கு அழைத் துச் சென்றுள்ளது. 
ஆனால் அறிவிக்கப்பட்டபடி சிகிச்சை வழங்கப்படவில்லை. அங்கு வந்த வர்கள் மத்தியில் தாதியர்களும் மருத்துவரும் இணைந்து கட்டாய கருத்தடை சிகிச்சையயான்றை நீங் கள் மேற்கொள்ள வேண்டும் என பணித்து அவர்களை மிரட்டி அந்த சிகிச்சையை வழங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 
""இது தற்காலிக சிகிச்சைக்கான ஏற் பாடு என்றும் நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளாவிடில் உங்கள் கணவன் மாரை அழைத்து இத்த கையதொரு சிகிச்சையை வழங்க வேண்டி வரும்'' எனவும் அவர்கள் அந்தப் பெண் களை எச்சரித்திருந்தனர். 
இதனால் அந்த இடத்தில் எதையும் செய்ய முடியாத தாய்மார்கள் அந்தச் சிகிச்சையை ஏற்றுக்கொண்டிருக் கின்றனர். இது தொடர்பில் அவர்க ளுக்கு போதிய விளக்கமும் இருக்க வில்லை. 

சமூகநல நோக்காம்
இந்த செயற்பாட்டுக்கு இன்னுமொரு கதை கூறப்படுகிறது. அதில் எத்தகைய உண்மை இருக்கும் என்பதற்கு அப் பால் சட்டத்தின் அடிப்படையில் இவ் வாறானதொரு சிகிச்சை முறையை ஒரு தொகுதி மக்களுக்கு  அவர்களின் விருப்பத்துக்கு மாறாக வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். 
குறித்த கிராமங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்களே வசிக் கின்றனர். இவர்களுக்கு பெரும் பாலும் 5 வயதுக்குட்பட்ட 3 அல்லது 4 குழந் தைகள் இருக்கின்றனர். இதனால் இவர்கள் அந்தக் குழந்தைகளைச் சரிவரப் பராமரித்துக்கொள்ள இய லாதது மட்டுமன்றி தமது குடும்பத் தையும் கொண்டு நடத்த முடியாது நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற னர். எனவே சரியான கால இடை வெளி ஒன்றைப் பேணுவதற்காகவே இந்தச் சிகிச்சை வழங்கப்பட்டது.  இது நிரந்தரமானதல்ல. தற்காலிக மானதே என்றும் சமூக நலனோக்கு அடிப்படையில் இந்தச் சிகிச்சை வழங் கப்பட்டது என்றும் மருத்துவத்துறை யைச் சார்ந்த இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய சிலர் தெரிவிக்கின்றனர். 

சட்ட நடவடிக்கை
வடமாகாண சுகாதார அமைச்சின் செயலரின் கருத்துப்படி ""கட்டாய கருக்கலைப்பு நடைமுறையயான்று இங்கு இல்லை. கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு போன்ற கிராமங்களில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை யின் பின்னரே என்ன நடந்தது எனத் தெரியவரும்'' என்று விளக்க மளிக் கப்படுகிறது. 
கிராமத்து மக்களை அழைத்து இவ் வாறான சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொண்டமை தொடர்பில் யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த நீதிக்கும் சமா தானத்துக்குமான ஆணைக்குழு வத்திக்கானுக்கு அறிக்கை சமர்ப்பித் துள்ளது. அதில் ""இந்தக் கிராமங்களில் அநேகமானவர்கள் கிறிஸ்தவர்கள். இந்த மக்களுக்கு அவர்களது விருப் பத்துக்கு மாறாக கட்டாய கருத்தடை சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. கிறிஸ் தவ மதத்தைப் பொறுத்தவரை இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு என்ன நடந்தது என உண்மை வெளிக் கொண்டுவரப்பட வேண்டும்'' என அந்த அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது. 
இது தவிர இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவ டிக்கையின் ஓர் அங்கமாக இது இருக்கலாம் எனவும் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் வடக்கு‡ கிழக்கில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக வும் அந்த அமைப்பு சந்தேகம் தெரி வித்துள்ளது. 

