Monday, February 6, 2012

கிளிநொச்சி ""கொலை வெறி''


Why this kolaveri di பாடல் வெளியாகி அது பலரின் மத்தியில் பிரபலமாகிவிட்டது. பட்டி தொட்டி யெல்லாம் ஒலிக்கும் இந்தப் பாடல் தமிழை யும் ஆங்கிலத்தையும் கொலை செய்துள் ளதாகப் பேசப்படுகின்றது. இருப்பினும் இன்று கூடுதலான மக்கள் தாம் தமிழ் பேசுவதாக, ஆங்கிலத்தைக் கலந்து புது மொழி பேசுகின்றனர். அதுபோல ஆங்கில மொழிக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றுடன் கொலைவெறிப் பாடலை ஒப்பிட்டால் அது ஒன்றும் புதிதல்ல என்று எண்ணத் தோன்றுகிறது.

பாடல்கள் இயோடு வரும்போது எல்லோரும் தமக்கு இருக்கக் கூடிய இரசனை யுடன் அவற்றை நோக்குகின்றனர். இவை ஆளுக்காள் வேறுபடும். “Why this kolaveri diசுபாடலை "யூரியூப்' ஊடாக இதுவரை 39,529,223 பேர் பார்த்துள்ளனர். அதில் 220,252 பேர் தமக்குப் பிடித்திருக்கிறது என்றும் 12,804 பேர் தமக்குப் பிடிக்கவே இல்லை என்றும் கூறியுள்ளனர். ஏனையோர் பார்த்துடன் நிறுத்திவிட்டனர்.

இது தென்னிந்திய தமிழ் திரைப்படம் ஒன்றில் இடம்பெறும் பாடல் ஒன்றின் மக்கள் அபிப்பிராயத்தில் சிறுபாதி மட்டும்தான். கலை இரசனைக்காகத்தான் கொலை வெறி பாடப்பட்டது. காதலின் தோல்விக் காகக் கொலை வெறிபாடப்பட்டது. ஒரு பெண்ணின் அழகும் அவளின் குணமும் பற்றிப் பாடப்பட்டது. அதை அந்த மாத்திரத்திலேயேவிட்டுவிடலாம்.

ஆனால், நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி கொலை செய்யப்படுவதை எவ்வாறு பார்ப்பது? திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த முதன்மையான மொழியும் செம்மொழியும் எனப் போற்றப்படுவது தமிழ்மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ளது இந்த மொழி, கல்தோன்றி மண் தோன்றா முன்தோன்றிய மூத்த மொழியாகப் பேசப்படுகின்றது. இதன்மீது பொறுப்பற்றவிதமாக நடந்துகொள்வதென்பது அனாகரிகமானது.

எம்நாட்டில் பாரம்பரியங்களைக் கொண்ட தமிழ் மொழிக்கு இப்போது நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதன்மீது ஆட்சியாளர்களுக்கு கொலை வெறி ஏற்பட்டுள்ளது. அரசு தகவல்களை உத்தியோகபூர்வமாக வெளியிடும் வர்த்தமானிப் பத்திரிகை, துறைசார் திணைக்களச் சுற்றுநிருபங்கள், காட்சிப் பலகைகள், விளம்பரப் பலகைகள் எல்லா வற்றிலும் தமிழ்மொழி கொச்ப்படுத்தப்படுகின்றது.

அரசுமட்டும் சிங்களத் தலைவர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதல்ல. காலத்துக்குக் காலம் ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் அரசியல் வாதிகளும் செயற்பட்டுள்ளனர். இப்போதும் ஒட்டி உறவாடுகின்றனர். அரசு கட்டமைப்பில் பெரும்பாலான துறை களில் தமிழ் அறிந்த தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். இந்தத் தோரணை உயர்மட்டத் திலிருந்து கீழ் மட்டம்வரை தொங்குகிறது.

அவர்கள் சொன்னால் சரி என்று தலையாட்டிப் பழகிவிட்டதால் பிழையானதைக் காட்டினாலும், சரி என்று தலை அக்கும் சக்திகளாக தோரணைகள் மாறிவிட்டன.

போதாக்குறைக்கு இலாபநோக்கிலான நிறுவனங்கள், வர்த்தக வங்கிகளும் தமிழைக் கொலை செய்வதில் ஆர்வமாக உள்ளன. விளம்பரத்துக்காக இவற்றால் அமைக்கப் படும் பெயர்பலகைகளில் இந்த வண்டவாளம் புலப்படுகின்றது. யாழ்ப்பாணத்து வீதிகளில் இந்த அலங்கோல அலங்காரங் களை நாம் தினமும் பார்க்கிறோம்.

கிளிநொச்சி நகர்ப் பகுதியில் கூட்டுறவு மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சு நெல் வர்த்தக நிலையம் ஒன்றை அண்மையில் திறந்துவைத்தது. விவசாய நிலப் பகுதியில் இந்த வருகை மகிழ்ச்சியானதுதான். ஆனால் அதன் பெயர்பலகை அமைந்ததுதான் மக்களின் நெல்சந்தைப்படுத்தும் கனவையும் கலைத்தது .

களஞ்சியசாலை கட்டடத் தொகுதி கிளிநொச்சி என்ற வசனம் "கனஞ்சியசாலைக் கட்ஷடத்தொஞதி கிலிநொச்சி' என்று எழு தப்பட்டுள்ளது. டீஜிற்றல் தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த பெயர்பலகை யில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களது திருவுருவங்களும் பொறிக்கப்பட்டுள் ளன.

இதுமட்டுமல்ல கிளிநொச்சியில் அமைந்துள்ள தொலைபேசி நிறுவனம் ஒன்றின் பெயர்ப் பலகையில் கிளிநொச்சிக்கு பதிலாக "கினிநொச்சி' என எழுதப்பட்டுள்ளது. கரைச்சி பலநோக்கு கூட்டுறவுச்சங் கத்துக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றில் ஆங்கிலத்தில் A9 வீதி எனவும் தமிழில் "யு 9' வீதி எனவும் எழுதப்பட்டுள்ளது.

""எவ்வளவு காச் செலவழிச்சு செய்து போட்டினம் இனி. எப்பிட மாத்திறது? பிழை யெண்டு சொன்னாலும் எங்களில அவையள் வச்சிருக்கிற நம்பிக்கை போயிடும். ஏன் எங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? என்னண்டாலும் செய்யட்டும்'' என்று பொறுப்புக்கூறவேண்டியவர்கள் விலக தமிழ் தெரியாதவர்கள் இன்னும் தமிழைக் கொச்ப்படுத்தியவண்ணமே உள்ளனர்.

