Sunday, June 17, 2012

வணங்குவோம் மாவீரரை

http://euthayan.com/indexresult.php?id=11605&thrus=27#



தமிழ் மக்களின் வீரம் நிறைந்த வரலாற்றில் 1970 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதி முற்றிலும் மாறுபட்டது. இன ஒடுக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஒரு இளம் முகத்தின் பிரதிபலிப்பு உலகநாடுகள் வியக்கத்தக்க வகையில் ஒரு போராட்ட அமைப் பைத் தோற்றுவித்திருந்தது. அதன் முடிவும் அந்த வியப்பைத் தொட்டு இன்று தமிழ்மக்கள் கைகளிலிருந்து நழுவிப்போனது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த துன்பங்கள் துயரங்களுக்கு அப்பால் விடுதலைப் போராட்டத்தின் வரலாறு இவை எல்லாவற்றையும் மறந்து ஓர் இனத்தின் விடுதலை நோக்கிய பயணமாக நோக்கப்பட்டது.
இந்த வரலாற்றுக் காலத்தில் மரபுவழிப் போராட்டம் வளர்ச்சியடைந்து உலக நாடுகளுக்கே அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான நவீனத்துவம் நிறைந்த போராட்டமாக திடீர் வளர்ச்சி கண்டது. அந்த வளர்ச்சி திடீரென மறைந்தும் போயிற்று.
இத்தனைக்கும் மத்தியில் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்து மடிந்துபோனவர்களின் நிலை என்னவென்றே புரியாது மறைந்துபோகும் நிலையில் புதிய அறிவிப்பு மக்கள் மத்தியில் ஏதேதோ கேள்விகளை உருவாக்கியுள்ளது.
"தமிழ் மாவீரர்களின் படங்க ளைப் பெற்றோர்கள் தங்களது வீடுகளில் வைத்திருப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. அவர்கள் எங்களுக்கு எதிராகப் போர் புரிந்தபொழுதும் தமிழ் மக்களின் பிள்ளைகள் என்பதை எப்படி மறுப்பது? இதனால் அந்த வீரர்க ளின் படங்களை வீடுகளில் தொங்க விடுவதில் தவறில்லை.'' இது கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி பிரிகேடியர் ரேணுக ரொவலின் கருத்து.
அண்மையில் திருமுருகண்டி நில சுவீகரிப்பு தொடர்பான பிரச்சினை குறித்து அந்தப் பகுதி மக்களைச் ந்தித்தபோதே தளபதி இந்தப் பென்னம்பெரிய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏன் துயிலும் இல்லம் உடைக்கப்பட்டது?
2009 போர் முடிவுற்ற கையோடு இராணுவத்தினர் வன்னியில் விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை அடியோடு அழிப் பதையே தமது முதல் கட்டாய கடமையாக நிறைவேற்றியிருந்த னர். இதில் மாவீரர் துயிலும் இல் லங்கள், மாவீரர் மண்டபங்கள், மாவீரர் சிலைகள், விடுதலைப் புலிகளின் வரலாறு கூறும் இடங் கள் தமிழ் கலை பண்பாட்டு அம்ங்கள் கூடியிருந்த இடங்கள் விடு தலைப்புலிகள் சார்ந்து இயங்கிய நிறுவனங்கள் போன்ற எல்லாமே அகப்பட்டன.
