Tuesday, February 12, 2013

புலிகளின் மீள் எழுச்சி எந்த நாட்டில்? ஐயுறும் அமெரிக்கா

""விடுதலைப்புலிகள் 2009 மே மாதம் இலங்கையில் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களது சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து இயங்கிவருகிறது. இலங்கையில் இப்போதைக்கு புலிகள் மீண்டெழுவதற்கு வாய்ப்பில்லை எனினும் அவர்களது சர்வதேச நடவடிக்கைகள் இன்னமும் வளர்ச்சி கண்டுள்ளது''.

இப்படி அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவால்  விடுக்கப்பட்ட 2011ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா விடுதலைப் புலிகளை 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. அன்றிலிருந்து இன்றுவரை அந்த தடைச் சட்டம் நீடிக்கப்பட்டு வருகின்றது.



வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் அமெரிக்காவின் சர்வதேச குடியேற்ற மற்றும் குடியுரிமை சட்டத்தின்  பிரிவு 219 இன் கீழ் பயங்கரவாத அமைப்புகளாக நிறுவப்படுகின்றன. இந்தச் சட்டமானது பயங்கரவாதத்துக்கு எதிரான முக்கியமான செயற்பாட்டு அலகைக் கொண்டுள்ளது. அதாவது பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறைப்பதற்கான ஒரு பயனுள்ள வழிமுறையாக அது கொள்ளப்படுகின்றது.

ஒரு பயங்கரவாத அமைப்பு தடைசெய்யப்படுவதற்கு அது ஒரு வெளிநாட்டு அமைப்பாக இருத்தல், மேற்படி சட்டத்தின் அமைப்புப் பிரிவு 212இன் (ச்)(3)(ஆ)சட்டத்தின் கீழ்  பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டிருத்தல், ஐக்கிய அமெரிக்காவுக்கு அந்த அமைப்புக்களால் அச்சுறுத்தல் இருத்தல் அல்லது தேசிய அல்லது தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பொருளாதார நலன் ஆகியவற்றுக்குக் குந்தகம் விளைவித்தல் போன்ற செயற்பாடுகளைக் கொண்டிருக்கவேண்டும்.
இவ்வாறான மூன்று முக்கிய அடிப்படைக் காரணங்களைக் கொண்டு உலக அளவில் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிடப்படுகின்றன.

2011ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் அறிக்கையில், ""2009வரை விடுதலைப்புலிகள் போர்க்களத்தில் இராணுவப் பலத்துடன் இருந்தனர். இந்தக் காலப் பகுதிகளில் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத் தலைவர்கள் இவர்களால் இலக்குவைக்கப்பட்டு தாக்குதலுக்கும் இலக்கானார்கள். இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை (1993), இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாஸவின் கொலை(1991) ஆகிய முக்கிய குற்றச்சாட்டுக்கள் புலிகள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
""இதன்பின்னர் விடுதலைப்புலிகள் நீர், நிலம், வான் வழிப் படைகளாக மாற்றம் பெற்று ஒரு இராணுவப் பலத்தை தமக்குள் உருவாக்கிக் கொண்டனர். 2006 2008 வரை அவர்களது பலம் வியப்புக்குள்ளானதாகக் கருதப்பட்டது.

""2009இல் போர் உக்கிரமடைந்து விடுதலைப்புலிகளின் இராணுவப்பலம் சிதைக்கப்பட்டு அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தனது போர் வெற்றியை அறிவித்தது. இதன் பின்னர் எஞ்சிய விடுதலைப்புலிகள் வேறு நாடுகளுக்கு தப்பியோடி தமது மீள் இணைவுக்கு ஒன்றிணையும் முயற்சியில் ஈடுபடுவதாக அறிவிக்கப்படுகிறது. 2010 ஜூன் மாதம் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ரயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
""இதேபோல 2010 மார்ச் மாதம் ஜேர்மனியில் 6 தமிழர்கள் ஜேர்மனிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

""தவிர புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் மீள் இணைவுக்குத் தம்மால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமெரிக்கா கருதுகிறது. எது எவ்வாறாகினும் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்குள் உள்ளாகியுள்ளனர். அவர்கள் மத்தியில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கம் சொற்ப காலத்துக்குள் உருவெடுக்க சாதகமான எந்தவொரு வாய்ப்பும் இல்லை. இப்போது அந்தப் புலம் அதுக்கு வாய்ப்பானதாகவும் இல்லை என அமெரிக்கா கருதுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் தடை

விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக தடைசெய்துள்ள இந்திய அரசு அந்த அமைப்பு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அதன் மீதான தடையை மீண்டும் இரண்டு வருடங்களுக்கு நீடித்துள்ளது.

ஏற்கனவே விடுதலைப்புலிகள் இந்தியாவில் அணிதிரள வாய்ப்பிருப்பதாக கருத்துக்கள் எழுந்த போது இந்தியாவுக்குள் விடுதலைப்புலிகள் மீள் இணைவதற்கு எந்தவிதமான சாதக வாய்ப்புக்களும் இல்லை என இந்திய அரசு அறிவித்தது. அத்தோடு ஈழத் தமிழர் முகாம்கள் அவதானிக்கப்படுவதோடு தமிழகத்தின்   விடுதலைப்புலிகள் சார்பு அரசியல் கட்சிகளையும் தமது புலனாய்வுப்பிரிவு அவதானித்து வருவதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இந்தியாவில் மீள் இணைவதற்கான சாத்தியம் இருப்பது என்பது வதந்தியான விடயம் என்றே கருதப்படுகின்றது.

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படும் விடுதலைப் புலிகள் அந்தந்த நாடுகளில் தாம் சார்ந்த குழுக்களை உருவாக்கி, ஏற்கனவே செயற்பட்டுவந்த குழுவினருடன் இணைந்து இப்போதும் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 2011ஆம் ஆண்டு முழுவதும் விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கை சர்வதேச மட்டத்தில் பரந்த அளவில் நடைபெற்றுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவிக்கிறது.
விடுதலைப்புலிகளுக்கு ஏன் நிதி?

நிலத்தில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு புலத்தில் ஏன் நிதி சேகரிக்கப்படுகிறது? போரின்போதும் அதற்கு முன்னரும் சேர்க்கப்பட்ட நிதி விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அந்த அமைப்புக்கு ஏன் நிதி தேவைப்படுகிறது? இந்தக் கேள்வியே புலிகளின் மீள் இணைவு குறித்த எதிர்பார்ப்புக்கு உயிரோட்டத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அதாவது அந்த அமைப்பு வெளிநாடுகளில் எங்காவது மீள இணைவதற்கு சாத்தியம் இருப்பதாகவே கருதப்படுகிறது. அதேநேரம் அது வடக்கு, கிழக்கில் இப்போதைக்கு சாத்தியம் இல்லை என அமெரிக்கா மறுதலிக்கிறது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் தொடர் இயக்கத்தையே இப்பொழுது அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அதே நேரம் அமெரிக்காவின் இலங்கை மீதான வெளியுறவுக் கொள்கை இலங்கை ஒரு ஜனநாயக நாடு, அங்கு இருவேறு நாடுகள் தோன்றுவதற்கு இடமில்லை, அவ்வாறானதொரு தோற்றப்பாட்டுக்கு அமெரிக்கா ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்பதாகவே இருக்கிறது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் பற்றிசியா புட்ணிஸ் "உதயனுக்கு' அளித்த நேர்காணலில் இதனைத்  திடமாகத் தெரிவித்திருந்தார்.

புலிகள் இயக்கம் இலங்கையில் உடனடியாக மீள் உருவாக்கம் பெற வாய்ப்பில்லை என்றும், அவர்களின் தனிநாட்டு வேணவாவை ஒரு போதும் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் கூறும் அமெரிக்கா புலிகள் தொடர்ந்து நிதி சேகரித்து வருகிறார்கள் என்று கூறி அதன் மீது தடைவிதிப்பதன் மூலம் சொல்லவரும் செய்தி என்ன என்பது விரிவான ஆய்வுக்குரியது.