தமிழ்த் தலைவர்கள் அக்கறை கொள்ள வேண்டும்
கிளிநொச்சி மாவட்டத்தின் கரை யோரப் பகுதியில் இப்படியயாரு சம்ப வம் நடைபெற்றது என ஓகஸ்ட் மாத இறுதிப் பகுதிகளில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் அடுத்து வரும் தேர்தலுக்கான வி­மப் பரப் புரையே இது என்று சிலர் கருதினர். அல்லது தேர்தல் பரப்புரைக்காக இவ் வாறு நடைபெற்ற பிரச்சினைகளை கண்டும் காணாமலும் இருந்தனர். இதனால் அந்தப் பிரச்சினை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பெரிதாக எவரும் அது குறித்து பேசிக்கொள்ள வில்லை. எதிர்வரும் காலங்களிலும் இது போன்ற சூழ்ச்சிகரமான இன அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படாமல் இருக்க தமிழ்தலை வர்கள் அக்கறை கொள்ள வேண்டும். மேடைகளில் பேசி மக்களை உணர்ச்சி யூட்டி தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதை நிறுத்தி தமக்கு இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்க ளுக்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய நெருக்கடிகளை களைய இவர்கள் தலைப்பட வேண்டும்.

நன்றி சூரியகாநிதி (27.10.2013)

Sunday, October 20, 2013

வேண்டாம் இருதலைக் கொள்ளிகள்



தமிழ் மக்கள் தமது எதிர்காலம் குறித்த முடிவுகளை ஒன்றிணைந்து எடுத்திருக்கின் றனர் என்பது வரலாற்று மாற்றம். சமூகத்தில் நடி பங்கேற்றிருக்கும் மாய மனிதர்களிடையே தமக் கான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சரி யான பாதையை மக்கள் தெரிவுசெய்வதென்பது மிகக் கடினமானது. இந்தக் கடினமான பாதையில் நடிகர் களது பாத்திரங்களை எளிதில் விளங்கிக் கொள் வது அசாதாரணம்தான்.இப்படியான சிந்தனையை மழுங்கடிக்கும் காலத்துக்குள் ளேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது நடிகர்கள் பலரது முகங்கள் தமிழ்மக்களால் கிழித்தெறியப்பட்டன.இது தமிழ் மக்களது அரசியல் மூப்பை எடுத்துக் காட்டியுள்ளது.

இழுபறி முடிவுக்கு வந்தது

செப்ரெம்பர் 21 தேர்தல் முடிவடைந்து மறுநாள் முடிவுகள் வெளியானது முதலே கூட்டமைப் புக்குள்  பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டன. பதவி நிலையிலும் அதிகார நிலையிலும் கட்சி நிலையிலும் இந்தக் கருத்து மோதல்கள் வெடித் தன.
நாள்கணக்காக பேச்சுக்கள்,இழுபறிகள் தொடர்ந் தன.பதவியேற்பது யார் முன்னிலையில் என்ற சர்ச்சை கட்சிகளிடையே முரண்பாட்டை வர வழைத்தன.ஒருவாறாக முதலமைச்சர் ஜனாதி பதி முன்னிலையில் பதவியேற்க அதற்கும் எதிர்ப்புக்கள் கிளம்பின.
ஒவ்வொருவரது வேறுபட்ட விளக்கங்களுடன் அந்தப் பிரச்சினை சற்று மறக்கப்பட, அமைச்சுக் கள், உறுப்பினர்கள் பதவியேற்பதில் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்தன.
இதில்தான் கட்சிகள் அணி அணியாகப் பிரிந்து கூட்டமைப்பு என்ற சொல்லை விட்டு கட்சிகள் பதவியேற்பு நடத்தப்பட்டது.
கருத்துமுரண் காரணமாகப் பிரிந்தவர்கள் தத்தமது விருப்பப்படி பதவியேற்றனர். முள்ளி வாய்க்காலில் ஒருவரும் இன்னும் பல இடங்க ளிலும் பதவியேற்பு இடம்பெற்று இப்போது அந்த பிரச்சிçயும் முடிவுக்கு வந்துள்ளது.

பிரச்சினை முடிந்துவிட்டதா?