போரின்போது சாவடைந்த போராளிகளைப் புனிதமான இடத்தில் புதைத்து அதைக் கோயிலாக விடுதலைப் புலிகள் மாற்றியி ருந்தனர். அந்த கல்லறைத் தெய் வங்களைப் பூசிக்கும் நாளாக நவம்பர் 27 விழாக் கோலம் பூணும். தமது உறவுகளை இழந்தவர்கள் அந்த உறவின் பெயரால் கட்டப் பட்ட கல்லறைக்கோ நினைவுக் கல்லுக்கோ அந்த நாளில் தீப மேற்றி தமது மனக் கவலைகளை போக்கிக் கொள்வதோடு உணர்வு பூர்வமான நிகழ்வாகவும் அதனை ஏற்றுக்கொள்வர்.
வடக்குக் கிழக்கில் பெரும் பாலான தமிழ் மக்களுக்கு இது ஒரு கல்லறைக் கோயில். இந்தக் கோயில்களே இராணுவத்தின் இரண்டாம் கட்ட ஆக்கிரமிப்பு வேலையாக இருந்தது. கனரக வாகனங்களின் உதவியுடன் இரவோடு இரவாகக் கல்லறைகள் வாரி அள்ளப்பட்டு வேறு தேசங்க ளில் கொட்டப்பட்டன. துயிலும் இல்லங்கள் இருந்த இடம் தெரி யாது மறைந்துபோக எருக்கலை கள் மட்டும் செழிப்போடு வளர்ந்து பூத்துக் குலுங்கின. அந்தத் தேசம்  உடல்கள் விதைக்கப்பட்ட பூமி என்பதை இன்று எருக் கலையே பறைசாற்றி நிற்கிறது.
இப்போது கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதியின் இந்தப் புதிய அறிவிப்பு தமிழ் தாய்களின் மனங்களில் பின்னர் "ஏன் எங்கள் பிள்ளைகளின் கல்லறை களை அழித்தார்கள்'' என்பதாய் மாறிவிட்டது. போரின் இறுதியில் தம்மிடம் இருந்த விடுதலைப் போராட்டம் ம்பந்தமான ஆவ ணங்கள் அனைத்தையுமே தமிழ் மக்கள் கடலில் தூக்கி வீசி விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற் பட்டது. அவற்றை வைத்திருந் தால் இராணுவத்தினர் புலிச்சாயம் பூசிவிடுவார்கள் என்ற பயப்பீதி யில் போரில் சாவடைந்த தங்கள் பிள்ளைகளின் திருவுருவப் படங் களைக்கூட அவர்கள் உடைத்து எறிந்து விட்டே செல்ல வேண்டி யிருந்தது. பெரும்பாலான பெற் றோர்களிடம் தமது பிள்ளைகளின் திருவுருவப் படங்களே இல்லை. இந்த சூழலில் போரின்போது மரணமான வீரரின் திருவுருவப் படத்தை வீட்டினில் தொங்கவிட தமிழ்த்தாய்க்கு உரிமை உண்டு என்ற அறிவிப்பால் அழிந்துபோன படங்கள் மீண்டுவிடுமா? திட்ட மிட்டு அழிக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் புத்துயிர் பெறுமா? அவர்களே அழித்தார்கள். வணங்க அவர்களேஅனுமதிக்கிறார்கள். இவையே தமிழ்த் தாய்களின் மனங்களில் எழுந்து நிற்கும் கேள்விக் கணைகளாய் உள்ளன.