நிதியைத் திரட்டிக் கொண்டு இலங்கைக்கு வெளியே ஒரு நாட்டில் புலிகள் இயக்கம் ஒருங்கிணையலாம் என்கிற எச்சரிக்கையே அது. இந்தியா அதற்குச் சாதகமான நாடாக இருக்கலாம் என்றும் அமெரிக்கா தனது அறிக்கையில் கோடிகாட்டுகின்றது. ஆனால் இத்தகைய குற்றச்சாட்டை இந்தியா ஏற்கனவே மறுத்துவிட்டது.
அப்படியானால் புலிகள் எந்த நாட்டில் ஒன்றிணைகிறார்கள்? அல்லது ஒன்றிணைவார்கள்?

தமிழர்கள் புலம்பெயர்ந்து 10இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரந்து வாழும் நிலையில், அவற்றில் ஏதாவது ஒன்றில் புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுமா? அல்லது இலங்கையை அண்டிய ஒரு நாட்டில் அதன் புனரமைப்பு இடம்பெறுமா?

இதுதான் இன்று மில்லியன் டொலர் கேள்வி. தன்னை புலிகளின் தீவிர ஆதரவாளராக உதயனுக்கு வெளிக்காட்டிக் கொண்ட நபர் ஒருவர், வெளிநாடு ஒன்றில் இருந்து தொலைபேசி மூலம் தெரிவிக்கையில், ""நாங்கள் தயாராகிக் கொண்டுதான் இருக்கின்றோம். விரைவில் வருவோம்'' என்றார். இதிலுள்ள உண்மை பொய்களை அவரும், ஆண்டவனும் மட்டுமே அறிவர்.  
--

அமெரிக்க அரசின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு 
பட்டியலிட்டுள்ள பயங்கரவாத அமைப்புக்கள்
அபுநிடல் அமைப்பு (AMO)
அபு சயாப் குழு அல்அசா மாட்டைர்ஸ் பிரிகேட் (ASG)
அன்சார் அல்ஸ்லாம் இஸ்லாமிய இராணுவம் (AAMB)
அஸ்பத் அல்அன்சர் (AAI)
ஒம் சின்றிக்கியோ  (AOI)
பாஸ்கியூ பாதர்லான் அன்ட் லிபேட்ரி(AAA)
பிலிப்பைன்ஸ் புதிய மக்கள் இராணுவ கமியுனிஸ் கட்சி (AUM)
ஐரிஸ் குடியரசு இராணுவம் (ETA)
ஹமா அல்ஸ்லாமியா (CPP/NPA)
ஹமாஸ், ஹரகத் உல்ஜிகாத்ஐஸ்லாமி (CIRA)
பங்களாதேஷ் ஹரகத் உல்ஜிகாத்ஐஸ்லாமி (IG)
ஹரகத் உல் முஜாகுதீன் (HUJI)
ஹிஸ்புல்லா, இந்தியன் முஜாகுதீன் (HUJI-B)
இஸ்லாமிக் ஜிகாத் யூனியன் (HUM)
உஸ்பகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (IM)\
ஜெய்ஸ்ஈமுகமட் (IJU)
ஜிம்மா இஸ்லாமிய (IMU)
ஜுந்தலா, ஹகனே சை, கடாபி ஹிஸ்புல்லா (KH)
கேடிஸ்ரன் வேக்கேர்ஸ் பாட்டி (PKK)
லஸ்கர் ஈதெய்பா  (LT)
லஸ்கர் ஐ ஜாங்வி  (LJ)
தமிழீழ விடுதலைப்புலிகள்  (LTTE)
லிபிய ஸ்லாமிய போர்க்குழு (LIFG)
மொறோக்கோ ஸ்லாமியப் போராளிக் குழு (GICM)
முஜாகுதீன் ஈ ஹால்க் அமைப்பு  (MEK)
தேசிய விடுதலை இராணுவம் (ELN)
பலஸ்தீன் இஸ்லாமிய ஜகாத் (PIJ)
பலஸ்தீன விடுதலை முன்னணி (PLF)
பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி (PFLP)
பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி பொதுக்கட்டளை (PFLP-GC)
அல்குவைதா (அகி), அரேபிய தீபகர்ப்ப அல்குவைதா  (AQAP)
ஈராக்கிய அல்குவைதா (AQI)
இஸ்லாமிய மெக்ரப் அல்குவைதா (AQIM)
ரியல் ஈரா  (RIRA)
கொலம்பிய புரட்சிகர ஆயுதப்படை(FARC)
நவம்பர் 17 புரட்சிகர அமைப்பு  (17N)
புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணி (DHKP)
புரட்சிகர போராட்டக் குழு (RS)
அல்ஷபாப்  (AS)
ஒளிரும் பாதை  (SL)
பாகிஸ்தான் தெஹ்ரிஈ தலிபான்  (TTP)
கொலம்பிய ஐக்கிய தற்காப்புப்படை (AUC)

ஆகிய 44அமைப்புக்களேதடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது.
05.08.2012

நெல்லியடியில் புலிக்கொடி


 புலனாய்வாளரின் செயலால்
உள்ளூர மகிழ்ந்தனர் மக்கள்

விடுதலைப்புலிகள் கடந்த 2009 மே மாதம் 19 இல் தோற் கடிக்கப்பட்டுவிட்டனர். இனி விடுதலைப்புலிகளால் நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மக் கள் அமைதியாகவும், நிம்மதியா கவும் வாழமுடியும்'' என்று அறி வித்தது இலங்கை அரசு.

விடுதலைப் புலிகள் இரா ணுவ ரீதியாகத் தோற்கடிக்கப் பட்ட பின்னர் பலருக்கு உழைப்பு, பிழைப்பு அற்றுப் போய்விட் டது. காட்டிக் கொடுப்புக்கள், துரோகத்தனங்கள் என்பவற்றுக் காக விலை மதிக்க முடியாத சம் பளம் பெற்ற சிலர் இன்று கை கடிக்கக் காத்திருக்க வேண்டிய வர்களாகி விட்டனர். அவர்களுக் கான துணைப்படை, ஒட்டுப் படைக் கொடுப்பனவுகள் நிறுத் தப்பட்டுவிட்டன.

இவர்கள் பிழைப்பு நடத்து வதற்கு நாட்டில் அமைதியோ சமாதானமோ தொடர்வது பொருத் தமற்றது. அவர்களுக்கு எங்கோ ஒரு மூலையில் குழப்பம் நிகழ வேண்டும். யாருக்காவது நெருக் கடி கொடுக்க வேண்டும் இதன் மூலம்தான் அவர்களால் தமது வயிற்றை நிரப்ப முடியும்.

இது இலங்கை அரசும் அவர் களும் சேர்ந்து வகுத்த கோட் பாடு. தொட்டிலில் இருந்து இவர்க ளுக்கு ஊட்டப்பட்ட துரோகத் தனம், புலிகள் இல்லை என்றால் மட்டும் போய்விடுமா என்ன?

வடக்குகிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுவதன் மூலம் அவர் கள் பொருளாதார ரீதியாகத் தமது கட்டுமானங்களை வளப்படுத்து வதோடு சமூக ரீதியான சிந் தனைகளிலும் ஆர்வம் கொள் வர். இதனால் விடுதலை பற்றிய, உரிமைகள் பற்றிய எண்ணப் பாங்குகள் இவர்கள் மத்தியில் மீண்டும் துளிர்விட்டு மீண்டும் ஓர் இன விடுதலைப் போராட் டத்துக்குத் தயாராகிவிடுவார் களோ என்ற அச்சமும் கேள்வியும் சிங்களத் தரப்பில் தொடர்ந் தும் இருந்து வருகிறது.