ஒருவாறாக தெரிவு செய்யப்பட்ட அனைவரும் தமது பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ள னர். ஆனாலும் இவர்கள் அனைவரும் ஒற்று மையோடு செயற்படுவார்களா என்ற சந்தேகம் இன்னமும் மக்கள் மனங்களில் இருந்து அகல வில்லை. இதற்குக் காரணம் தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர்களே. ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் மக்களுக்கு சந்தேகம் வரும்படியாக நடந்து கொண்டமையே இவர்கள் மீதான நம்பிக்கையீனத்தை தோற்றுவித்துள்ளது.
மாகாண கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்ட நிலையில் அதன் கன்னி அமர்வு எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த முதலாவது அமர்வில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்களா அல்லது அதன்போதும் ஏதாவது நிபந்தனைகள் உறுப்பினர்களால் விதிக்கப் படுமா என்ற கேள்விகளையும் மக்கள் எழுப்பத் தவறவில்லை.
எது எப்படியோ மக்கள் இவர்களை  நம்பி வாக்க ளித்தார்கள் . மக்களது சந்தேகத்துக்கும் கேள் விகளுக்கும் பதில் கூறவேண்டியது உறுப்பி னர்கள் அனைவ ரதும் கடமையாகும். எனவே இனியாவது குழப்பமற்ற விதத்தில் கூட்ட மைப்பை கூட்டு அமைப்பாக இயங்க வைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே மக்களது விருப்பம்; எதிர்பார்ப்பு.

அத்தனை பேரும் உத்தமர்தானா?

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக போட்டியிட்டு மக்கள் ஆணை பெற்றவர்களில் சிலர் மக்களது மனங் களை வெல்ல ஆரம்பத்திலே தவறிவிட்டனர். தாம் வெல்வதற்காக மட்டும் ஒரு வீட்டுக்காரர் களாக இயங்கியவர்கள் "சீற்' கிடைத்ததும் தமது உண்மை முகத்தை காட்டி விட்டனர்.
இவர்களது குழப்பத்துக்கு சுய காரணங்கள் என்னவாக இருந்தாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளத்தயாராகவில்லை. காரணம் ஒற்றுமை யாக இருந்து தமிழ்மக்களது வாழ்வுரிமைக்காக வும்,விடிவுக்காகவும் பணியாற்றுவோம் என் பதே இவர்களது ஆரம்ப அறிவிப்பு.
உணர்ச்சி வசனங்களைப் பேசி மக்களிடம் வாக்குக் கேட்டுவிட்டு இப்போது பதவிகளுக்காக ஒற்றுமையைக் குலைத்து வேறுவேறு திசை களைப் பார்ப்பது தமிழ்மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கொள்ளத்தக்கது.
 கூட்டமைப்பு போட்டியிட்டதா? அல்லது நான்கு கட்சிகள் போட்டியிட்டு ஆங்காங்கே வாக்குக ளைப் பெற்று பின்னர் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்தனவா என்ற கேள்வியை இவர்களது செயற்பாடுகள் எழுப்புகின்றன.
உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நான்கு கட்சிகளைக் கொண்டு இப்போது இயங் கும் நிலையில் அவை இனி தனித்தனியே இயங்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் இவர்களது இருப்பிடம் கேள்விக்குறியாகிவிடும். கடந்த காலத்தைப் போன்று அல்லாது தீர்க்கதரிசன மாக சிந்தித்து தமது தலைவர்களை தெரிவுசெய் யும் ஆற்றல் தற்போது தமிழ்மக்களுக்கு இருக் கிறது என்பதை இவர்கள் மறந்துவிடக்கூடாது.

 தமிழரசுக் கட்சி சிந்திக்கவேண்டும்

 தமிழ் அரசுக்கட்சியைச் சார்ந்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்படுவ தையோ அது தொடர்ச்சியாக இயங்குவதையோ விரும்பவில்லை. இதன் கார ணமாக அதில் உள்ளடக்கப்படும் கட்சிகளுடன் அடிக்கடி முரண்பட்டுக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்த குற்றச்சாட்டு இல்லாமற் செய்யப்பட வேண்டும். கூட்டமைப்பை பதிவுசெய்வதில் சட்டச்சிக்கல் இருந்தாலும் பதிவு செய்யமுடியாது என்று கூறமுடியாது. சட்டச் சிக்கல்களை எப்படி மாற்றியமைக்கமுடியும்?என்பதை ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படவேண்டும்.காலத்தைக் கடத்துவது தமிழரசுக்கட்சிக்கு கூட்டமைப்பை பதிவுசெய்ய விருப்பம் இல்லை என்ற கருத்தை வலுப்பெறச்செய்யும்.
ஆயுதம் ஏந்தியவர்களைக் கட்சிக்குள் உள்ள டக்கினால் பதிவுசெய்யும் போது பிரச்சினை ஏற் படும் என்பதைக் காரணம் காட்டி இந்த பொறுப் பிலிருந்து சிலர் விடுபட நினைப்பதும் தவ றானது.