எல்லா விடயத்திலையும் அவையள் தானே முடிவெடுக்கிறது. பிறகு எப்படி கொலை வெறிய மாத்தமுடியும். முடிஞ்சா பக்கப்பாட் டுக்கு தந்தனத்தோம் தான் பாடணும்.. *

நன்றி -உதயன் சூரியகாந்தி(29.01.2012)

Sunday, January 22, 2012

இதுவும் அபிவிருத்தி தான்


தென் இலங்கையில் அபிவிருத் திப் பணிகள் இப்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளின் அபிவிருத்திக்கு அரசி யல்வாதிகள் கூடுதல் அக்கறை காட்டிவருகின்றனர்.
இந்த அபிவிருத்தி ஆர்வம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் போரின் பின்னரான மீள்கட்டுமான முயற்சியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. உண்மையில் இந்த இரண்டு மாகாணங்களும் போரினால் மிகவும் @மாச மாகப் பாதிக்கப்பட்டவை. பெரும்பாலான பகுதிகள் அன்றும் சரி இன்றும் சரி மிகவும் வறிய பிரதேசங்களாகவே, அபிவிருத்தியில் பின்தங்கிய பகுதிகளாகவே காணப்படுகின்றன.
அரசியல் நோக்கங்களுக்காக வெளித்தெரியும் வகையிலான அபிவிருத்திப் பணிகள் வடக்கில் அதிகம் முன்னெடுக்கப்படுகின்றன. உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அபிவிருத்திப் பணிகள் உதவுவதாகத் தெரியவில்லை.
யாழ்ப்பாணத்தில் பருவமழைக்குப் பின்னர் பெரும்பலான வீதிகள் குன்றும் குழியுமாக மாறிவிட்டன. பராமரிப்பின்மையால் அவை நாளாந்தம் மேலும் சேதமடைந்தே வருகின்றன. பழைய வீதிகள் புனரமைக்கப்படா மலும் மணற்பாதைகள் தார் இடப் படாமலும் காணப்படுகின்றன. அதிகளவான மக்களின் பாவனையில் உள்ள வீதிகளுக்கேஇவ்வாறான நிலை தோன்றியுள்ளது.
இதுபோலவே வன்னியிலும் நீண்ட காலமாக வீதிகள் புனரமைக் கப்படாமல் காணப்படுகின்றன. யுத்தம் காரணமாக அந்தப் பகுதியில் அபிவிருத்திப் பணிகள் முடங்கிப் போயிருந்தாலும் இப்போது அந்தப் பிரச்சினை இல்லை. ஆனாலும் அபி விருத்திக்கான சாத்தியங்களும், நிதி ஒதுக்கங்களும், முன்னுரிமைப்படுத்த லும் இந்தப் பகுதிக்கு குறைந் தளவே வழங்கப்படுகின்றன. இதனால் மக்கள் தமது அடிப்படைத் தேவைகள் முதல் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு நாளுக்கு நாள் வெவ்வேறு வகையாக நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இடங்களுக்கிடையேயான தூரம் அதிகமாகவும் சேவை மையங்கள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து விலகியிருப்பதாலும் அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்யுள்ளது.
ஆனாலும் அதற்கான வீதி அபிவிருத்தி, போக்குவரத்து வசதி அவர்களுக்கு போதுமானதாக இல்லை. மழைக்காலங்களில் வெள்ளக் காடாக மாறும் வீதிகள் வெயில் காலங்களில் புழுதி பாதைகளாக மாறி வருகின்றன.
இதனால் அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போவதுடன் உடல் உபாதையைத் தினமும் வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இத்தகைய அபிவிருத்தியின் மந்தநிலை பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் வேலாகப் பாய்ந்து இன்னும் வேதனைப்படுத்தியே நிற்கின்றது.

நன்றி உதயன்-சூரியகாந்தி (22.01.2012) *

அபிவிருத்தி மீது வீசப்படும் கற்கள்



இலங்கையின் அபிவிருத்தி ஆசியாவின் ஆச்சரியமாக்02014010100001 2030ஆம் ஆண்டில் மாற் றப்படும் என்ற தூர நோக்குடன் மஹிந்த அரசு பல் வேறு நெருக்கடிக்குள்ளும் சவால்களுக்குள்ளும் அதற்கான பணிகளை வேகப் படுத்தி வருவதாகப் பேசப்படுகின்றது.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்குஅங் குள்ள உட்கட்டமைப்பு வசதிகளே பெரிதும் மூலகாரணங்களாக அமைகின்றன. இதில் இடங்களுக்கிடையிலான தொடர்பைப் பேணும் வகையில் போக்கு வரத்துத்துறை முக்கிய பணியாற்றுகின்றது.
இலங்கையின் அபிவிருத்தியில் இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படும் துறையாக பெருந் தெருக்கள் மற்றும் துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து போன்றவற்றுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
வரலாற்றின் ஒரு திருப்பமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இருப்பதாக அரச தரப்பு மார் தட்டிக்கொள்கின்றது.
இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்பமாக தெற்கு அதிவேக நெடுஞ் சாலை அமைப்பு என வீராப்புப் பேசும் அரசு இன்னும் பல அதிவேக வீதிகளை நாட்டின் பல பாகங்களிலும் உருவாக்க வுள்ளதாக உறுதி கூறியுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு வீதி வலையமைப்பு முக்கியமானதாக இருந்தாலும் ஏனைய துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அபிவிருத்தியைச் சமவேகத்தில் நகர்த்த முடியும்.
இலங்கையில் இப்போது இடம் பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் துறைசார் கட்டமைப்புக்களுக்கிடையில் வேறு பாடுகளை உருவாக்குவனவாக உள்ளன.
இலங்கை அரசால் நடைமுறைப்ப டுத்தப்படும் அபிவிருத்தி வேலைகள், மக்களது அடிப்படைத் தேவைகள், அன்றாடத் தேவைகளுக்கு விடைகாணாது புதிய பாதையில் செல்வதை உணரமுடிகின்றது.
அண்மையில் 2011.11.27 அன்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ் சாலையில் இப்போது பாவனையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசெளகரியங்களே மக்களது தேவைகளுக்கும் அரசின் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை உணரவைத்துள்ளன.

அதிருப்திகளின் அதிவேகம்

தெற்கு அதிவேக நெடுஞ் சாலையில் வாகனங்கள் வேகமாகச் செல்லும்போது அவற்றின்மீது கற்கள் வீசப்படுகின்றன.
நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன்பின் இத்தகைய கல்வீச்சுகளால் 57வாகனங்கள் சேதமடைந்ததுடன் 18 பேர் காயமடைந்துள்னர்.
வாகனங்களுக்கு கல்லெறிபவர்கள் தொடர்பில் விழிப்பு குழுக்கள் வீதிக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது கண்களைக் கட்டிவிட்டு கல்வீச்சுக்கள் தொடர்கின்றன.
வீதிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கென விஷேடமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒன்பது கார்களும் 06 மோட்டார்சைக்கிள்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவை இந்த வீதியில் ஏற்படும் விபத்துக்கள், இடையூறுகள் மற்றும் ஒழுங்குவிதிகளைக் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வாகனத்தில் பயணிப்பவர்கள் வேகக் கட்டுப்பட்டைப் பேணவேண்டும்,வீதி ஒழுங்கைப் பேணவேண்டும், விபத்துக் களிலிருந்து தப்பிக்கவேண்டும். இடைநடுவில் வாகனங்களை நிறுத்திக் கல்லெறி காரர்களை இவர்களால் ஒன்றும் செய்து விடமுடியாது.வாகனம் நிறுத்தப்பட்டால் அடுத்த கணமே விபத்துத்தான்.