இதுவே வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இலங்கை அரசு எல் லாக் கட்டமைப்புகளிலும் உள் நுழைந்து கொள்ளவும் மாற்றம் செய்து கொள்ளவும் நெருக்கடி கொடுக்கவும் காரணமாக அமை கிறது.

புலிக்கொடியை ஏந்துவது புலிகளா?
யாழ். குடாநாட்டில் நடை பெற்று முடிந்த இரண்டு மக்கள் போராட்டங்களில் புலிக்கொடி ஓர் உள்ளீடாக நுழைந்துள்ளது. ஆனால் 2009ற்குப் பின்னர் இதுவரையில் நடந்த  எந்தவொரு போராட்டத்தி லும் போராட்டக்காரர்கள் தனி ஈழம் கோரியோ, விடுதலைப் புலி களை மீண்டும் கட்டியெழுப்பக் கோரியோ குரல் கொடுக்க வில்லை. அவர்களுக்கு அந்த ஆசைகள் உள்ளூர இருந்தாலும் பகிரங்கமாக அவர்கள் அதனை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. பதிலாக தமது நிலங்களில் அமைதியாகவும் நிம் மதியாகவும் வாழவேண்டும் என்றே தமக்குரிய உரிமைகளைக் கேட்டு தமிழ் மக்கள் போராடுகின்றனர்.

இப்படிப் போராட முயல்ப வர்களையும் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களை யும் புலிகள் என்று முத்திரை குத்துவதற்காகவே அண்மைய நாள் களில் யாழ். குடாநாட்டில் புலிக் கொடிகள் பறந்தன.

கடந்த வாரம் நெல்லியடியில் தமிழ்த் தேசிய முன்னணியால் ஏற் பாடு செய்யப்பட்டு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது புலிக்கொடி மீண்டும் ஒரு தடவை பறந்தது. மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் புலிக் கொடி ஏந்திய வாறு வட்டமிட்டனர். இவர்கள் கறுப்புக் கண்ணாடிகளால் மறைக் கப்பட்ட, கறுப்பு உடைகளைத் தரித்திருந்தனர். அரைக்காற் சட் டையை ஒருவர் அணிந்திருந் தார்.
இவர்களது மோட்டார் சைக்கி ளின் இலக்கத் தகட்டில் NP  HP 2680 என்ற இலக்கம் பொறிக்கப் பட்டிருந்தது.

இந்த இலக்கம் இலங்கையில் எந்தப் பாகத்திலும் பாவனையில் இருந்தாலும் அதன் உரிமையா ளர் யார் என்பதை பதிவுகளில் இருந்து பொலிஸாரால் இலகுவா கக் கண்டறிய முடியும். ஆனால், பொலிஸாரிடம் இவர்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டு மோட்டார் சைக்கிள் எண் வழங் கப்பட்டு நான்கு நாள்கள் கடந்த போதும் இதுவரை பொலிஸார் அதன் மீது நடவடிக்கை எடுத்து மோட்டார் சைக்கிள் உரிமை யாளரைக்கூடக் கைது செய்ய வில்லை.

இது தொடர்பாக தமிழ்த் தேசிய முன்னணியின் சட்டத் தரணிகளால் பருத்தித்துறை நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த மோட்டார் சைக்கிளின் உரி மையாளர் யார் என்ற விவரம் வெளிவந்தேயாக வேண்டும். ஆனால், அப்போது அது திருடப் பட்ட மோட்டார் சைக்கிள் என்று பொலிஸார் அறிக்கை சமர்ப்பித் தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பொலிஸாரின் வேண்டுகை
நெல்லியடியில் மக்கள் போராட் டம் நடத்துவதற்கு திட்டமிடப் பட்டிருந்த நிலையில் அது நாட் டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்றும், அசம்பாவிதங்களை உரு வாக்கும் என்றும் பருத்தித்துறை நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்திருந்தனர். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டு போராட்டத் துக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாருக்குப் பணிக்கப்பட் டிருந்தது.

இந்த நிலையில் போராட்ட தினத்தன்று நெல்லியடியில் பொலி ஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களின் வேலை, போராட்டக்காரர்களுக்குப் பாது காப்பளித்து அங்கு யாராவது குழப்பம் விளைவிக்க முற்பட் டால் அவர்களைத் தடுத்து நிறுத் துவதே.

ஆனால் எந்தப் பதற்றமும் இன்றி, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், பொலிஸா ருக்கு முன்பாகவே புலிக் கொடியை எடுத்து விரித்து உயர்த்திப் பிடித் தார்கள். மிக லாவகமாக மோட் டார் சைக்கிளில் இரண்டு மூன்று தடவை போராட்டக்காரர்களைச் சுற் றிய மர்ம நபர்கள் புலிக் கொடியை ஏந்தியவாறே அங்கிருந்து ஓடி மறைந்தனர்.

அவர்களைத் தடுத்து நிறுத் தவோகைது செய்யவோ, இல்லை இடைஞ்சல் தானும் செய்யவோஅங்கிருந்த ஒரு பொலிஸார் கூட முயற்சிக்கவில்லை. கைகட்டி  வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அவர்களால் ஏன் இந்த நபர்களைக் கைது செய்யமுடியவில்லை?
கிறிஸ் பூத சம்பவங்கள்
யாழ்ப்பாணத்தில் கிறிஸ் பூத சர்ச்சை எழுந்திருந்தபோது மக்கள் வீடுகளுக்குள் நுழையும் கிறிஸ் பூதங்களை பிடிக்க முற்பட்ட  சமயத்தில் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். காரணம் "பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக் கக் கூடாது' என்பதே.
அப்படி இருக்கையில் சட் டத்தை மதிக்காது புலிக்கொடியை ஏந்திய மர்ம நபர்களைப் பிடிக் காது பொலிஸார் பார்த்துக் கொண் டிருந்தது எதற்காக?
போர் முடிந்த பின்னர் யாழ்ப் பாணத்தில் புலிக்கொடி காட்டப் பட்ட இரண்டாவது சம்பவம் இது. இதற்கு முன்னர் மே முத லாம் திகதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய பேரணி யின் கடைசிப் பகுதியில் முதல் தடவையாக புலிக்கொடி காட்டப் பட்டது.

அப்போது புலிக் கொடி காட் டியவர்களையும் இன்று வரைக் கும் பொலிஸார் கைது செய்ய வில்லை. அரச சார்பு ஊடகம் ஒன்றைச் சேர்ந்தவர்களேஅந்தப் புலிக்கொடியைத் தூக்கிக் காட்டி னார்கள் என்று அப்போது தக வல்கள் வெளியாகி இருந்தன.

இந்த மே தினப் பேரணி ஐக் கிய தேசியக் கட்சியாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலும் இணைந்து நடத்தப்பட்டது.

நெல்லியடி ஆர்ப்பாட்டமோ தமிழ்த் தேசிய முன்னணியால் நடத்தப்பட்டது. வவுனியா சிறைச் சாலையில் இராணுவ சிறப்பு அதி ரடிப் படையினராலும் பொலிஸா ராலும் கடுமையாகத் தாக்கப் பட்டு உயிரிழந்த நிமலரூபனின் படுகொலையைக் கண்டித்தும், வடக்கில் தமிழ் மக்களின் காணி கள் அபகரிக்கப்படுவதைக் கண்டித் துமே நெல்லியடியில் போராட் டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தை முன் னரே தடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. தவிர யாழ்ப்பாணத்தில் இருந்து வடமராட்சி @நாக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் வல்லைப் பகுதி யில் இராணுவத்தினரால் மறிக்கப் பட்டு பயணிகள் அனைவரும் அச்சுறுத்தப்பட்டனர். அதன் பின்னரே போராட்டத்தில் புலிக் கொடி காட்டப்பட்டது.