எதிர்காலத்தின் தெரிவு

தமிழ்மக்களது அரசியல் மூப்பு பாராட்டப்பட்டா லும் இன்னும் கூர்மையாக்கப்படவேண்டும் என்பதும் கட்டாயமானது.அதாவது வடக்குத் தேர் தலில் தெரிவுசெய்யப்பட்டவர்களது சில நடத் தைகளே இதற்கான அடித்தளத்தை இட்டிருக் கிறது.
குறிப்பாக ஒற்றுமையைக் குலைக்ககூடிய, உள் ளிருந்தே நுள்ளிவிடக்கூடிய பண்புடையவர் களைத் தவிர்த்து மக்களுக்காக எந்த வேளை யிலும் குரல் தரக்கூடியவர்களை இனங்கண்டு வாக்களிக்கத் தலைப்படவேண்டும். தெரிவு செய்து விட்டு திட்டித்தீர்ப்பதைவிட இது ஆரோக்கி யமானது.

 கட்சிப் பெயர்களை நீக்குக

கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டால் கட்சிகளது தனிப்பட்ட பெயர்கள் நீக்கப்படும். இதன்மூலம் பதவி சண்டைகளைத் தவிர்க்கலாம்.அந்தக் கட்சி இந்தக் கட்சி என்று பேசிக்கொள்வதால் பாகுபாடும் விரோதமுமே அதிகரிக்கும்.
யாரை நீக்கவேண்டும் யாரை உள்வாங்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பர். அதற்காக கட்சிக்காரர்கள் சண்டையிட்டுக் கொள்வது அநாகரிகமானது.குறைபாடுகள், முரண்பாடுகள் வருவது தவிர்க்கமுடியாதது என்பதைக் கருத்தில் கொண்டு கட்சிகளின் பெயர்களை முன்னிலைப் படுத்துவதை தவிர்ப் பது  எதிர்காலத்துக்கு பொருத்தமானதாகும் என்று மக்கள் எண்ணுகின்றனர்.
மக்கள் தமது முடிவை மீள்பரிசீலனை செய் வதற்கு முன்னர் தமிழ்க் கட்சிகள் தமது எதிர் கால நடவடிக்கைகள் மற்றும் ஒற்றுமை உணர்வு என்பவற்றை மீள் பரிசீலிக்க வேண்டும். இல்லையயனில் மக்களது தீர்ப்பு மாற்றப்படும். காலம் அப்படி நகர்கிறது என்பதை அரசியல் வாதிகள் சிந்தித்து செயற்படுவது, தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பதுடன் அவர்களது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தும்.
நன்றி சூரியகாந்தி 20.10.2013

Monday, October 14, 2013

இன்னும் ஏன் வஞ்சிக்கிறாய் கடல் தாயே!