நாய்களுக்கும் அதிருப்தி

சாலை பாவனைக்குவிடப்பட்டதும் திடீர் திடீரென விபத்துக்கள் நிகழ ஆரம்பித்தன. காரணம் புரியாது கண்காணிப் பாளர்கள் அதிர்ச்சியுற்றனர். அப்போது தெருநாய்கள் வீதியால் குறுக்கறுப்பது தெரிய வந்தது. ஏற்கனவே வீதிக்கு வேலி போடப்பட்டிருக்கிறது. ஆனால் நாய் களுக்கு அது போதாது. ஆடு அல்லது மாடு அதிலிருத்து தப்பிக்க முடியும். யானை கூட அண்மையில் இந்த வீதியைக் குறுக் கறுத்தது. சில இடங்களில் மண்அணை போடப் பட்டிருந்தாலும் எல்லா இடங் களுக்கும் அவை விஸ்தரிக்கப்டவில்லை.
நாய்களின் குறுக்கறுப்பால் வீதி திறக் கப்பட்ட அடுத்த நாளே வாகன விபத் தொன்று நடந்தது. திறக்கப்பட்ட 72 மணித் தியாலங்களுக்குள் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றன. 2 மாதங்களுக்குள் 80 விபத்துக்கள் பதிவாகியன. இவற்றில் பலவுக்கு நாய்கள் மீதே பழிபோடப்பட்டது. அவை யும் பலி கொள்ளப்பட்டன.
மஹிந்தவின் சிறப்பு உத்தரவு நாய்களைக் கொலை செய்யக்கூடாது என்று. ஆனால் அவரின் கனவான அதிவேக சாலையும் அதில் பயணிக்கும் வாகனங்களும் நாய்களைக் கொலைசெய்யும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளதை அவர் எந்தத் திட்டத்தைக் கொண்டு சீர்செய்யப் போகின்றார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். புதிதாக ஏதாவது திட்டம் அவருக்குள் இருந்து வரும்வரை.
இந்த நெடுஞ்சாலையின் நோக்கம் நகர்பகுதியில் ஏற்படும் வாகன நெருக் கடியைக் குறைப்பது, வேகமான போக்கு வரத்து, பயணிகள் இலகுவாகவும் குறைந்த செலவுடனும் பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ளுதல் போன்றனவாகக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்திக்கு தேவை இதுவல்ல. இப்போதைக்கு எங்களது அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டு அடுத்த கட்டமாகச் சர்சதேச நிலையிலான அபிவிருத்திகளை நீங்கள் மேற்கொள்ளலாம். எங்கள் வயல்காணிகள், மேட்டுக்காணிகள் என்பவற்றின்மீதே நீங்கள் உல்லாச சவாரி செய்கின்றீர்கள். அதனால் ஆத்திரமடைந்தே நாங்கள் கற்களை வீசுகிறோம். எங்கள் வளமான காணிகள்மீதே இந்த வீதி அமைந்திருக்கிறது என்று கல்லெறி காரர்கள் எண்ணுகிறார்கள். இதற்காகவே வீதிக்குவந்து கற்களை வாகனங்கள் மீது அவர்கள் வீசுகிறார்கள்.
அபிவிருத்தியின் தேவையில் இதுவும் ஒன்றுதான். அது எப்போது தேவை என்பதும்,மக்களது இப்போதய தேவை என்னவென்றும் தீர்மானிப்பது அரசுதான். எனவே எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கட்டும். *


பணிஆரம்பம்:
2003
நிதி உதவி:
ஜப்பான் வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசு.
நிர்மாணச் செலவு:
சுமார் 77 பில்லியன் ரூபா.
தூரம்:
கொழும்பு கொட்டாவிலிருந்து காலி பின்னது வவரை 100 கிமீ (கொட்டாவ, கஹதுட்டுவ, கௌனிகம, தொடங்கொட, லெவன்துவ, குருந்துகஹ, நாயபமுல்ல ஆகிய இடங்களைக் கடந்து பின்னத்துவ வரை)
தடை:
100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியாத வாகனங்கள், அதிகளவு புகையை வெளியிடும், முறையாக நிறுத்தற் கருவிகள் (பிரேக்) செயற் படாத வாகனங்கள் வெளிச்ச, சமிக்ஞை விளக்குகள் முறையாக இல்லாத வாகனங்கள், பாதசாரிகளுக்கு இந்தவீதியில் தடை
நுழைவாயில்:
08. கொட்டாவை, கஹதுடுவ, களனி கம, வெலிபின்ன, குறுந்துஹ, தாபிம, தொடங்கொடை, பத்தேகம, பின்னதுவ.
வேகம்:
80120 கிமீ(மணிக்கு)
கட்டணம்:

கார்,கெப்ரக வாகனம்,9 ஆசனங்கள் வரையுள்ள சகல வாகனங் கள், எக்ஸல் 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 400 ரூபா,9 ஆசனங்களுக்கு அதிகமான பஸ் மற்றும் 33 ஆசனங்கள் கொண்டுள்ள சகல பஸ்களுக்கும் 700 ரூபா, 22 இற்கும் அதிகமான ஆசனங்களைக் கொண்ட பஸ், 6 சக்கர வாகனங்கள் மற்றும் எக்ஸல் 3 ஐ உடைய மோட்டார் லொறி, டிரக் வாகனம் ஆகியவற்றுக்கு 1500 ரூபா, ஒன்றாக இணைக்கப்பட்ட கோச் 2 உடன் பயணிக்கும் பஸ், எக்ஸல் 4 மற்றும் அதற்கு அதிகமான வாகனங்களுக்கு 2000 ரூபா.



நன்றி உதயன்-சூரியகாந்தி (௨0௧௨. 2௨.01)

Saturday, January 14, 2012

மறக்கத்தெரிந்த மனமே...


"உன்னைத் திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்திவிடும்''இந்த வார்த்தையை பழமொழியாகப் பார்ப்பதைவிட இப்போதெல்லாம் உண்மையான அனுபவங்கள் எண்ணிலடங்காதளவுக்கு பெருகிவிட்டன. சமூகத்தி முன்மாதிரியாக இருக்கின்ற சிலர் தமது சொந்த வாழ்க்கையில் பிழைவிட்டுவிடுகிறார்கள் என்பதும் மற்றுமொரு அனுபவம்.

ஆனாலும் சோற்றை உண்டபின் அந்தப் பாத்திரத்துக்குள்ளளேயே.... கழிப்பது, அதற்குக் காரணம் கற்பிப்பது எவ்வளவுக்கு நீதியானது என்பது சங்கடமான விடயம்தான். இருந்த போதிலும் இலங்கையில் இது சர்வ சாதாரணமப்பா.

நாட்டுக்காகப் பாடுபட்ட மனிதர்களில் முக்கியமானவர் பொன்சேகா என்று பேசப்பட்டது. மரணத்திலிருந்து மீண்டுவந்த ஒரு செயல்வீரன் என்று கூறிப் பொறுப்பில் இருக்கும்வரை அவர் முருங்கை மரத்தில் ஏற்றப்பட்டார். அவரிடம் இருந்து பெற்றாக வேண்டிய அனைத்தும் நிறைவுற்றதும் இப்போது அவர் கம்பி எண்ணுகிறார். இது அரசு ஒரு தனிமனிதனுக்கு இழைத்த துரோகம். அந்தத் துரோகம் பொன்சேகா குடும்பத்துடன் முடிந்துவிடலாம். அல்லது அவர் சேர்ந்த சிலருக்கு, வேதனையாக இருக்கலாம். ஆனால் ஓர் இனத்துக்கும் அதன் அபிலாசைகளுக்கும் இழைக்கும் துரோகம். இலகுவில் மறக்க முடியாது. ஒருவருக்கு மன்னிப்பையும், தீர்ப்பையும் அவர் மட்டுமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாறாக வரலாறோ, பாதிக்கப்பட்ட மக்களோ இவ்வாறானவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை. துரோகம் இழைத்தவர்கள் தாமாக உருவாக்கிக்கொண்ட ஒரு பின்புலத்திலிருந்து மக்களை ஏமாற்ற முற்படுவது, ஏமாற்றுவது எந்த வகையில் நியாயமானது என்பது இன்றும் புரியாத விடயமாகியுள்ளது. காரணம் நாட்டினது அரசியலும், ஆட்சியும் அந்தளவுக்குச் சுயலாபமாக்கப்பட்டுள்ளன.

இந்த சுயலாப அரசியலில் இப்போது நுழைந்துள்ள மனிதன் ஓர் இனத்தின் துரோகி என வர்ணிக்கப்பட்ட, அரசின் செல்லப்பிள்ளை யாகியுள்ள கருணா அம்மான். இந்தப் பெயரை யாழ்ப்பாண மக்கள் தனக்கு வைத்ததாகக் குறிப்பிடும் இவர், அதை மக்கள் கூப்பிட்டால் தான் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிடுகிறார். இந்தப் பெயரை யாழ்ப்பாணமக்கள், ஐக்கிய சுதந்திர முன்னணியினருடன் இணைந்து திறம்படச்செயற்பட்டதற்காக சூட்டவில்லை என்பதைக்கூட உணர முடியாத மனிதனாக மாறியிருக்கிறார் கருணா. இவரின் மாற்றங்கள் தொடர்கின்றன.