இந்த இரு சந்தர்ப்பங்களின் போதும் புலிகளின் ஆதரவாளர் களால் புலிக்கொடிகள் காட்டப் படவில்லை என்பது உறுதிப்படுத் தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலிகள் ஆதரவுச் சக்திக ளும் அதனை உறுதிப்படுத்தியுள் ளன. ஆகவே இது தமிழர்க ளுக்கு எதிரான சக்திகளால் உயர்த் திப் பிடிக்கப்பட்ட புலிகள் கொடி கள் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் மக்களின் உரிமைக் காகக் குரல் கொடுக்கும் அனை வருமே புலிகள் என்று அரச தரப் பும் இராணுவமும் கருதுவதன் வெளிப்பாடேஇந்தப் புலிக் கொடிகளின் பறப்பு என்று அடித் துக் கூறலாம்.

நாட்டின் பாதுகாப்புக்கோ இறையாண்மைக்கோ குந்தகம் ஏற்படுத்தக்கூடிய வகையில் யாராவது செயற்பட்டால் அவரைக் கைது செய்ய பொலிஸாருக்கு உரிமை உள்ளது. ஆனால் நெல்லியடியில் அது நடைபெறவில்லை. அப்படியானால் புலிக் கொடியால் நாட்டின் இறையாண்மைக்குப் பாதகம் ஏதுமில்லை என்று பொலிஸார் கருதி விட்டார்கள் அல்லது அவர்களுக்கு அப்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்பதே அர்த்தமாகும்.

நாவாந்துறையில் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபரைத் துரத்திச் சென்ற இளைஞர்கள் ஆத்திரமடைந்து இராணுவத்தினரோடு முரண்பட்டபோது அந்த ஊரே ஓர் இரவோடு சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில்  போராட்டங்களின்போது புலிக்கொடி ஏந்துபவர்களால் மட்டும் எப்படித் தப்பிச் செல்ல முடிந்தது? அவர்கள் மட்டும் எப்படித் தவறவிடப்பட்டார்கள்? அவர்கள் ஏன் நடுவீதியிலே போட்டு நசுக்கப்படவில்லை?

ஏனெனில் அதற்கெனக் காரணம் இருந்தது. உதயனுக்குக் கிடைத்த தகவல்களின்படி, இராணுவப் புலனாய்வாளர்களால் தற்போது பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள முன்னாள் புலிகள் இருவரே நெல்லியடியில் புலிக் கொடியை ஏந்தியவர்கள். அவர்களுக்கு இடைஞ்சல் ஏதும் ஏற்படாமல், பொலிஸாரால் தடைகள், இடைஞ்சல்கள் வராமல் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த வேறு இருவரும் கூடவே அனுப்பப்பட்டிருந்தனர்.

பருத்தித்துறையில் இருந்து இவர்கள் புறப்படுவதற்கு முன்னர், நெல்லியடியில் எது நடந்தாலும் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டாம், மேலிடத்தைக் கேட்டுச் செய்யவும் என்ற உத்தரவு அங்கிருந்த பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தது.

புலிக் கொடியைக் காட்டிவிட்டுத் திரும்பிவிட வேண்டும் என்பது மட்டுமே முன்னாள் புலிகளுக்கு இடப்பட்டிருந்த முக்கிய கட்டளை. வேறு எந்த அசம்பாவிதங்களிலும் சிக்கல்களிலும் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதும் அவர்களுக்கு மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நெல்லியடியில் இருந்து புறப்பட்ட அவர்கள் கொடிகாமம் வீதி வழியாகச் சென்று மறைந்தனர்.
எது எப்படியானாலும் புலிகள் இன விடுதலைக்காகப் போராடினார்கள். அவர்களது போராட்டம் திட்டமிட்டு துரோகிகளாலும், சர்வதேச வல்லரசுகளாலும் நசுக்கப்பட்ட நிலையில் அவர்களின் சின்னங்கள் ஒரு கருப்பொருளாகவே வெளிவருகின்றன. புலிக்கொடி ஏந்தினால் பிரச்சினை ஏற்படுத்தலாம் என்பது புலனாய்வாளர்களின் @நாக்கமாக இருக்கலாம். அது வீரத்தின் கொடி என்பது தமிழ் மக்களின் உரிமை சார்ந்த நிலைப்பாடு. அவ்வப்போது அதனைத் தூக்கிக் காட்டுவதால் தமிழ் மக்கள் மகிழ்ச்சியே அடைகிறார்கள் என்பதைப் புலனாய்வாளர்கள் உணரும் வரைக்கும் புலிக்கொடி ஏந்தும் படலம் தொடரும்.

--
பொலிஸாருக்கு எதுவுமே தெரியாதாம்

நெல்லியடிப் போராட்டத்தின் போது புலிக் கொடி யுடன் நடமாடியவர்கள் பற்றி எமக்கு எதுவுமே தெரி யாது. அப்படிஒரு சம்பவம் நடைபெற்றதாக இது வரை எங்களுக்கு எந்தவகையான முறைப் பாடும் கிடைக்கவில்லை. அப்படி ஒரு முறைப் பாடும் அந்த நபர்கள் தொடர்பான தகவல்களும் கிடைக்கப்பெறுமிடத்து உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வோம். இது நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களு டான வாராந்த சந்திப்பின்போது யாழ்.மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்த கருத்து.

நெல்லியடியில் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கவென நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கடமைப் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடை பெற் றால் அதனைக் கட்டுப்படுத்தவது. அத்தனை பொலி ஸாரும் பார்த்திருக்கவே புலிக்கொடி வீதியில் பறந்து சென்றது.

இந்த நிலையில் புலிக்கொடி பறந்த விடயம் தமக்கு தெரியாது என்றும், அது பற்றி எமக்கு எந்த வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் யாழ்.மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கூறியிருப் பது பொலிஸாரின் கடமையுணர்வை வெளிப்படுத்து கின்றது. 

22.07.2012

தொலைந்துபோனோர் பற்றி கவலையுறும் ஐ.சி.ஆர்.சி.



வடக்குகிழக்கில் 1990 தொடக்கம் 2011 வரையான காலப் பகுதியில் 15,780 பேர் காணா மல் போயுள்ளனர். இவர்களில் 751 பேர் பெண்கள், 1494 சிறுவர்கள்.



மனிதாபிமான நடவ டிக்கைகள் இலங்கை யில் ஒரு பகுதி மக் களுக்குப் புறக்கணிக் கப்பட்டிருந்தது அல்லது வரைய றுக்கப்பட்டிருந்தது. இதன் காரண மாக பெரும் எண்ணிக்கையான மக்கள் பல் வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டதுடன் தீராத பிரச்சினையாக இன்றுவரை அவர்க ளுக்கு அது தொடர்ந்து கொண் டிருக்கிறது.
போர் நடைபெற்றுக் கொண்டி ருந்த காலத்திலும் அதன்பின் னரான காலத்திலும் சர்வதேச தன்னார்வத் தொண்டு அமைப்பு கள் வடக்கு, கிழக்குப் பகுதியில் மனிதாபிமான மனித நேயப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் அதன் சுதந்திரம் மட்டுப்படுத் தப்பட்டதாகவே இருந்தது. இந்த மட்டுப்பாடு பின்வந்த காலத்தில் சில அமைப்புகளுக்கு முற்றாக மறுக்கப்பட்டது. இதன் காரண மாக அந்த அமைப்புகள் தமது நடவடிக்கைகளைக் குறுக்கி அல் லது கைவிட்டுச் சென்றன. இதன் விளைவுகள் தமிழ் மக்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.
இன்றுவரை தொலைந்து போன தனது பிள்ளையைத் தேடித் தாயும் கணவனைத் தேடி மனைவியும் என்று உறவுகளைப் பிரிந்த அவலத்தில் பல்வேறு தரப்பினரிடம் கையேந்தி நிற்கின் றனர். வீதியில் இறங்கிப் போராடு கின்றனர். இருந்தபோதும் பொறுப் பான நம்பகத் தன்மையான பதில் ஏதும் இவர்களுக்கு எட்டுவதாக இல்லை. தொலைந்தவர்கள் தொலைந்தவர்களாகவும் தேடு பவர்கள் தேடுபவர்களாகவும் இருக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் அரசின் வற்புறுத்தல் காரணமாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தனது பணியை நிறுத்த வேண்டி ஏற்பட்டது. குறிப்பாக 1990 களில் இருந்து வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மனிதாபிமான பணி யாற்றி வந்த இந்த அமைப்பு அத னைக் குறுக்கி கொழும்புக்குச் சென்றது. இருந்த போதும் அந்த அமைப்புத் தனக்குக் கிடைத்த தரவுகளின்படி தேடுதல் முயற்சி யைக் கைவிடவில்லை. ஆனால் தேடுதலுக்கான களம் குறுக்கப் பட்ட நிலையில் அது தனது பணி யைப் பூரணப்படுத்த முடிய வில்லை. இவ்வாறான நிலையி லேயே கடந்த ஆண்டுக்கான தனது ஆண்டறிக்கையில் இலங்கை யில் காணாமற்போனோர் தொடர் பிலான தனது கவலையை வெளி யிட்டுள்ளது.