நள்ளிரவு 12 மணி இருள் சூழ்ந்திருந்த கடற்கரை பேர் இரைச்சலோடு பொங்கி எழுந்தது. கடற்கரை கிரா மங்கள் அந்த நடு நசியில் உறங்கியிருந்ததால் எதையுமே அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தரு ணம் பார்த்து கடல் சீற்றம் கொண்டு களவாடிச் சென் றிருக்கிறது. பல மீனவக் குடும்பங்களின் சொத்துக் கள் நாசம் செய்யப்பட்டுள்ளன இந்த வஞ்சிப்பில்.
""பைலின்'' புயலின் விளைவாகத் தான் இருக்க வேண்டும் இந்த இடர். இந்த புயல் காற்றானது யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே 1100 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டு இந்தியாவுக்கு கிழக்காக நகரத் தொடங்கியது. ஆனாலும் இதனால் இலங் கைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதென வானிலை அவதான நிலையம் தெரிவித்திருந்தது.
புயல் கடக்கும் நேரத்தில் யாழ்ப்பாணத்தில் வடம ராட்சி கிழக்கில் இருந்து முல்லைத்தீவு வரையான கரையோரத்தில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது.
அதிகாலையில் தொழிலுக்கு செல்வதற்கு சென்றவர் களே கடல் கொந்தளிப்பை அவதானித்தனர். அது மட்டுமல்லாது தங்களது உடமைகள் கடலோடு அடிபட்டு விட்டதையும் கண்டனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற சுனாமி பேரிடரின் பின்னர் கரையோர மக்கள் தங்களுக்கு வாழ்வளிக்கும் கடல் தாயுடன் கோபமாக இருக்கின்ற னர். உடமைகளுக்கு அப்பால் உயிர்களை எல்லாம் ஒரு அதிகாலைப் பொழுதில் அழித்துவிட்ட கொடு மைக் காரியாக கடல் தாய் மாறுவதற்கு நாம் என்ன துரோகம் செய்தோம் என்பதே அவர்களது கோபத் துக்கான காரணமாக இருக்க வேண்டும்.
ஆனாலும் காலம் எமக்கு தந்த பரிசு அது என்பது அவர்களது எதிர்கால மீண்டெழுகைக்கு காரணமாகி யது. தொடர்ந்து போர்ச் சூழல் அந்த மக்களை நிலை குலையச் செய்ய, 2009 இற்குப் பின்னர் படிப்படி யாக மீள் குடியேறி தமது வாழ்வாதாரத்தைக் கட்டி யயழுப்பும் முயற்சியில் அந்த மக்கள் தற்போது தான் மெல்ல மெல்ல ஈடுபட்டுக்கொண்டிருக்கின் றனர்.
இழந்த எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் உதவி அமைப்புக்களின் அனுசரணையுடன் ஒரு படகுடனாவது கட லோடும் அவர்களது முயற்சி வீட்டில் அடுப்பு புகையும் அளவுக்கு மாற்றப்பட்டிருந்தது.
இப்படியான சிறு முயற்சி அந்தக் கடற்கரை ஓரங்களில் மீளவும் ஒரு உயிர் ஓட்டத்தை ஆரம்பித்தது. ஆனாலும் நேற்று நள்ளிரவு ""பைலின்'' புயல் தாக்கத்தால் கடல் தாய் சீற்றம் கொண்டு பாவப்பட்ட மக்களின் ஆரம்ப கைத் தடங்களை அழித்து சென்றிருக்கி றாள்.

வடமராட்சி கிழக்கின் மணற்காடு, வண்ணான் குளம், கட்டைக்காடு, ஆழியவளை, வெற்றி லைக்கேணி, தாளையடி, முல்லைத்தீவில் செம்மலை, தீர்த்தக்கேணி உள்ளிட்ட கரை யோர மக்களின் வாழ்வாதார உபகரணங்கள் கடல் கொந்தளிப்பில் அள்ளிச் செல்லப்பட் டன.
பெரியளவில் வெளித் தெரியாத இடராக இது அமைந்திருக் கிறது. ஆனால் கரையோர மக்கள் ஒவ்வொருவரினதும் பல லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் கடலில் அள்ளிச் செல்லப்பட்டுள்ளன.
எந்த பாவமும் செய்யாத அந்த மக்கள் அதிகாலையில் தொழில் செய்ய முடியாமல் அந்தரிக்க விடப்பட்டுள்ளனர். அவர்களின் அழுகை "கடல்தாயே நாம் உனக்கு என்ன துரோகம் செய் தோம் ஏன் இன்னும் எங்களை வஞ்சிக்கிறாய்' என்ற வாறு நீழ்கிறது.
நன்றி சூரியகாந்தி (13.10.2013)

Tuesday, February 12, 2013

புலிகளின் மீள் எழுச்சி எந்த நாட்டில்? ஐயுறும் அமெரிக்கா

""விடுதலைப்புலிகள் 2009 மே மாதம் இலங்கையில் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களது சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து இயங்கிவருகிறது. இலங்கையில் இப்போதைக்கு புலிகள் மீண்டெழுவதற்கு வாய்ப்பில்லை எனினும் அவர்களது சர்வதேச நடவடிக்கைகள் இன்னமும் வளர்ச்சி கண்டுள்ளது''.