பூமுகன்
நன்றி- சூரியகாந்தி (17.06.2012) 

விடுதலை பெற்றுத் தாரீர்


கம்பிக்கூட்டின் நடுவில் இருந்து தொலை தூரத்தை நோக்கிக் கொண்டு இருக்கின்றது இரண்டு கண்கள். நீண்ட நாள் இருளையே பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கண்களுக்கு எப்போது நிரந்தரமான ஒளி கிடைக்கும் என்பது இன்றுவரை நிரூபிக் கப்படாத விடயமாகிவிட்டது.
கைதுக்கு காரணம் ஏதும் இன்றுவரை தெரிவிக்கப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் ட்டம் என்பது மட்டுமே கைதுக்கு  காரணம் என்று கூறப்பட்டாலும் தமிழ் மக் களின் ஓர் இளம் மூகம் வதைக்கூடத்தில் நெடுங்காலமாக அடைக்கப்பட்டிருப்பது அவர்களின் எதிர்காலத்தை பூச்சியத்தில் தள்ளிவிடும் நிலைப்பாடே. அவர்கள் எதிர்கால அபிலாசைகளை அணுஅணுவாக நிராகரித்துக்கொண்டிருக்கிறார்கள். இல்லை நிராகரிப்பதற்குத் தூண்டப்படுகிறார்கள். அம்மா என்றும் அப்பா என்றும் அண்ணா, தம்பி, அக்கா, தங்கை என்றும் உறவுகளின்  உணர்வுகளில் இருந்து தனிமைப்படுத்தப் பட்ட மனிதக் கூட்டமாக (உணர்வுகளை வெறுக்கும்) இவர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சார்ந்து அல்லது அரசுக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற நிலை களில் தமிழ் இளைஞர்களும் யுவதிகள் ஏதோ ஒரு சாட்டை வைத்துக் கைதுசெய்யப் பட்ட இவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் என்ற பேரில் அடைத்து வைக்கப்பட்டுள் ளார்கள்.
வியாபார நிமித்தம் கொழும்புக்குச் சென்றவர்கள் முதல் வீட்டில் இரவு உறங் கிக் கொண்டிருந்தவர்கள் வரை பயங்கர வாதத் தடைச் ட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்டனர். விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றியமை, விடுதலைப் போராட்டத் திற்கு உதவியமை அரசியல்வாதிகள் போன்றோரைக் கொலை செய்ய முயற்சித் தார்கள் கொலை செய்தார்கள் என்று இவர் கள் மீது அபாண்டமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இப்போது போர் முடிவுற்று அமைதிச் சூழல், ஜனநாயகம் நிலவுவதாகக் குறிப் பிடப்படும் இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக விசாரணைகள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தினமும் தம்மை விடுவிக்கக்கோரும் அந்த மனித மனங்கள் இப்போது விரக் தியின் விளிம்பு வரை சென்று விட்டன. அந்த விளிம்பின் ஒரு உச்சியில் இருந்து தமிழ் மக்கள் மீது ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "உங்கள் உறவுகள் ஆகிய எங்களுக்கு விடுதலை பெற்றுத் தாரீர்'' இதுவே அவர்களது இறுதி நிலைப்பாடு.
தோ ஒரு நோக்கத்துக்காக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் "எதிர்கால வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அந்த இளம் மூகம் தன் இனத்தின் மீதே அந்த இரங்கல் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
வருடக் கணக்கில் இலங்கையில் உள்ள சிறைகளில், ஆயுள் தண்டனைகள் விதிக் கப்பட்டவர்கள், மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள், அவயவங்களை இழந்து சிறையில் வாடிக்கொண்டிருப்பவர்கள், முதியவர்கள், தாய்மார்கள் என்ற பலதரப்பட்ட மூகமாக இருட்டினுள் அடைக்கப்பட்டுள்ள இந்த மனிதர்களின் கோரிக்கை எந்தளவு தூரம் சாத்தியம் ஆகும் என்பது தமிழ் மக்களின் ஒன்றுபட்ட பலத்திலேயே தங்கியுள்ளது.