ஐ.சி.ஆர்.சி.அறிக்கை

வன்னியில்  இறுதிப் போர் முடி வடைந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில்  காணாமல் போயிருந்த 15,000 இற்கும் அதிகமான பொது மக்களது நிலைமை இன்னும் தெரியவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற செய்தி இன்றுவரை தெரியாதுள்ளது என்று சர்வதேச செஞ்சிலுவைக்குழு தனது 2011 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது. 512 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் உலகநாடு களில் இன்றுவரை தொடரும் மனித அவலங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.  இலங்கை தொடர்பில் அந்த அமைப்பு கவலையான ஒரு கண்ணோட்டத்தை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக  1990 தொடக்கம் 2011 வரையான காலப் பகுதியில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து (குறிப்பாக வடக்கு, கிழக்கு)  15,780 பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் அவர்களின் நிலை என்னவென்று இன்று வரை தெரியாதுள்ளது என்றும், காணாமற்போனோரின் பட்டிய லில் 751 பேர் பெண்கள், 1494 சிறுவர்கள் என்றும் அந்த அமைப்பு கோடிட்டுள்ளது. இறுதிப் போரின் பின்னர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் 2,80,000 வரையான மக்கள் தங்க வைக் கப்பட்டனர். அதில் பெரும்பா லானவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட் டுள்ளனர்.

எனினும் ஆயிரக் கணக்கானவர்கள் தொடர்ந்தும் அந்த முகாம்களிலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இளம் சமூ கத்தினர் பலர் தடுப்பு முகாம் களிலும் புனர்வாழ்வு மையங் களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காணாமல் போனோரது நிலை குறித்துத் தகவல்களைப் பெறுவது பெரும் நெருக்கடியாகவே உள்ளது. போர் நடைபெற்ற பகுதிகளுக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்  சென்றுவருவதற் கான தடை கடந்த ஆண்டு ஜூலை மாதம் விலக்கிக் கொள்ளப்பட் டாலும், அந்தப் பகுதிகளுக்கு சுயாதீனமாக மனிதநேயப் பணியாளர்கள் சென்று வருவது இன்றும் அரச தரப்பால் கடுமை யான நிபந்தனைகளுக்கு உட்பட் டதாகவே அனுமதிக்கப்படுகிறது.

தடுப்பு முகாமில் இருந்து பலர் கடந்த ஆண்டின் இறுதியில் விடுவிக்கப்பட்டனர். போர் நடைபெற்ற காலத்திலும், அது முடிவடைந்த உடனடிக் காலப் பகுதியிலும் தமது உறவுகளுடன் தொடர்புகளை இழந்த ஆயிரக் கணக்கானவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் முறைப்பாடு செய்து தமது உறவுகளுடன் இணைந்து கொண்டனர். ஆனாலும் அந்த நடவடிக்கை முழுமை பெற வில்லை. இதற்குக் காரணமாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருந்து செஞ்சிலுவைச் சங்கம் துரதிஷ்டமாக வெளியேறிய சம்பவம் அமைந்துள்ளது. பிரிந்து போயுள்ள குடும்பங்களின் நிலை குறித்தும் அவர்களை மீள இணைப்பது குறித்தும் பாதுகாப்பு அமைச்சுடன் எமது அமைப்புத் தொடர்ந்து பேசி வருகிறது என்று அந்த அமைப்பு தனது நீண்ட அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறது.

இலங்கையில் ஐ.சி.ஆர்.சி.

இலங்கையில் ஐ.சி.ஆர்.சி. 1980 ஆம் ஆண்டு தனது பணி யைத் தொடங்கியது. ஆயுத மோதல்களின் போது மத்தியஸ் தம் வகிப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு அளிப் பது, கைதிகள், போர்க் கைதிக ளின் பரிமாற்றம், குடும்ப உறவு களுக்கு இடையிலான தொடர்பை ஏற்படுத்துவது, குடியுரிமை சமூ கத்தின் பாதுகாப்பு, வன்முறை களால் பாதிக்கப்பட்டவர்களுக் கான மறுவாழ்வு, விசேட கள மருத்துவ சேவை போன்ற பல் வேறு சேவைகளை வடக்கு, கிழக்கு பகுதி உட்பட இலங்கையின் பல பாகங்களுக்கும் பரவலாக்கியி ருந்தது.

குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உயிர் அர்ப்பணிப்பு டன் ஐ.சி.ஆர்.சி. தனது சேவையை வழங்கியிருந்தது. ஓமந்தை சோத னைச் சாவடியில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக் கும் இடையிலான சூனியப் பிர தேசத்தில் மத்தியஸ்தம் வகித் தமை அந்த அமைப்பின் முக்கிய மான பணியாக அமைந்தது. தவிர 2009 இறுதிப் போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் மருத்துவமனைகள் இலங்கை இராணுவத்தின் வான்தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மக்களுக்கான அவசர மருத்துவ சேவை முற்றாகத் தடைப்பட்ட வேளை தனது கப்பல் சேவை மூலம் இயலுமானவரை மக்களுக்கு உயிர்க்காப்பு வழங்கியது.
இவ்வாறான மனித நேய மனிதாபிமானப் பணிகளின் தொடர்ச்சி போரின் போது காணாமற்போனோரைத் தேடியறியும் பணி வரை விரிவாக்கப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட சில நாள்களுடன் வடக்கு, கிழக்கு பகுதியில் இருந்து தனது சேவையைக் குறுக்க வேண்டிய நிலை ஐ.சி.ஆர்.சிக்கு ஏற்பட்டது.

1990ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் சேவையாற்றி வந்த இலங்கை செஞ்சிலுவைக்குழு 2011.02.24ஆம் திகதியு டன் தனது பணியை நிறுத்திக் கொண்டது. இதேபோல 13 வரு டங்களாக வவுனியாவில் சேவை யாற்றிய ஐ.சி.ஆர்.சி. 2011 மார்ச் சில் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. இதேபோல @நார்வே செஞ்சிலுவைச் சங்கமும் மார்ச் 2012இல் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்துக்கு ஆறுதலாக இருந்த அமைப்பு இடை நடுவில் விட்டுச் சென்றது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஏ9 சாலை துண்டிக்கப்பட்டிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் நெருக் கடிகளுக்கு மத்தியில் ஐ.சி.ஆர்.சி. தன்னாலான சேவைகளை மக்களுக்கு வழங்கியிருந்தது.