1997.05.13 ஜெயசிக்குறு வெற்றி

விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக 1996, 1997 காலப்பகுதிகள் காணப் பட்டன. குறிப்பாக விடுதலைப் போராட்டதில் புதிய மரபு ரீதியான தாக்குதல் உத்திகளால் பலம் வாய்ந்த இலங்கை அரச படைகள் பின்வாங்கி ஓடிய சம்வங்கள் அதிகம் இடம்பெற்றன. இந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் கருணாவும் இடம்பெற்றிருந்தார். ஜெயசிக்குரு எதிர்ச்சமர் கருணா வுக்கு புதியதொரு பலத்தைத் தேடிகொடுத்திருந்தது.

இந்த துன்பத்தின் மீட்சியாக விடுதலைப் புலிகளின் மரபுவழி இராணுவ நடவடிக்கை அமைந்தது. இதற்கு வித்திட்ட பெருமை கூடுதலாக கிழக்குப் போராளிகளுக்கு உரியது. அங்கிருந்து ஆயிரம் போராளிகள் வரை வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது மட்டக்களப்பிலிருந்து போராளிகளைக் கூட்டி வந்திருந்த கருணா அம்மானே தனது அணிப் போராளிகளையும் வேறு போராளிகளையும் கொண்டு படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டு ஜெயசிக்குறு எதிர்ச்சமரை வெற்றிகொள்ளக் காரணமானார்.

கருணாவின் போரிடும் ஆற்றல் காரணமாக அவருக்கு ஏற்பட்ட மதிப்பு மற்றும் மரியாதை ஒருவகையில் பின்வந்த காலங்களில் துரோகத் தனத்துக்குக் காரணமாகியது.

விடுதலைப் புலிகள் போரிடும் வலுவில் இலங்கை அரசுக்கு சவாலாக சம இராணுவ பலத்துடன் இருக்கின்றார்கள் என்ற செய்தி இவ்வாறான வெற்றிச் சமர்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.

இதனால் இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகளுடன் சமரசமுயற்சியொன்றில் ஈடுபடவேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி இலங்கை அரசு விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அவர்கள் கொண்டுள்ள கட்டமைப்புக்களை சீர்குலைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியது.

இலங்கை அரசின் ஆசையை, அவர்களது கபடத்தனத்தை நிறை வேற்றி வைப்பதற்கு புதிய மனித ராக விடுதலைப் புலிகள் அமைப் பில் இருந்தே கருணா செயற்படத் தொடங்கினார். இது அடுத்துவந்த காலங்களில் பல்வேறு நெருக்கடி களையும், ஒரு விடுதலை அமைப் பின் இருப்பையும் கேள்விக்குறி யாக்கியது எனலாம். இந்தக் காலப்பகுதியில் தன் இனத்திற்கே கருணா இழைத்த துரோகச் சம்ப வங்கள் சொல்லில் அடங்காதவை.

இவ்வாறான திடீர் மாறுதல் களின் மத்தியில் தமிழ் மக்கள் பற்றிய பாரம்பரியங்களை இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார் கருணா.

2006.11.27 மாவீரர்தின அறிக்கை

விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கிய கருணா மாவீரர் தினத்தையும் கொண்டாடினார். அப்போது அவர் மாவீரர் தின அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ""தாயக பூமியில் சகோதர இனங்களுடன் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதுடன் உலக மயமாக்கலுக்கேற்ப சமூக பொரு ளாதார, அபிவிருத்தியுடன் தமக் கான கலை, கலாசா, பண்புகளுடனும், மேன்மையுடனும் வாழ வேண்டும். இதனை நோக்கிய எம் பயணத்தில் சமூக விடுதலையை விரும்பும் அனைவரும் கைகோர்ப்பது காலத்தின் கட்டாய மாகும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பாரம்பரியம், மக்களின் ஒற்றுமை பற்றிப் பேசிய இவர் இப்போது நவபாரம்பரியத்துக்குள் புகுந்துள்ள நிலையில் தனது நடனங்களை மறைக்க மக்கள் மத்தியில் தோன்றி தன்னை வேறு விதமாக அறிமுகப்படுத்த முற் படுகிறார்.

31.12.2011 நவபாரம்பரியம்

2012 புதுவருடத்தை வரவேற்கும் வகையில் நள்ளிரவில் கொழும்பு, ரமாடா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வில் இப்போது மீள்குடியேற்ற பிரதியமைச்சராகஉள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தனது பிரத்தியேக செயலாளருடன் நடனமாடி அசத்தினார். இது மட்டுமல்ல அண்மையில் அமைச்சர் மில்ரோய்வீட்டில் நடைபெற்ற நிகழ்விலும் கருணா கலந்துகொண்டு தனக்குரியதான நடனத்தை ஆடினார். அடிக்கடி வெளிநாடு செல்லும்போதும் இவர் தனது களிப்புக்குக் குறைவைப்பதேயில்லை. இப்போது கண்டவர்களுடனும் கட்டிப்பிடி யாட்டம் போடுகிறார் அம்மான்.

10.01.2012 பாரம்பரியம்

நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தம் நாம் சிறு பராயத்தில் கண்ட பாரம்பரியங்கள் பழக்க வழக்கங்களைக்கூட இன்று மறக்க வைத்திருக்கிறது என மட்டக்களப்பு, சந்திவெளியிலுள்ள வேல்தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் தனது கருத்தை வெளியிட்டார்.

முன்பெல்லாம் தென்னை வீட்டில் பாளை போட்டுவிட்டதென்றால் அதனை ""ஒரு பெண் வயதுக்கு வந்த சிறப்பான தினம்'' என்று கொண்டாடுவார்கள். ஆனால் அவற்றினையெல்லாம் தற்போதுள்ளவர்கள் மறந்துவிட்டனர் என்றும் அவரது உரை அமைந்திருந்தது.

கருணாவின் புதிய ஞானம் எதைச் சொல்கிறது? சுபோகத் திற்காக ஒரு இனத்தைக் காட்டிக் கொடுத்த மனிதர் இன்று நியாயங்கள் பற்றியும் பாரம் பரியங்கள் பற்றியும் பேசுவது எந்த அளவில் ஏற்றுக்கொள்ளத் தக்கது? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாது.

மறுபுறத்தில் இருப்பிடமற்ற மக்களும், ஒருநாளில் ஒருவேளை உணவைப் பெறுவதற்கே அல்லல்படும் மக்களும் இந்த நாட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு பசிபோக்க யாருமற்ற நிலையில் நாணற்புற்கள் மக்களின் மூக்குக்குள் நுழைவது புதிய அரசியலாகியுள்ளது.

நடப்பவற்றையும், நடக்க இருப்பவைபற்றியும் பேசுவதுகூட அர்த்தமற்றதாகிவிடுமளவுக்கு மனிதர்களின் சஞ்சரிப்பு தோன்றி யுள்ளது. எல்லாம் ""ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி'' கதையாகவே நிகழ்கிறது. கலிகாலத்தில் யார் என்ன செய்து விடமுடியும்???