இப்படி அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவால்  விடுக்கப்பட்ட 2011ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா விடுதலைப் புலிகளை 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. அன்றிலிருந்து இன்றுவரை அந்த தடைச் சட்டம் நீடிக்கப்பட்டு வருகின்றது.



வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் அமெரிக்காவின் சர்வதேச குடியேற்ற மற்றும் குடியுரிமை சட்டத்தின்  பிரிவு 219 இன் கீழ் பயங்கரவாத அமைப்புகளாக நிறுவப்படுகின்றன. இந்தச் சட்டமானது பயங்கரவாதத்துக்கு எதிரான முக்கியமான செயற்பாட்டு அலகைக் கொண்டுள்ளது. அதாவது பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறைப்பதற்கான ஒரு பயனுள்ள வழிமுறையாக அது கொள்ளப்படுகின்றது.

ஒரு பயங்கரவாத அமைப்பு தடைசெய்யப்படுவதற்கு அது ஒரு வெளிநாட்டு அமைப்பாக இருத்தல், மேற்படி சட்டத்தின் அமைப்புப் பிரிவு 212இன் (ச்)(3)(ஆ)சட்டத்தின் கீழ்  பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டிருத்தல், ஐக்கிய அமெரிக்காவுக்கு அந்த அமைப்புக்களால் அச்சுறுத்தல் இருத்தல் அல்லது தேசிய அல்லது தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பொருளாதார நலன் ஆகியவற்றுக்குக் குந்தகம் விளைவித்தல் போன்ற செயற்பாடுகளைக் கொண்டிருக்கவேண்டும்.
இவ்வாறான மூன்று முக்கிய அடிப்படைக் காரணங்களைக் கொண்டு உலக அளவில் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிடப்படுகின்றன.

2011ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் அறிக்கையில், ""2009வரை விடுதலைப்புலிகள் போர்க்களத்தில் இராணுவப் பலத்துடன் இருந்தனர். இந்தக் காலப் பகுதிகளில் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத் தலைவர்கள் இவர்களால் இலக்குவைக்கப்பட்டு தாக்குதலுக்கும் இலக்கானார்கள். இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை (1993), இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாஸவின் கொலை(1991) ஆகிய முக்கிய குற்றச்சாட்டுக்கள் புலிகள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
""இதன்பின்னர் விடுதலைப்புலிகள் நீர், நிலம், வான் வழிப் படைகளாக மாற்றம் பெற்று ஒரு இராணுவப் பலத்தை தமக்குள் உருவாக்கிக் கொண்டனர். 2006 2008 வரை அவர்களது பலம் வியப்புக்குள்ளானதாகக் கருதப்பட்டது.

""2009இல் போர் உக்கிரமடைந்து விடுதலைப்புலிகளின் இராணுவப்பலம் சிதைக்கப்பட்டு அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தனது போர் வெற்றியை அறிவித்தது. இதன் பின்னர் எஞ்சிய விடுதலைப்புலிகள் வேறு நாடுகளுக்கு தப்பியோடி தமது மீள் இணைவுக்கு ஒன்றிணையும் முயற்சியில் ஈடுபடுவதாக அறிவிக்கப்படுகிறது. 2010 ஜூன் மாதம் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ரயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
""இதேபோல 2010 மார்ச் மாதம் ஜேர்மனியில் 6 தமிழர்கள் ஜேர்மனிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

""தவிர புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் மீள் இணைவுக்குத் தம்மால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமெரிக்கா கருதுகிறது. எது எவ்வாறாகினும் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்குள் உள்ளாகியுள்ளனர். அவர்கள் மத்தியில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கம் சொற்ப காலத்துக்குள் உருவெடுக்க சாதகமான எந்தவொரு வாய்ப்பும் இல்லை. இப்போது அந்தப் புலம் அதுக்கு வாய்ப்பானதாகவும் இல்லை என அமெரிக்கா கருதுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் தடை

விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக தடைசெய்துள்ள இந்திய அரசு அந்த அமைப்பு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அதன் மீதான தடையை மீண்டும் இரண்டு வருடங்களுக்கு நீடித்துள்ளது.