கல்விச் மூகம் மனித உரிமை அமைப்புக்கள் ,தமிழ் அரசியல் கட்சிகள் பொது நல ஆர்வலர்கள் நோக்கி நீட்டப்பட்டுள்ள இந்தக் கரங்கள் ஏற்கப்பட்டு அவர்களின் அவாவை நிறைவேற்றுவதற்கு அணிதிரள வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமும்.
இப்போதும் நெருக்கடி
நீண்ட வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு  உறவுகள் பார்வையிடுவது அவர்களின் மன வேதனைகளைப் பகிர்ந்துகொள்வது என்பவை இன்றுவரை மறுக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. வாரத்தில் ஐந்து தினங்கள் சிறைக் கைதிகளைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டாலும் குறுகிய நேமே அந்த ந்திப்பு நிகழலாம்.
இரண்டு கம்பிக் கூடுகளுக்கிடையில்  இந்தக் கருத்துப் பரிமாற்றம் எளிதானதல்ல. கைதிகளைப் பார்வையிட எல்லா உறவுகளும் கூடி இருப்பார்கள். குழந்தைகள், தாய்மார், சகோதரர் என்று கூட்டம் நிரம்புவதால் கைதிகள் ந்திப்பு இடத்தில் ஒரே த்தம். எதைக் கதைப்பது எதைத் தவிர்ப்பது என்று அந்த இடத்தில் சிந்திக்கவே முடியாது.
"உறவுகள் வருகிறார்கள். பாத்தின் மிகுதியால் பல வகையான சிற்றுண்டிகளும் வருகின்றன. ஆனால் அவர்களைப் பார்க்கவோஅவர்களின் வேதனைகளையும் எங்களின் வேதனைகளையும் பகிர்ந்துகொள்ளவோ முடிவதில்லை. ஒரு பணிஸுக்காகவே ஒரு ந்திப்பு நிகழ்கிறது'' என்கிறார் நான்கு வருடமாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி ஒருவர்.
காலத்திற்குக் காலம் இவர்களின் கண்ணீர் தோய்ந்த கதைகள் அவ்வப்போதான உண்ணாவிரதங்கள் கோரிக்கைகள் இன்று வரை "செவிடன் காதில் ஊதிய ங்காகவே' இருக்கின்றன.
இந்த நிலையில் இறுதிச் ந்தர்ப்பமாக சாத்வீகப் போராட்டம் ஒன்றுக்குத் தமிழ் மக்களை அரசியல் கைதிகள் கேட்டுள்ளனர். வாழ்வியலின் வேதனைகளையும் பிரிவுகளையும் புரிந்துகொள்ளாத சில அரசியல்வாதிகள் சுய லாபத்துக்காகவும் தமது இருப்புக்காகவும் கபட நாடகம் ஆடுகின்றனர். "விடுதலைப் போராட்டம் எவ்வாறு கொச்சைப் படுத்தப்பட்டதோ அது போன்றே எமது விடுதலையும் கொச்சைப் படுத்தப்படுகின்றது. இந்தச் ந்தர்ப்பத்தில் பல்கலைக் கழக மூகத்தின் ஊடா கவும் தமிழ் கலை கலாசார அமைப்புக்கள் ஊடாகவும் ர்வதேச மூகத்தின் ஊடாகவும் மனித உரிமைகள் அமைப்புக்கள் ஊடாக வும் சாத்வீகப் போரட்டம் ஒன்றை முன் னெடுத்து எமது விடுதலையை உறுதிப் படுத்த தமிழ் மக்களாகிய நீங்களே முன்வர வேண்டும்.'' என்பது கைதிகளின் கோரிக்கையாக இருக்கிறது. 
"பணத்துக்காக வாதாடும் கூட்டமாக இருக்காது விடுதலைக்காகக் குரல் கொடுக் கும் மூகமாய் ட்டவாளர் அனைவரும் மாற வேண்டும். இதுவே எமது அன்பு கலந்த உரிமை நிறைந்த வேண்டுகோள்'' என அரசியல் கைதிகள் தமது கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
எது எப்படியாயினும் தமிழ் மக்கள் சார்பாக ஏதோ ஒன்றுக்காக குரல் கொடுக்க முற்பட்டவர்களே இன்று அரசியல் கைதிகளாக மாறியுள்ளனர். அந்த தார்மீக உணர்வுக்கு மதிப்பளித்து அவர்களின் விடுதலைக்காகப் போராட வேண்டியது தமிழ் மக்களின் கடமையே.