நன்றி். உதயன் சூரியகாந்தி(15.01.2012)

Friday, January 13, 2012

நோய் மீதே வாழ்வு

இறுதிப்போர் முடிந்து மூன்று வருடங்களை எட்டும் நிலையில் வன்னியில் புதிய வடிவங்களில் மக்கள் வாழ்க்கையுடன் போரட வேண்டியவர்களாகவே இன்னமும் இருக்கின்றனர். வாழ்வியல் ரீதியாக இந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறுவகையான நெருக்கடிகள், இருப்புக்கான கேள்விக்குறிகளை ஏற்படுத்திவருகின்றன. போரின் கோர முகங்களை மறந்து புதியவாழ்வுக்குள் நுழைய எத்தனிக்கும் ஒரு சமூகத்துக்கு, அதிலிருந்து மீள முடியாத அளவுக்கு அரசின் அபிவிருத்திப் பணிகள் இருக்கின்றன.

இன விடுதலைக்காகப் போராடிய அமைப்பு தோற்கடிக்கப்பட்ட நிலையில், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களும் திட்டமிட்டு பழிவாங்கப்படும் சூழலில் வாழவேண்டியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். போரின்போது உறவுகள்,உடமைகளை இழந்து உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வன்மப்பிடியிலிருந்து எங்களை விட்டுவிடுங்கள் என்ற நிலைப்பாட்டுடன் வாழ்கின்றனர்.

போரின்போது மக்கள் எதிர்கொண்ட நிலைமைகள் இப்போது அவர்களுக்குத் தாக்கத்தைக் கொடுத்துவருகின்றன. குறிப்பாக இடவசதி,போதிய காற்றோட்டம்,சுத்தமான குடிதண்ணீர்,சுகாதாரமான கழிப்பறைவசதி,போசாக்கான உணவு போன்ற அடிப்படை தேவைகள் இறுதிபோர் நடைபெற்றபோது மக்களுக்குக் கிடைக்கவில்லை.

போரின்போது கொல்லப்பட்டவர்களின் உடலங்களைச் சுகாதாரமான முறையில் அடக்கம் செய்ய மக்களுக்கு அவகாசம் இருக்கவில்லை. தமக்குமுன்னால் இறந்தவர்களை உறவுகள் தாம் இருந்த பங்கருக்குள் போட்டு மூடிவிட்டு வேறு இடத்துக்கு நகர்வது மட்டுமே இயலுமான ஒன்றாக அப்போது இருந்தது. கைவிடப்பட்ட உடலங்களை காகங்களும் நாய்களும் உண்ணவேண்டி ஏற்பட்டது. அழுகிய உடல்களின் நாற்றமும், நச்சுகுண்டுகளின் புகைகளும் மக்களின் சுவாசமாக மாறின.

வன்னிப்போரில் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களான கிளஸ்ட்டர் குண்டுகளும்,நச்சுக்குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன.

போரில் இருந்து மீண்டு நலன்புரி முகாம்களுக்கு சென்ற மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டனர். போர்முடிந்து மக்கள் மீளக்குடியமர்ந்துள்ளநிலையில் இப்போது புதிய நோய்கள் பரவ ஆரம்பித்து மக்களை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளியள்ளன.

ஏற்கனவே தொற்றுநோய்கள்,ஆபத்தான நோய்கள் பரவுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டிய நிலையில் மக்களை எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டப்பட்டது. குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்களுக்குக் காசநோய்ப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது வைத்திய அரிக்கைகளில் புலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு வகைக் காய்ச்சலினால் கடந்த இரு வாரஙகளில்(01.01.2012)மட்டும் ஏழு பேர் மரணமாகியதுடன், இருவர் யாழ்.போதனாவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டனர். சுவாசத்துடன் தொடர்புபடும் இந்த காய்ச்சல் சகல வயதினரையும் தாக்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு அல்லது மூன்று நாள் காய்ச்சலுடனேயே இந்த மரணம் நிகழ்வதால் காய்ச்சல் ஏற்பட்ட உடனேயே வைத்தியர்களை நாடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வன்னியில் உள்ள பல மருத்துவமனைகள் போதிய அடிப்படைவசதிகள் இன்றியே இயங்கிவருகின்றன. இதனால் அந்த மருத்துவமனைகளில் மக்கள் சாதாரண காய்ச்சலுக்கு கூட மருந்தைப் பெறுவது சிரமமாக உள்ளது. இவ்வாறான நெருக்கடிகளுக்குள் மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தொடர்ந்தும் போராடவேண்டியுள்ளது.

நன்றி் உதயன்,சூரியகாந்தி-(08.01.2012)

Wednesday, December 7, 2011

முடிந்தால் ஐ.நாவில் மனசாட்சியை மட்டும் பேசுங்கள் அம்மணி

essay
அன்புடன் அம்மையாருக்கு!
தமிழ்மகன் எழுதும் மடல் இது.
எதிர்வரும் 12ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உண்மைகளை மறைக்கும் இலங்கை அரசின் குழுவில் தாங்களும் வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எச்.எம்.சார்ஸ்சும் அங்கம் வகிக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்மக்கள்,அரச தரப்பினரிடம் இருந்து தமக்கு எதுவிதமான, முன்னேற்றகரமான பலா பலன்களும் கிடைக்கவில்லை. அதாவது மனித உரிமைப் பாரபட்சங்கள் நீக்கப்படவில்லை, அச்சுறுத்தல் சூழல் போக்கப்படவில்லை, அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை, இன முரண்நிலைக் கட்டமைப்பில் மாற்றம் நிகழவில்லை என்ற கருத்துக்களை நிலை நாட்டியுள்ள காலம் இது.