ஏற்கனவே விடுதலைப்புலிகள் இந்தியாவில் அணிதிரள வாய்ப்பிருப்பதாக கருத்துக்கள் எழுந்த போது இந்தியாவுக்குள் விடுதலைப்புலிகள் மீள் இணைவதற்கு எந்தவிதமான சாதக வாய்ப்புக்களும் இல்லை என இந்திய அரசு அறிவித்தது. அத்தோடு ஈழத் தமிழர் முகாம்கள் அவதானிக்கப்படுவதோடு தமிழகத்தின்   விடுதலைப்புலிகள் சார்பு அரசியல் கட்சிகளையும் தமது புலனாய்வுப்பிரிவு அவதானித்து வருவதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இந்தியாவில் மீள் இணைவதற்கான சாத்தியம் இருப்பது என்பது வதந்தியான விடயம் என்றே கருதப்படுகின்றது.

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படும் விடுதலைப் புலிகள் அந்தந்த நாடுகளில் தாம் சார்ந்த குழுக்களை உருவாக்கி, ஏற்கனவே செயற்பட்டுவந்த குழுவினருடன் இணைந்து இப்போதும் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 2011ஆம் ஆண்டு முழுவதும் விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கை சர்வதேச மட்டத்தில் பரந்த அளவில் நடைபெற்றுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவிக்கிறது.
விடுதலைப்புலிகளுக்கு ஏன் நிதி?

நிலத்தில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு புலத்தில் ஏன் நிதி சேகரிக்கப்படுகிறது? போரின்போதும் அதற்கு முன்னரும் சேர்க்கப்பட்ட நிதி விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அந்த அமைப்புக்கு ஏன் நிதி தேவைப்படுகிறது? இந்தக் கேள்வியே புலிகளின் மீள் இணைவு குறித்த எதிர்பார்ப்புக்கு உயிரோட்டத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அதாவது அந்த அமைப்பு வெளிநாடுகளில் எங்காவது மீள இணைவதற்கு சாத்தியம் இருப்பதாகவே கருதப்படுகிறது. அதேநேரம் அது வடக்கு, கிழக்கில் இப்போதைக்கு சாத்தியம் இல்லை என அமெரிக்கா மறுதலிக்கிறது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் தொடர் இயக்கத்தையே இப்பொழுது அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அதே நேரம் அமெரிக்காவின் இலங்கை மீதான வெளியுறவுக் கொள்கை இலங்கை ஒரு ஜனநாயக நாடு, அங்கு இருவேறு நாடுகள் தோன்றுவதற்கு இடமில்லை, அவ்வாறானதொரு தோற்றப்பாட்டுக்கு அமெரிக்கா ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்பதாகவே இருக்கிறது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் பற்றிசியா புட்ணிஸ் "உதயனுக்கு' அளித்த நேர்காணலில் இதனைத்  திடமாகத் தெரிவித்திருந்தார்.

புலிகள் இயக்கம் இலங்கையில் உடனடியாக மீள் உருவாக்கம் பெற வாய்ப்பில்லை என்றும், அவர்களின் தனிநாட்டு வேணவாவை ஒரு போதும் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் கூறும் அமெரிக்கா புலிகள் தொடர்ந்து நிதி சேகரித்து வருகிறார்கள் என்று கூறி அதன் மீது தடைவிதிப்பதன் மூலம் சொல்லவரும் செய்தி என்ன என்பது விரிவான ஆய்வுக்குரியது.

நிதியைத் திரட்டிக் கொண்டு இலங்கைக்கு வெளியே ஒரு நாட்டில் புலிகள் இயக்கம் ஒருங்கிணையலாம் என்கிற எச்சரிக்கையே அது. இந்தியா அதற்குச் சாதகமான நாடாக இருக்கலாம் என்றும் அமெரிக்கா தனது அறிக்கையில் கோடிகாட்டுகின்றது. ஆனால் இத்தகைய குற்றச்சாட்டை இந்தியா ஏற்கனவே மறுத்துவிட்டது.
அப்படியானால் புலிகள் எந்த நாட்டில் ஒன்றிணைகிறார்கள்? அல்லது ஒன்றிணைவார்கள்?