விகேஎம்

நன்றி-சூரியகாந்தி (17.06.2012) 

Saturday, June 9, 2012

இடம் பிடித்தலும் அடம்பிடித்தலும்

http://euthayan.com/indexresult.php?id=11435&thrus=12

விளையாட்டுமைதானம் யாருக்கு சொந்தம்?

  வவுனியா மாவட்டத்தில் முதல் தடவையாக பெண்கள் பிரிவில் உதைபந்தாட்டச் ம்பியனாக கனகராயன் குளம் மகாவித்தியாலய அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அளவில் இந்த அணி மாகாண மட்டப் போட்டியில் கலந்து கொள்ளவேண்டும். தவிர இந்தப் பாடசாலையில் கூடைப்பந்து, கரப்பந்து அணிகளும் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று மாகாண மட்டத்துக்குச் செல்லவுள்ளன.
 மாணவர்களின் திறமை அவர்களின் ஆவல் என்பவற்றை வெளிப்படுத்துவதோடு பாடசாலைக்கும் புகழைத் தேடித் தரக்கூடிய வகையில் இந்த நிகழ்வுகள் அமைந்துள்ளன. வரவேற்பைப் பெற்றுள்ளன.
போருக்குப் பின்னர் வன்னியில் கல்விச் செயற்பாடுகள் சீர்குலைந்து தற்போது படிப்படியாக சீர்ப்படுத்தப்பட்டுவரும் நிலையில் மாணவர்களது திறமைகளையும் அவர்களது ஆளுமைகளையும் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு கல்விச் மூகத்தவரதும், துறைசார்ந்த அதிகாரிகளதும் கடமை.
        மாகாண மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உதைபந்தாட்ட பெண்கள் அணி அதற்கான பயிற்சியில் ஈடுபடுவதற்கு விளையாட்டு மைதானம் இல்லாது தவிக்கின்றது என்பதே வேதனையானதும் வியப்பானதுமான விடயம். போர் முடிவுற்று மீளக் குடியமர்வுச் செயற்பாடுகளின் பின்னர் கனகராயன் குளம் மகாவித்தியாலயம் மீள ஆரம்பிக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் அந்தப் பாடசாலைக்கு என இருக்கும் விளையாட்டு மைதானம் தற்போது பிறிதொரு  தரப்பின் பாவனையில் இருப்பது என்பது ஏற்றுக் கொள்ளமுடியாது. இதற்கும் மேலாக பாடசாலை நிர்வாகத்தினர் அதனைக் கண்டும் காணாமல் இருப்பது மாணவர்களது முயற்சிக்குத் தடையான ஒத்துழைப்பு.
    மாவட்ட ரீதியில் உதைபந்தாட்டப் போட்டியில் ம்பியன்களான இந்தப் பாடசாலையின் பெண்கள் அணி மாகாண மட்டத்தில் பங்குபற்றும்போது பல்வேறு வால்களை எதிர்கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் தினமும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஆனால் அந்தச் சூழல் பாடசாலையில் இல்லை.
"ம்பந்தமே இல்லாத சிலர் முழுநேரமாக
 மைதானத்தைப் பயன்படுத்த 
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 இந்தப் பாடசாலையில் படித்து
 வெளியேறிய எங்களுக்கு 
அரை மணிநேரம் கூட மைதானத்தைப்
பயன்படுத்த அனுமதியில்லை''
எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி பொலிஸாருக்கு நடைபெறவுள்ள தேசிய மட்ட விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றுவதற்காக கனகராயன் குளம் பொலிஸ் பிரிவுப் பொலிஸார் குறித்த பாடசாலை மைதானத்தை முழு நேரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். முதலில் அனுமதியின்றி பொலிஸார் மைதானத்தைப் பயன்படுத்துவதாக சொல்லப்பட்ட போதும், பின்னர்  அனுமதியுடனேயே அவர்கள் மைதானத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. இது விடயத்தில் பாடசாலையின் அதிபரையும், விளையாட்டுக்குப் பொறுப்பான ஆசிரியரையும் கேட்டபோது வாரத்துக்கு இரண்டு தடவை குறிப்பிட்ட நேரத்துக்குள் மாணவர்கள் பாடசாலை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடலாம் எனப் பதில் தந்துள்ளனர்.
  பாடசாலை மாணவர்கள் தமக்குச் சொந்தமான மைதானத்தில் விளையாடுவதற்கு அனுமதி பெறவேண்டும் என்பதும், குறிபிட்ட நாள்களே மைதானத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் வேடிக்கையான விடயம். பாடசாலைக்குப் புகழ் தேடித் தரக்கூடிய போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்கு குறித்த மாணவிகள் தமது மைதானத்தில் பயிற்சி பெற முடியாமல் இருப்பது துரதிர்ஷ்டமானது.