அவர்கள் வெளிப்படுத்தியுள்ள, வெளிப்படுத்தும் பாரபட்சமற்ற அனுபவத்தின் அடிப்படையிலான, உரிமைவெளிப்பாட்டு அடிப்படையிலான கருத் துக்களைச் செவிமடுத்து, பொறுப்புடன் அவதா னித்து அந்த மக்களது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதே இப்போதுள்ள தமிழ் அரசியல் வாதிகளதும், அரச அதிகாரிகளதும், பொதுநல அமைப்புக்களதும் கட்டாயக் கடமையாக உள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் தாங்கள் மக்களது உணர்வுகளுக்கும், அவர்கள் அனுபவித்துவரும் துன்பங் களுக்கும் (குறிப்பாக வன்னி மக்கள்)பதில் கூறும் வகையில் இனிவரும் நாள்களிலாவது உங்கள் தார்மீக,பொறுப்புடன் கூடிய, நடுநிலையான செயற் பாடுகளைச் செய்வீர்கள் என எண்ணுகின்றோம்
ஏற்கனவே இலங்கைக்கு எதிராக முன்வைக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க அரச தரப்பிலிருந்து விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமைகள் அமைச்சராக இருந்து வெளியுலகுக்கு உண்மைகளை மறைத்துவந்த, இப்போது பெருந்தோட்டத்துறை அமைச்சராக உள்ள மஹிந்த சமரசிங்க தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவருடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நீர் வழங்கல் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சூழல் அபிவிருத்தி அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா (இவர் யுத்த காலத்தில் தகவல் ஊடகத்துறை அமைச்சர்) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன ஆகியோரும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கூட்டத்தின்போது இலங்கைக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படலாம் எனவும், அதனை முறியடிக்கக் கூடிய வகையில் இந்தக் குழுவினர் செயற்படுவர் எனவும் அறிய முடிகின்றது.
இந்தக் குழுவினருடன் போதாக்குறைக்குத் தமிழ் மக்களைப் பிரதிபலிக்கும் வகையிலான அரசுக்குச் சார்பாக பிழைகளை நியாயப்படுத்தக் கூடிய சிலரையும் அங்கம்வகிக்கச்செய்து தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை பொய்யாக்க அரசு முயன்று வருகின்றது.இதற்காகத் தம்மால் நினைத்தபாட்டுக்கு அசைக்கக்கூடிய கைப் பொம்மைகளை அரசு தேடிவருகிறது. இந்த வலைக்குள் இப்போது உங்கள் பெயரும் அடங்குவதாக அறிகின்றோம்.
அரச கட்டுப்பாட்டில் இப்போதுஇதற்குச் சாதகமாக அசையக்கூடிய நிலையில் அரச தரப்பினரால் தாங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளீர்கள் என்பது வேதனை தருகிறது.அண்மையில் இராணுவத்தினரால் கொழும்பில் நடத்தப்பட்ட போர் அனுபவப் பகிர்வு தொடர்பான சர்வதேசக் கருத்தங்கில் தமிழ்மக்களுக்கு ஒவ்வாத சில கருத்துக்களை தாங்கள் வெளிப்படுத்தியி ருந் தீர்கள் என்று ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.
தாங்கள் அதன்போது ஆங்கிலத்தில் எழுதி வாசித்த சில கருத்துக்களை இங்கே நினைவு கூருகின்றேன்.
முல்லைத்தீவில் அரச அதிபராக நான் செயலாற்றிய காலப்பகுதியில் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர்.போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங் களில் பொதுமக்களின் உணவு உள்ளிட்ட அடிப் படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரச அதிகாரிகள் என்ற வகையில் நாங்கள் பெரும் சிரமப்பட்டோம்.
இந்தக் காலப்பகுதியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அரசிடம் கோரிக்கைகளை முன் வைக்கும் போதும் நான் விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டலுக்கு உள்ளானேன்.வடபகுதி மக்களை விடுதலைப் புலிகள் பணய மாக வைத்துக் கொண்டே போரை நடத்தினர். இந்த மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கு பாதுகாப்புப் படையினர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பாதுகாப் புப் படையினர் எவ்விதத்திலும் பொதுமக்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்த வடபகுதி மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.
அவர்கள் சட்டரீதியாகவும், நாகரிகமான முறையிலும் தமது மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து விடுதலைப் புலிகளிடம் பணயக் கைதிகளாக இருந்த அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்தனர். விடுதலைப் புலிகளின் அச்_றுத்தலில் இருந்து அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்தமைக்காக இந்தச் சந்தர்ப்பத்தில் பாதுகாப்புப் படையினருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் எந்தளவுக்குப் பொதுமக்களைத் துன்புறுத்தினார் கள் என்று எனக்கு நன்கு தெரியும். தற்போது, விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட வடபகுதி யில் தமிழ் மக்கள் சகல வசதிகளுடன் சுதந்திரமாக வாழ்கின்றனர். போருக்குப் பின்னரான மீள்குடியேற்றம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமானங்கள் அனைத்தும் அரசால் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள், பாதுகாப்புப் படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகளை மறந்து விடமுடியாது'' என்று தெரிவித்திருந்தீர்கள் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் மிகைப்படுத்தல்கள் இருக்கக்கூடும். ஆனாலும் நீங்க சொல்ல வந்த உள்ளடக்கம் இதுபோன்ற ஒன்றே என்பதையும் அவ்வாறு இல்லாத ஒரு அறிக்கையை நீங்கள் வழங்க முடியாத சூழல் உங்களுக்கு இருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.இதுபோன்ற கருத்தை நல்லிணக்க ஆணைக்குழு வின் முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போதும் தாங்கள் வெளிப்படுத்தியிருந்தீர்கள்.
புலிகளின் கட்டுப்பாட்டில் அம்மையார்
அதேவேளையில் இன்னுமொரு விடயத்தை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.வன்னியில் போர் உக்கிரமடைந்த காலம் அது. முல்லைத்தீவு நகர்பகுதிமீது நள்ளிரவு வேளை இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். மருத்துவமனை, தங்களது இல்லம் போன்ற பகுதிகளில் ஷெல்கள் பரவலாக வீழ்ந்து வெடித்தன. இதில் தாங்கள் உட்பட 16பேர் காய மடைந்தனர். சம்பவத்தில் ஒருவயதுக் குழந்தை யும் பலியாகியது. முல்லைத் தீவு மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர் \ண்முக ராஜாவின் மனைவி திருமதி ரேணுகாவும் காயமடைந்தார்.
தாக்குதலில் கையில் காயமடைந்த நீங்கள் அந்த வேதனையுடன் சம்பவ இடத்திலிருந்து அழுதழுது விடுதலைப் புலிகளின் ஊடகங்களுக்கும் ஏன் பி.பி.சி செய்திச் சேவைக்கும் பேட்டி வழங்கியிருந்தீர்கள்."அதில் சிங்கள இராணுவம் திட்டமிட்டு தமிழ்மக்களின் வாழ்விடங்கள் நோக்கி கண் மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. அரசு பிரதிநிதியான எனக்கே பாதுகாப்பில்லை. எவ்வாறு மக்களைப் பாதுகாப்பது'' என கண்ணீர் மல்ல கதறினீர்கள்.
அப்போதுதான் உங்கள் முன்பாக கமெராவுடன் நின்று கொண்டிருந்தேன். அப்படி உங்களைப் பார்த்து, நீங்கள் பேசியதைக் கேட்ட எனக்கு இப் போது நீங்கள் கூறுபவற்றை ஏற்க முடியாமல் இருக்கிறது. எனினும் வன்னியிலும் நீங்கள் பணி யாற்றிய போது இரு தரப்புகளாலும் உங்களுக்கு இருந்த நெருக்கடிகளை ஒதுக்கிவிட முடியாது தான். உண்மையில் உங்களது இந்த இரு வேறு பட்ட நிலைகளுக்கு காரணம் நீங்கள் ஓர் அரச நிர்வாகப் முகவர் என்பதும் புரிகிறது.
உங்களது பதவியையும் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் தக்கவைப்பதற்காக இந்த இரு நிலைப்பாடுகளை நீங்கள் எடுக்க வேண்டி இருக்கலாம்.இவை அனைத்தும் உள்நாட்டுக்குள் முடிந்து போனவை. விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டில் வன்னியில் மக்கள்இருந்தபோது அரச பிரதிநிதியாக தாங்கள் இருந்தாலும் விடுதலைப்புலிகளது செயற் றிட்டங்களையே அமுல்படுத்தவேண்டிய நிர்ப்பந் தம் இருந்தது. அதுபோல இப்போது அரசின் நேரடி நெறிப் படுத்தலின் கீழ் நிர்வாகப் பொறுப்புடன் தாங்கள் உள்ளீர்கள். இறுதி போர் நடந்த காலப்பகுதி யில் வன்னியில் நீங்கள் இருந்தீர்கள் .
இவ்வாறான சாதக நிலைகளைப் பயன்படுத்தி அரசதரப்பினர் உங்களை இலங்கைக்கு சர்வ தேச மட்டத்தில் அதி கூடிய நெருக்கடிகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஐ.நா. மனிதஉரிமைகள் கூட்டத்தொடரிலும் ஒரு முக்கிய சாட்சியாகப் பயன்படுத்த முயல்கின்றனர்.
கூட்டத்தொடரில் நீங்கள் எழுதப்பட்ட ஒரு அறிக்கையை மட்டுமே வாசிப்பீர்கள் என எதிர் பார்க்கப்பட்டாலும் சில வேளைகளில் இலங்கை அரசுமீது கூடுதல் நெருக்கடிகள், குற்றச்சாட்டுக்கள் முடுக்கிவிடப்பட்டால் அதை முறியடிக்க உங்களை போர் வலயத்தில் கடமையாற்றிய தமிழ்ப் பிரதிநிதி என்ற அடிப்படையில் நேரடிச் சாட்சியாக அரசு பயன்படுத்தலாம்.
இங்குதான் பிரச்சினை ஏற்படுவதற்கு அதாவது தமிழ்மக்களது நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதற்கு நீங்கள் ஒரு பயன்படுத்தப்படுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மனுநீதிக்கான சாட்சியாக இருப்போம்
இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் மக்களாகப் பார்க்கப்படுவதையும் அவர்களது வாழ்வுரிமைகள் மறுக்கப்படுவதையும் உலக நாடுகள் பல இன்றுவரை ஒரு பொருட்டாக எடுத்து செயற்பட்டு வருகின்றன. தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு தேவை. அவர்களுக்கு இதுவரை இலங்கை அரசு இழைத்த கொடுமைகள் வெளிக்கொண்டுவரப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும். அதற்காக நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றே சர்வதேச சமூகம் இலங்கையை நெருக்க டிக்குள் தள்ளிவருகிறது.
இதற்காக ஐ.நா சபையின் அறிக்கை (40 ஆயிரத்துக்கும் மேல் பொதுமக்கள் கொல்லப்பட் டுள்ளனர்) வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட மக் களது நேரடி சாட்சிப் பதிவுகள், அங்க அவயவங்களை இழந்து வாழும் மக்களது பதிவுகள், விதவைக் குடும்பங்களது பதிவுகள் பெற்றோரை இழந்த சிறுவர்களது பதிவு தொகைமதிப்பீடுகள், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக காட்டப்படும் புகைப் படங்கள், வீடியோக்கள், இன்றுவரை அதிர்ச்சியூட்டும் வகையில் தகவல் வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் என பல நம்பகமான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் ஐ.நாவின் மனித உரிமைகள் மாநாட்டில் கூறுவதெல்லாம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதைப் பாதித்து விடக் கூடாது என்பதே எனது வேண்டுதல். வடக்கு கிழக் கில் தமிழ் மக்கள் நீண்ட காலமாகப் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு அரசியல் ரீதியில் நிரந்தரமான நெருக்கடி உள்ளது. அவர்களதுவாழ்வுரிமைகள் மறுக்கப்படுகின்றன. இப்போதும் மக்கள் நெருக்கடியில்தான்வன்னியில் இறுதிப் போரின்போது பெருமள வான மக்கள் கொல்லப்பட்டனர், மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றன, பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர் என்று நேர் அனுபவ சாட்சிகளும், ஆதார ஆவணங்களும் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.
அரசு சொன்ன வாக்குறுதிகள் எவையும் பூரணப் படுத்தப்படவில்லை. வன்னியில் மக்கள் பலர் இன்னும் அடிப்படை வசதிகளற்று நெருக்கடிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.இவையெல்லாம் மனித தர்மத்தின் அடிப்படையில் பார்க்கப்படவேண்டும். காலம் காலமாக நெருக்கடிக் குள் வாழும் தமிழ் மக்களது துயர வாழ்வு அகல வேண்டும். அவர்கள் உலகத்தில் உள்ள எல்லா மக்களையும் போல சுதந்திரமாக வாழவேண்டும் என்ற மனப்பாங்குடன் செயலாற்றவேண்டும்.இவற்றை மனதிலிருத்தி மனச்சாட்சியுடன் பேசுங்கள். தமிழினம் உங்களையும் நம்பி இருக்கிறது.
நன்றி உதயன்
http://184.107.230.170/~onlineut/News_More.php?view=essay_more&id=2811620808885073