இதேபோல் வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் தொடர் பிலும் வெளியிடங்களில் இருந்த மக்கள் தொடர்பிலும் தகவல் களைப் பெற்று, பிரிந்து வாழ்ப வர்களை இணைக்கும் செயற் பாட்டை முன்னெடுத்தது. அத் தோடு தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட முன் னாள் விடுதலைப்புலி உறுப்பி னர்கள் தொடர்பிலான விவரங் களையும் சேகரித்தது. போர் முடி வுற்ற பின்னரான காலப் பகுதியில் வவுனியாவில் இயங்கிய ஐ.சி. ஆர்.சி. மக்கள் கூட்டத்தால் எந்த நேரமும் நிரம்பியிருந்தது. குறிப்பாகத் தமது உறவுகளைத் தேடித்தருமாறு அங்கு பலர் மண்டியிட்டிருந்தனர். இந்தப் பணியின்போது பிரிந்த குடும் பங்கள் பல தமது உறவுகளோடு இணைந்து கொண்டன.

 எனினும் தொடர்ச்சியாக சேவை வழங்க முடியாத காரணத்தால் பதிவு செய்யப்பட்ட காணாமற் போனோர் சம்பந்தமான விவரங் களை எடுத்துக் கொண்டு ஐ.சி.ஆர்.சி. கொழும்புக்குச் சென்றுவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஏமாற்றமே கிடைத்தது. பின்னர் அவர்கள் அரசியல் வாதிகளின் கால்களில் விழவும், இடைத் தரகர்களின் ஏமாற்று வித் தைகளுக்குத் துணைபோகவும், இலஞ்சம் பெறுபவர்களுக்கு காசைக் கரைக்கவும் கதி ஏற்பட் டது. இந்த நிலை அந்த மக்க ளுக்கு இன்றுவரை தொடர் கிறது.                            *

08.07.2012

வலி தெரியா முட்கள்...


தொலைபேசிகள் அடிக்கடி பேசிக்கொண்டன "உனக்கு எங்கே வந்திருக்கு' இது தான் அந்த உரையாடலின் முதலா வது கேள்வி. இப்படியான அழைப் புக்கள் பல எனக்கும் வந்தன. கேள்வி "உனக்கு எங்கே வந் திருக்கிறது' எனது பதில் "எனக்கு எங்கேயும் வரவில்லை'..... கேள்வி களும் பதில்களும் தொடர்ந்து கொண்டேசென்றன. பலருடன் உரையாடல் அலுத்தே போய் விட்டது. பேஸ்புக்கிலும் ஒன் லைனில் இருப்பவர்களும் இதே கேள்வியைத்தான் பகிர முனைந் தார்கள் இதனால் பல தடவைகள் ஓப்லைனிலேயே இருந்து விட் டேன்.

வடக்குக் கிழக்கில் பட்ட தாரிப் பயிலுநர்களை ஆள்சேர்ப் புச் செய்வதற்கான நேர்முகத் தேர்வும், நியமனமும் குறுகிய காலத்துக்குள் முடிவுற்றன. இதன் போது நீண்டகாலமாக வேலை யற்று இருந்த பட்டதாரிகள் பலர் உள்வாங்கப்பட்டனர். இதன் போது  அதிர்ஷ்டவசமாக கடந்த வருடம் பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்தவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அந்த அதிர்ஷ் டம் எனக்குத் துரதிர்ஷ்டமானது.
மீள் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிய அதற்கான பெறுபேறு ஆறுமாதங்களின் பின்னர் மாணவர்களின் அழுத்தம் காரணமாக வெளியிடப்பட்டது. பெறுபேறு எப்போது வெளியாகும் என்று கேட்பதற்குப் பல தடவைகள் ஏறியிறங்க வைக்கப்பட்டேன். பிழை என்மீது ஆகை யால் ஏறித்தான் ஆகவேண்டும்.

சம்பள உயர்வு, மேலதிக கொடுப்பனவு போன்ற தமது உரிமைகளுக்காக அந்த நெருக்கடியான காலப்பகுதியில் வேலை நிறுத்தத்திலும் போராட்டத்திலும் பல்கலைக்கழக கல்வி சார், கல்வி சாரா ஊழியர்கள் மாறிமாறி ஈடுபட்டிருந்தனர்.

இந்தப் பிரச்சினை எனக்கு மட்டுமாக இருக்கவில்லை. பலபேரின் பிரச்சினை. அதன் தன்மை களும் வடிவங்களுமே மாறுபட்டிருந்தன.
ஐயா, எங்களுக்கு படிப்பு முடிந்து விட்டது என்று ஒரு கடிதம் தந்தியள் எண்டால் அதையாவது காட்டி வேலை எடுத்திடுவம், அழாத குறையாக ஒருநாள் பீடாதிபதியிடம் கெஞ்சினேன். ""நீங்கள் தவறை விட்டுவிட்டு எங் களை வந்து கேட்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை'' I can’t do that’ இதை மட்டுமே சொல்லி முடித்த அவர், கடிதம் தர மறுத்துவிட்டார். ஐயா ஆங்கிலப் பாடம் தான் உள்ளது. அதன் பெறு பேறும் அந்த டிப்பாட்மன்டில் போட்டுவிட்டார்கள். இந்தச் சம்பவங்களை மட்டுமாவது உறு திப்படுத்திக் கடிதம் தாருங்கள் என்றே நான் கேட்டிருந்தேன். அது எந்த விதத்திலும் நியாயமற் றது என அவர் மறுத்துவிட்டார்.

ஒன்றுமே செய்யமுடியாது. எனக்குப் பின்னும் பலர் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள் அந்தத் துணிவோடு நான் திரும்பி வந்துவிட்டேன்.

எல்லாப் பாடங்களும் பூர்த்தி செய்யாமையால் ஸ்ரேட்மன்ட் எடுப்பதற்காக விண்ணப்பத்தை முன்பு பூர்த்தி செய்யவில்லை. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே அதனைப் பூர்த்தி செய்து கொடுத்திருந்தேன்.
பட்டதாரிகளுக்கான நிய மனம் தொடர்பில் மாணவர்க ளின் நெருக்கடி கூடியதால் இரக்க மனதோ என்னவே கல்வி சார் ஊழியர்களின் பணிப் புறக் கணிப்பின் மத்தியிலும் துணை வேந்தரின் அறிவுறுத்தலின் கீழ் துரிதமாக பாதிக்கப்பட்டவர்க ளுக்கு ஸ்ரேட்மன்ட் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்போதும் போட் மீற்ரிங், செனட் மீற்ரிங் இழுபறி. ஒருவா றாக கடந்த 10ஆம் திகதி ஸ்ரேட் மன்ட் தருவதாகச் சொன்னார்கள். போனபோது பரீட்சைக் கிளைக்கு எனது "பயில்' வந்திருக்கவில்லை. எனது அடையாள அட்டையை வேண்டி இருந்த பயில்களுக்குள் இறங்கித் தேடிய ஊழியர் ஒருவர் ""உங்கள் பயிலைக் காணவில்லை கீழேதான் கேட்க வேண்டும்'' என் றார். சரி பறவாயில்லை என்று விட்டுக் கீழே இறங்கிச் சென்று அடையாள அட்டையைக் காட்டி இந்தப் பயிலை மேலே அனுப்ப வில்லையாம் என்றேன். எனது பயிலைத் தேடிச் சென்ற ஊழியர் திரும்பவும் வந்து என்னை ""நீங் கள் ஸ்ரேட்மன்ட் போம் நிரப்பிக் கொடுத்தீர்களா'' என்று கேட்டார். (அவரே இரண்டு வாரத்துக்கு முன்னர் எனது விண்ணப்பத் தைப் பொறுப்பேற்றிருந்தார்) தேடி எடுத்து எப்படியோ மேலே அனுப்பி வைத்திருந்தார்கள், "துரிதமாக' ஸ்ரேட்மன்டையும் நான் பெற்றுவிட்டேன். வெளி யில் வந்தபோது சில மாணவர் கள் மேலே பார்த்துக் கண்டபடி திட்டியவாறே இருந்தார்கள்.