  கனகராயன் குளத்துக்கு பொது விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளபோதும் அது போருக்குப் பின்னர் சீர் செய்யப்படவில்லை. பிரதேச பையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த மைதானத்தில் ஏ9 வீதி திருத்தப் பணிகளுக்காக கிரவலும் கற்களும் பறிக்கப்பட்டு அதற்கான களஞ்சியமாக அந்த மைதானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார பை தம்மிடம்  அனுமதி பெறவில்லை எனத் தெரிவிக்கும் பிரதேச பையினர் மைதானத்தை சீர் செய்ய விரைவில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஆனாலும் அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது கேள்வியே.
  இதனால் பொது மைதானம் ஒன்று இல்லாத நிலையில் கிராமத்து இளைஞர்களும் பாடசாலை மைதானத்தையே மாலைவேளைகளில் பயன்படுத்தி வந்தனர். எனினும் அதற்கான அனுமதி பாடசாலை நிர்வாகத்தினரால் மறுக்கப்பட்ட நிலையில் இளைஞர்கள் வீதியில் நின்று வேடிக்கை பார்க்கும் நிலை தோன்றியுள்ளது.
  "ம்பந்தமே இல்லாத சிலர் முழுநேரமாக மைதானத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பாடசாலையில் படித்து வெளியேறிய எங்களுக்கு அரை மணிநேரம் கூட மைதானத்தைப் பயன்படுத்த அனுமதியில்லை'' என்று குறைபட்டுக் கொள்கிறார்கள் ஊர் இளைஞர்கள்.
     கனகராயன் குளம் பொலிஸ் நிலையம் அதற்கென வழங்கப்பட்ட காணியில் இயங்காது கமநல சேவை நிலையத்துக்குச் சொந்தமான காணியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கு அருகில் இருக்கும் இவர்கள் தமது பிரத்தியேக விளையாட்டுப் போட்டிக்காக பாடசாலை மைதானத்தை அதிகாரத்தின் அனுமதியுடன் பயன்படுத்தி வருகின்றனர்.
 இந்தச் ம்பவம் குறித்து வலயக் கல்வி அலுவலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டதாகத் தகவல் இல்லை. பாடசாலை நிர்வாகத்தினர் மாணவர்களது தேவை அறிந்தும் இந்தச் செயற்பாட்டைக் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது.
   கனகராயன் குளம் மகாவித்தியாலயத்தில் 700 வரையான மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர். உயர்தரம் வரை உள்ள இந்தப் பாடசாலையில் பல்வேறு வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் மாகாண மட்டப் போட்டி ஒன்றுக்கு பெண்கள் அணி தெரிவு செய்யப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று. அவர்களை எதிர்காலத்தில் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு பாடசாலைக்குள்ளது. எனவே இது விடயத்தில் ம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தி மாணவர்களது தேவைகளை நிறைவேற்ற செயல்பட வேண்டும், பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்று ஊர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
  வன்னியில் போரின் பின்னர் தனியார், அர காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதோடு நிலச் வீகரிப்புகளும் வகை தொகையின்றி இடம்பெற்று வருகின்றன.
தனியாருக்குச் சொந்தமான காணியிலேயே கனகராயன் குளத்தில் விகாரை ஒன்று எழுந்திருப்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய விடயம்.
 பொலிஸார் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடவேண்டுமாயின் அவர்களுக்கென்று மைதானங்களை ஏற்பாடு செய்து பயிற்சியில் ஈடுபடவேண்டும். இதற்கு அந்தத் துறைசார்ந்த கட்டமைப்புகளிடம் மாற்று ஏற்பாடுகளைக் கோவேண்டும். பதிலாக அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் பாவனை நிலங்களைத் தமது தேவைக்குப் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
  எனவே மாணவர்கள் மேல் கரிணை கொள்பவர்கள் அவர்களுக்கான தற்போதைய தேவையைப் பூர்த்திசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.   * 


நன்றி- சூரியகாந்தி(10.06.2012)