Thursday, December 1, 2011

கார்த்திகை இறுதியில்ஆலயங்களைகாவல் செய்த ஆ(சா)மிகள்


அன்றும் வழமைபோல் மாலை 6 மணிக்கு உணவகத்துக்குபபுறப்பட்டேன். மழை இருட்டு அந்த பொழுதை இரட்டிப்பாகக் காட்டியது. போகும் வழியில் பிள்ளையார் கோயில். கோயிலின் தெற்குவாசல் திறந்திருந்தது. வழமையாக நான் அந்த வழியாகப் போகும் நாள்களில் மலையில் வாயில் திறந்திருப்பதில்லை. வழமைக்கு மாறாக அன்று வாயில் திறந்திருப்பதற்கான காரணம் புரியாது மழை இருட்டில் உற்றுப் பார்த்த எனது கண்களுக்கு இரண்டு உருவங்கள். ஆவை இராணுவ சீருடைஇதேழில் தொங்கவிடப்பட்ட துப்பாக்கியுடன் தென்பட்டன.

சமயாசாரப்படி இந்துக் கோயில்களுக்குப் போவதாயின் ஆண்கள் மேலங்கியை கழையவேண்டும். பாதணி தரிக்கமுடியாது. இதன் காரணமாகவே கோயில் வாயிலில் நின்று கும்பிட்டுவிட்டு இறைவனின் எல்லா வரங்களையும் பெற்றுவிட்டதாகப் பெருமிதப்பட்டு கதை சொல்லும் எனக்கு பிள்ளையார் கோயில் சம்பவம் வியப்பாக இருந்தது.

எனது மனதுக்குள் எண்ணிக்கொண்டேன், சிலவேளைகளில் இப்படியும் இருக்குமோ என்று. யுத்தம் முடிந்து இரண்டுவருடங்கள் அகிவிட்டன. விடுதலைப் புலிகள் பற்றி உள்ளுர் கதைகள் வருவதில்லை. புலிகள் இலங்கையில் தமிழ் இனத்தின் விடுதலைக்காப் போராடியதற்கான பல தடையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் இறந்தவர்களைப் புதைத்து வைத்த இடங்களையும் மிச்சமில்லாமல் அழித்துவிட்டோம். இதனால் காலம் காலமாக தமிழ் மக்கள் அனுஷ்டித்துவந்த மாவீரர் தினத்தை மறந்து விடுவார்கள். எனவே தமிழ்மக்கள் மறந்துவிடாமல் போரில் உயிர் நீத்த தமது உறவுகளை நினைவுகூரட்டும் என்ற ஏற்பாடுதான் இது என்று.

கார்த்திகை 27 தமிழ் மக்கள் மனங்களை விட்டு என்றுமே அகலாத நாள். மலரெடுத்து மாலை கட்டி பூசிக்கும் நாள். இறந்துபோன தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் ஒரு புனிதமான நாள். ஆனாலும் அந்த நாளை வெளிப்படையாக கொண்டாடுவதற்கு இலங்கையில் தடை. 2009 யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட அடுத்த கணமே வன்னிப்பகுதியில் காணப்பட்ட தமிழ் பண்பாட்டை எடுத்தியம்பும் கட்டடங்கள்இ விடுதலைப் போரட்டத்தை சித்திரிக்கும் நினைவிடங்கள்இதூபிகள் சிலைகள் போன்ற எல்லாமே அழிக்கப்பட்டன. அவற்றுடன் அங்கு போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளின் உடல்கள் விதைக்கப்பட்ட துயிலுமில்லங்களும் தரைமட்டமாக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 57 ஆவது பிறந்ததினம்இமற்றும் மாவீரர் தினம் இஅதனை ஒட்டிய மாவீரர் வாரம் என்பன உலகம் பூராகவும் அனுஷ்டிக்கப்பட்டன. இந்த கொண்டாட்டங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களால் கொண்டாடப்படலாம் என்ற அச்ச நிலை இராணுவத்தினர் மத்தியில் ஏற்பட்டது. இதனால் வழமையைவிடவும் வடபகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்பட்டன.இதன் ஒரு அங்கமாகத்தான் ஆலயங்களுக்கு படைக்காவல் வழங்கப்பட்டது.