இந்தச் சம்பவம் எனக்கு நேர்ந்த உண்மை அனுபவம். அவர் அவர் தங்கள் சுயத்துக்காக தங்கள் தங்களின் நியாயங்களை முன்வைப்பார்கள். நான் எனது வேலைக்காக எனது   சுயத்தை முன்வைத்திருந்தேன். பல்கலைக் கழகம் பல்வேறு காரணங்களைக் காட்டி  இழுத்தடிப்புச் செய்தது. படித் தவர்கள் மத்தியில் மனிதாபி மானம் எங்கு போயிற்று என்ற கேள்வி! இதில் நானும் ஒருவ னாக இருக்கலாம். பிழை என் மீதிருக்கலாம். காலத்தைத் தவற விட்டது எனது தவறே. ஆனால் நாட்டுச் சூழல் கல்வியைத் தொடர முடியாத நிலைமை போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக் கப்பட்ட மாணவர்களின் கேள்விகள் ""இவர்களுக்கு மனமே இல்லையா?'' என்பதே.

அவர்கள் தாமாகத் தவறி ழைக்கவில்லை. பரீட்சையில் "பெயில்' விடவெளிச் சூழல் பல இதற்குக் காரணமாக இருக்கின் றது. தினமும் நேரிலும் ஊடகங் களிலும் இந்த அவலங்களை நாங்களேபார்த்தோம், கண்டோம், கேட்டோம். எங்கள் சமூகம் திருந்தி முன்னுக்கு வரவேண்டும் என்பதை விட நான் முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எங்களிடத்தே மேலோங்கி உள்ளது.

பிழையை விட்டுவிட்டு அதைச் சரி என நியாயப்படுத்த நான் முன்வரவில்லை. இப்படி யான பிழைகளை முதலில் படிக் கும்போது மாணவர்கள் விடக் கூடாது. பிழையை விட்டுவிட்டு அதை மன்னியுங்கள் மாற்றி அமையுங்கள் என்று மேலிடத் தில் உள்ளவர்களை கெஞ்சக் கூடாது. அவர்களின் அதிகாரம் எங்குவரை செல்கின்றது எனச் சோதிக்கக் கூடாது. அவர்கள் நீதிபதிகள் நாங்கள் குற்றவாளி கள். முள் இருக்கும் இடத்தைப் பார்த்துத்தான் கால் வைக்க வேண்டும். முள் குற்றிவிட்டால் முள்ளுக்கு வலி தெரியாது. அது எமக்கே வலிக்கும், விளைவை யும் தரும்.                      *


எனது தவறு
பல்கலைக்கழகத்தில் நான் ஆண்டுகள் கற்கைநெறியை 2008இல் தொடர்ந்த நான், அதன் முதலாம் வருடத்தின் இரண்டாம் அரையாண்டுப் பரீட்சையின்போது ஆங்கிலப் பாடத்தில் சித்தியடையத் தவறினேன். எனக்கு அதன் பின்னர் மீள் பரீட்சை மூலம் அந்தப் பாடத்தை சித்தியெய்துவதற்கு இரண்டு சந்தர்ப்பங்கள் இருந்தன. முதலாவது சந்தர்ப்பத்தை அக்கறையின்றி விட்டு விட்டேன்.

இரண்டாவது சந்தர்ப்பத்தில் பரீட்சைக்கு விண்ணப்பித்தேன். பரீட்சை நடைபெற்ற தினத்தில் உடல் உபாதை காரணமாகத் தோற்றவில்லை. அதற்கான மருத்துவச் சான்றிதழும் நான் கொடுக்கவில்லை.

கடைசி சந் தர்ப்பம் 2011 நடைபெறவேண்டிய இரண் டாம் அரையாண்டுப் பரீட்சை யில் தோற்றுவதுதான். அதற் காக விண்ணப்பித்தேன். ஆனா லும் பல்கலையில் இடை யிடையே ஏற்பட்ட தடங்க லால் குறித்த பாடப் பரீட்சை 2012 ஜனவரியிலேயே நடை பெற்றது. இது என்னுடைய பெருந்தவறு.

15.07.2012

பட்டங்கள் பலவிதம் நாமும் ஒருவிதம்


பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற எல்லாத் துறைகளையும் சேர்ந்த மாணவர்களுக்கே பட்டதாரிப் பயிலுநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறெனின் இவர்களின் கற்கை எந்தத் தராசில் நிறுக்கப்பட்டது என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

எப்படியானாலும் நாங்கள் பட்டதாரிகளே! எங்களுக்கு அரசு நியமனம் வழங்க வேண்டும் என்பதில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியாளர்கள்  தம்மாலான எல்லா முயற்சிகளிலும் இறங்கியுள்ளனர்.


கைக்கெட்டியது  வாய்க்கு எட்ட வில்லை என்ற நிலையோடு பல ஏமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேசெல்கின்றன. ஆழம் தெரியாமல் காலை விட்டதைப் போல அரசும் எல்லா நிர்வாகச் செயற்பாடுகளிலும் "கும்பல் லில் கோவிந்தா' என்ற கணக் காக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.
ரூபாவின் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த, நாட்டின் பொருளாதாரத்தை தக்கவைக்க வேலை யற்றோர் பிரச்சினையைத் தீர்க்க, அயல் உறவை வலுப்ப டுத்த, சர்வதேச நெருக்கடியி லிருந்து விடுபட என்ற அவர் களின் அயராத உழைப்புக்கள் அர்த்தம் அற்ற கண்ணோட்டமாகவே வெளிப்படுகின்றன.

அண்மையில் இலங்கை முழுவதும் வேலையற்ற பட்ட தாரிகளுக்குப் பட்டதாரிப் பயி லுநர் நியமனம் வழங்கப்பட் டது. இதில் நீண்ட நாள்களாக வேலையற்று இருந்த பலருக்கு வேலை கிடைத்தது.

6 மாதங்களுக்கு, மிகச் சொற்பமான கொடுப்பனவுகளுடன் இவர்களைப் பயன்படுத்தி அரசு நாட்டின் அனைத்துப் புள்ளி விவரங்களையும் சேகரிக்கவுள்ளது.
இதன் மூலம் அரசு நல்ல இலாபம் கிடைக்கும். இந்த வேலையை அரச உத்தியோகத்தில் இருப்பவர்களைப் பயன்படுத்திச் செய்பவர்களாயின் பல கோடி செலவாகும். அரசின் நுட்பமான அறிவு இதற்கான பணச் செலவைக் குறைத்திருக்கிறது என்று பலர் பேசிக்கொள்கிறார்கள்.

அரசின் சூழ்ச்சிமிக்க நிர்வாக மீள் கட்டமைப்பு நடவடிக்கைகள் மறுபுறத்தில் ஒரு சாராருக்கு பெரும் பாதிப்பாக மாறியுள்ளன.  இந்த நியமனத் தின் போது  உயர் தேசிய விருது எச்.என்.டி.ஏ, எச்.என்.டி.எம். ஆகிய கற்கை நெறியைச் சேர்ந்த வர்கள் வடக்கில் புறக்கணிக் கப்பட்டுள்ளனர்.
நியமனம் வழங்கப்பட்ட சில நாள்களில் இந்தக் கற்கைகள் இரண்டும் பட்டப் படிப்புக்குரிய தரம் அற்றவை என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் தெரிவிக்கப்பட்டு இவர்களுக்கான நியமன விலக்கல் தொடர்பில் விலக்களிக்கப்பட்டிருந்தது.