தமிழர்கள் புலம்பெயர்ந்து 10இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரந்து வாழும் நிலையில், அவற்றில் ஏதாவது ஒன்றில் புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுமா? அல்லது இலங்கையை அண்டிய ஒரு நாட்டில் அதன் புனரமைப்பு இடம்பெறுமா?

இதுதான் இன்று மில்லியன் டொலர் கேள்வி. தன்னை புலிகளின் தீவிர ஆதரவாளராக உதயனுக்கு வெளிக்காட்டிக் கொண்ட நபர் ஒருவர், வெளிநாடு ஒன்றில் இருந்து தொலைபேசி மூலம் தெரிவிக்கையில், ""நாங்கள் தயாராகிக் கொண்டுதான் இருக்கின்றோம். விரைவில் வருவோம்'' என்றார். இதிலுள்ள உண்மை பொய்களை அவரும், ஆண்டவனும் மட்டுமே அறிவர்.  
--

அமெரிக்க அரசின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு 
பட்டியலிட்டுள்ள பயங்கரவாத அமைப்புக்கள்
அபுநிடல் அமைப்பு (AMO)
அபு சயாப் குழு அல்அசா மாட்டைர்ஸ் பிரிகேட் (ASG)
அன்சார் அல்ஸ்லாம் இஸ்லாமிய இராணுவம் (AAMB)
அஸ்பத் அல்அன்சர் (AAI)
ஒம் சின்றிக்கியோ  (AOI)
பாஸ்கியூ பாதர்லான் அன்ட் லிபேட்ரி(AAA)
பிலிப்பைன்ஸ் புதிய மக்கள் இராணுவ கமியுனிஸ் கட்சி (AUM)
ஐரிஸ் குடியரசு இராணுவம் (ETA)
ஹமா அல்ஸ்லாமியா (CPP/NPA)
ஹமாஸ், ஹரகத் உல்ஜிகாத்ஐஸ்லாமி (CIRA)
பங்களாதேஷ் ஹரகத் உல்ஜிகாத்ஐஸ்லாமி (IG)
ஹரகத் உல் முஜாகுதீன் (HUJI)
ஹிஸ்புல்லா, இந்தியன் முஜாகுதீன் (HUJI-B)
இஸ்லாமிக் ஜிகாத் யூனியன் (HUM)
உஸ்பகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (IM)\
ஜெய்ஸ்ஈமுகமட் (IJU)
ஜிம்மா இஸ்லாமிய (IMU)
ஜுந்தலா, ஹகனே சை, கடாபி ஹிஸ்புல்லா (KH)
கேடிஸ்ரன் வேக்கேர்ஸ் பாட்டி (PKK)
லஸ்கர் ஈதெய்பா  (LT)
லஸ்கர் ஐ ஜாங்வி  (LJ)
தமிழீழ விடுதலைப்புலிகள்  (LTTE)
லிபிய ஸ்லாமிய போர்க்குழு (LIFG)
மொறோக்கோ ஸ்லாமியப் போராளிக் குழு (GICM)
முஜாகுதீன் ஈ ஹால்க் அமைப்பு  (MEK)
தேசிய விடுதலை இராணுவம் (ELN)
பலஸ்தீன் இஸ்லாமிய ஜகாத் (PIJ)
பலஸ்தீன விடுதலை முன்னணி (PLF)
பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி (PFLP)
பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி பொதுக்கட்டளை (PFLP-GC)
அல்குவைதா (அகி), அரேபிய தீபகர்ப்ப அல்குவைதா  (AQAP)
ஈராக்கிய அல்குவைதா (AQI)
இஸ்லாமிய மெக்ரப் அல்குவைதா (AQIM)
ரியல் ஈரா  (RIRA)
கொலம்பிய புரட்சிகர ஆயுதப்படை(FARC)
நவம்பர் 17 புரட்சிகர அமைப்பு  (17N)
புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணி (DHKP)
புரட்சிகர போராட்டக் குழு (RS)
அல்ஷபாப்  (AS)
ஒளிரும் பாதை  (SL)
பாகிஸ்தான் தெஹ்ரிஈ தலிபான்  (TTP)
கொலம்பிய ஐக்கிய தற்காப்புப்படை (AUC)

ஆகிய 44அமைப்புக்களேதடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது.
05.08.2012