இந்த இரு கற்கைநெறியாளர்களும் தமது கற்கை முடிவில் தகுதி வாய்ந்த பட்டப்படிப்புக்கு சமனான பட்டத்தை உடையவர்கள் என்ற நிலைப்பட உயர் கல்வி அமைச்சாலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவாலும் பிரேரிக்கப்பட்டுள்ளனர்.

1990ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 இல் 46/90 பகுதி iii இன் படி இந்தக் கற்கை நெறிக்குரியவர்கள் பல்கலைக்கழகப் பட்டப் படிப்புக்குத்  தகுதியான பட்டத்தை உடையவர்கள் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தவிர வெளிநாடுகளில் இந்த இரு கற்கை நெறிகளும்  இளமாணி பட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு முதுமாணி கற்கை நெறிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். உதாரணமாக லண்டனில் இந்தக் கற்கை நெறிகளை உடையவர்கள்  மேற்படிப்பை தொடர அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது ஐக்கிய ராச்சியத்தில் அரச அதிகாரம் பெற்ற கற்கை நெறி சான்றிதழ் வழங்கக் கூடிய க்ஓ Nஅகீஐஇ நிறுவனம் இலங்கையில் உயர் தேசிய கற்கைநெறியாளர்களது கற்கையை இளமாணி கற்கையாக ஏற்றுக்கொள்கிறது.

பொதுவாக உலகத் தரத்தில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார், அறிவுசார் கற்கைநெறிகளை வழங்கக்கூடிய பல்கலைக்கழகங்களும் அதன் பகுதி நிறுவனங்களும் The Association of Commonwealth Universities  என்ற அமைப்பின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.
இவ்வாறு பதிவு செய்யப்படும் பல்கலைக்கழகங்களும் பகுதி நிறுவனங்களும் வழங்கும் பட்டம்/ சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன்றாகவே கருதப்படுகிறது.

இதன் அடிப்படையில் மேற்படி இரு கற்கைநெறியாளர்களதும் சான்றிதழ்கள் பட்டப்படிப்புக்குச் சமானானவை அல்ல என இலங்கை அரசே பரிந்துரை செய்கிறது?
அடுத்ததாகச் சில மாவட்டங்களில் இதே கற்கை நெறியாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாவட்டங்களில் 2010, 2011 ஆம் ஆண்டுக்கான பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவில்லை.
வடக்கில் 2010, 2011 ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கு நிய மனம் வழங்கவே வேண்டும் என்பதில் அமைச்சர்கள் இரு வர் நல்ல சேவை செய்தனர். இந்த சேவையின் விளைவோஎன்னவோஅந்த இரு கற்கை நெறியாளர்களும் தூக்கி வீசப் பட்டுள்ளனர்.

உயர் தேசிய கற்கையாளர்களுக்கு குறித்த நியனம் வழங்கப்படுவதாயின் 2010, 2011பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனம் பறிமுதல் செய்யப் பட வேண்டும் என ஒருமைக் கருத்து இப்போது எழுந்துள்ளது.

நியமனம் வழங்கப்பட்ட பின் அதை இரத்துச் செய்வது என்பது சாத்தியமா என கேள்விகள் எழுப்பப்பட்டாலும் இலங்கை அரசைப் பொறுத்தவரை அது சாத்தியமான ஒன்றுதான்.
பட்டதாரிகள் பயிலுநர்களாகவே ஆள்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எந்த நிறுவனத்தின் கீழும் சம்பளம் எதை யும் பெறவில்லை. இவர்களுக்கு ஒரு ஊக்குவிப்புத் தொகை மாத்திரமே வழங்கப்படுகிறது. இதனால் பயிற்சிக் காலம் முடிவடைந்ததும் இவர்களை நிறுத்திவிட அரசு முயற்சி எடுப்பதாகச் சிலர் பேசிக்கொள்கின்றனர்.

தமக்கு நியனம் வழங்கப்படவில்லை எனக் கூறி போராடி வரும் உயர் தேசிய கற்கையா ளர்களுடன் மறுபுறத்தில் எங்க ளது நியனம் பறிக்கப்பட்டு விட் டது என இன்னுமொரு தொகை யினர் போராட வாய்ப்பளிக்க விரும்பாது என்பது எவ்வளது தூரம் உண்மையானது என்ப தும் கேள்விக்குரியது.
தகைமை பெரிது
உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியாளர்களின் கல்வித் தகைமை, தொழில் தகைமை என்பன வேறு. உங்களுக்கு பட்டதாரிப் பயிலுநர்களாக நியமனம் தருவது பொருத்த மற்றது. உங்கள் துறைக்கேற்ற வேலையையே பெற்றுத்தர வேண் டும் என்று போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் மத்தியில் இன் னொரு பேச்சும் உள்ளது.
பல்கலைக் கழகத்தில் இது போன்ற எல்லாத் துறைகளை யும் சேர்ந்த மாணவர்களுக்கே பட்டதாரிப் பயிலுநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வா றெனின் இவர்களின் கற்கை எந் தத் தராசில் நிறுக்கப்பட்டது என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

எப்படியானாலும் நாங்கள் பட்டதாரிகளே! எங்களுக்கு அரசாங்கம் நியமனம் வழங்க வேண்டும் என்பதில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியாளர்கள்  தம்மாளான எல்லா முயற்சிகளிலும் இறங்கியுள்ளனர்.  இங்கு யார் பக்கம் பிழை இருக்கிறது. எவர் முயற்சி வெற்றிபெறும் என்பது யாருக்கும் இதுவரை தெரிந்திருப்பதாக இல்லை.

இலங்கை அரசு முன்னர் குறிப்பிட்டதைப் போல் தம்மை வளர்த்துக்கொள்ள அரும்பாடு பட்டு வருகிறது. இருந்தாலும் அது அவர்களுக்கு பெரும்பாடாகவே உள்ளது.  இந்த நிலையில் இலங்கையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நிய மனத்திலும் அவர்கள் மீதான அக்கறையிலும் அரச நிர்வாகம் அசமந்தப் போக்குடன் செயற்படுவது மட்டுமல்லாமல் முழு நாட்டுக்கும் பாதகமான பக்கங்களையே சிந்திக்கிறது.

அரசியல் தலையீடுகள் ஒருபுறம் நிர்வாகக் குழப்பங்கள் மறு புறம் அரசுக்குள் பல்வேறு முரண் பாடுகளைத் தோற்றுவிக்கிறது. இவர்களின்  நானா நீயா போட்டி அடிமட்ட மக்கள் மத்தியிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு ஏதோ ஒரு பிரச்சினை கருதி இலங்கையில் போராட்டம் நடைபெறுகின்றது என்பது தெளிவாகிறது. குறிப்பாக அர சுக்கு எதிரான கோஷங்களேஇப்போது வலுத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. சரி பிழைக்களுக்கு அப்பால் மக்களின் எதிர்ப்பலைகள் அரசு மீது தொடர்ச்சியா எழுந்துள்ளமை அதன் எதிர்கால இருப்பை கேள்விக் குறியதாக்கும். தவிர உள்ளூர் மட்ட அரசியல் செல் வாக்குகள் அற்றுப்போகும். பொருளாதார அபிவிருத்திக்கு எதிராக அரசியல் மாற்றம் பெறுவதோடு அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டிய சூழலும் உருவாகலாம்.

வெள்ளம் வருமுன் அணை கட்டுவது போல அரசு செயற் படவேண்டும். பட்டதாரிக ளுக்கு நியமனம் கொடுப்பது போல எந்த அடிப்படைகளை கருவிகளாகப் பயன்படுத்துவது யார் யாரை உள்வாங்குவது என்ற ஏக முடிவுக்கு உட்பட்ட பின்னரே அவர்களை நியமித் திருக்க வேண்டும்.
மக்கள்  போராட்டங்களும் மக்கள் புரட் சியும் அவர்களின் வாழ்வுரிமை சார்ந்ததே.
--

29.07.2012