வன்னியில் அந்தணர்கள் பூசை செய்யும் ஆலயங்களில் மணி ஒலி எழுப்புவதற்கும் அந்தணர்அல்லாத பூசகர்கள் பூசை செய்யும் ஆலயங்களில் பூசை செய்யவும் மணி ஒலிப்பதற்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டது. 25இ26இ27 ஆகிய தினங்களில் வன்னியில் உள்ள சகல ஆலயங்களிலும் பூசைகள் நடத்தவும் மணிகளை ஒலிக்கவும் கூடது என படையினர் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அந்தணர்கள் பூசை செய்யும் ஆலயங்களில் பூசை இடம்பெறாவிட்டால் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கட்டாய நிலைமை தோன்றுமெனச் சுட்டிக்காட்டப்பட்டதால் அவற்றில் பூசை செய்வதற்கு பின்னர் படையினர் அனுமதி வழங்கினர் இ எனினும் மணி ஒலி எழுப்புவதற்கு அந்தந்த ஆலயங்களில் தடை விதிக்கப்பட்டது.

யாழ்பாணம் காரை நகரில் உள்ள ஆலயங்களில் மாவீரர் வாரத்தில் மணி ஒலி எழுப்பக் கூடாது என்று படையினர் அறிவித்திருந்தனர்.இதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வடக்குமுழுவதும் பிறப்பிக்கப்பட்டது.இதுபோலவே யாழ்ப்பாணம்இ கிளிநொச்சிஇ முல்லைத்தீவுஇ வவுனியா போன்ற இடங்களில் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளை அதிகரித்திருந்ததுடன்இ ரோந்து நடவடிக்கைகளிலும் சிறு சிறு குழுக்களாக இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

ஆலயங்களுக்கு அருகில் பகலிரவாக இரண்டொரு இராணுவத்தினர் காவலுக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். அதிலும் 27ஆம் திகதி மாலை 6 மணி ஐந்து நிமிடம் என்பதை படையினர் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தனர். ஆலய மணியை யாரும் அசைத்துவிடாமல். விடுதலைப்புலிகளின் தலைவர் தமிழ்தேசிய மாவீரர் நாள் உரை நிகள்த்தியதும் மணிஒலி எழுப்பப்பட்டு அதன்பின்பு 06.06க்கு சுடர் ஏற்றும் புனித நேரமே அது.

யாழ்.பல்கலையை சல்லடைபோட்ட
படையும் பொலிசும்

தமிழ் தேசியத்தின் எழுச்சி என்பது பல்கலைக்கழகத்தை சார்ந்தது.இது வரலாற்று உண்மை.ஆரம்பத்தில் போராட்டத்தை முன்னெடுத்து சென்ற பலர் யாழ். பல்கலைக் கழகத்தை சேர்ந்தவர்களே.போராட்டவளர்ச்சியின் ஒவ்வொரு பரிணாமத்திலும் அதன் பங்கு காத்திரமாக இருந்தது. போங்குதமிழ் எழுச்சியின் ஊடாக தமிழ் மக்களிப் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துகூறியதன் மூலம் யாழ்.பல்கலைக்கழகம் போராட்டத்தை புதிய வடிவத்துக்கு மாற்றியிருந்தது. இன்றுவரை உலகத் தமிழர்களால் ஈழ மக்களுக்கு நீதி கேட்டு நடத்தப்படும் போராட்டங்களுக்கு புதிய வடிவத்தை பொங்கு தமிழ் எழுச்சி வழங்கியது. இதற்காக யாழ் பல்கலைக் கழகம் நிறையவே விலையும் கொடுத்திருக்கிறது.

ஆனாலும் 2009 யுத்தமுடிவின் பின்னர் காட்டிக் கொடுப்புக்களும் துரோகத்தன்மையும் இந்த சமூகத்தில் காலூன்றி உணர்வுகளை கொச்சைப்படுத்த ஆரம்பித்தது.ஆனாலும் உண்மையான உணர்வுகளை எலராலும் விலைபேச முடியாது எப்பதை பல்கலைக்கழகம் எடுத்துச் சொல்ல தவறவும் இல்லை.

மாவீரர் தினத்தையொட்டி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுச் சுவரெட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. துரதிஷ்டம் அந்த செய்தி படைப்புலனாய்வாரள்களுக்கு பல்கலைக்கழகத்திலிருத்தே அறிவிக்கப்பட்டது. உடனே நான்கைந்து மோட்டார்சைக்கிளில் வந்த முகமூடி கொள்ளையர்கள் மாணவர் பொது அறைக்கு கீழ் இருந்த விளப்பர பலகைக் கண்ணாடிகளை அடித்து நொருக்கிவிட்டு அதில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை எடுத்து சென்றனர்.

மறுநாள் பல்கலைக்கழகம் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.பல்கலைக்கழக சமூகத்தினர் மாவீரர் தினம் கொண்டாடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாகவும் அதனால் பல்கலைக்கழகத்தை சோதனையிடப்போவதாகவும் கூறி நுழைந்த பொலிஸார யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு மற்றும் வளாகத்திலுள்ள மண்டபங்கள்இ விரிவுரை அறைகளைச் சோதனையிட்டனர்.

“யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று முற்பகல் கூடிய மாணவர்களில் ஒரு பகுதியினர் தமிழினத்தின் விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த போராளிகளுக்காகவும்இ போரில் மரணமடைந்த மக்களுக்காகவும் மௌன அஞ்சலியைச் செலுத்தினர் என்பதே பரவிய தகவல்”


வன்னியில் எதுவாயினும்

இராணுவத்தின் அனுமதி தேவை

இலங்கை அரசு விடுதலை புலிகளை தோற்கடித்து தமிழ் மக்களை பயங்கர வாதத்திடம் இருந்து மீட்டெடுத்ததாக பிரசாரப்படுத்தி அவர்களை தொடர்ந்து அடிமைகளாகவே பயன்படுத்தி வருகிறது. மண் குடிசை என்றாலும் தூய்மையாய் வாழ்த வன்னி மக்களை வானம் பார்த்து வாழவைத்து வேடிக்கை பார்க்கிறது அரசு.

போதாக்குறைக்கு அவர்கள் தமது பண்பாட்டை பிரதிபலிக்க கூடிய விழாக்களையும் நிகழ்வுகளையும் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கார்த்திகை “விளக்கீடு”திருநாளில் தீபம் ஏற்ற தடைவிதிக்கப்படுகிறது.பொது இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி பெற உத்தரவிடப்பட்டுள்ளது.பொது நிகழ்வுகளுக்கு அழைக்கபடவேண்டியவர்கள் யார் யார் எனப் பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.வெளியிடப்படும் நூல்களாயினும் அதில் இடம்பெறும் அம்சங்கள் முற்கூட்டியே கோரப்படுகின்றன. அரசுக்கு சார்பற்ற மாற்றுகருத்துகள் அடங்கியவற்றை தவிர்க்குமாறு வற்புறுத்தப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் தமிழ் மக்களது அபிலாசைகளையும் உணர்வுகளையும் எந்த சந்தர்பத்திலும் யாராலும் மாற்றி விடமுடியாது.அது காலத்துக்கு காலம் வெவ்வேறு வடிவங்களில் முனைப்புப் பெறும்.

இதுபோலவே உணர்வுள்ள நிகழ்வுகளும் ஏதோ ஒரு மூலையிலாவது கொண்டாடப்படும்.அதை யாரும் கண்டுவிடவோ தடத்துவிடவோ முடியாது. இந்த மாவீரர் தீனமும் பிரத்தியோ இடங்களில் கொண்டாடப்பட்டே இருக்கிறது..மெழுகுவர்த்திகள் தமது கண்ணீரை வடித்தே இருக்கின்றன.உலகெங்கும் அந்தநாள் உச்சரிக்கப்பட்டே உள்ளது. ஏன் நாட்டின் ஜனாதிபதியும் மாவீரர் நாளை நினைவு கூர்ந்து தெற்கின் அதிவேக நெடுஞ்சாலையை திறந்துவைத்தார் மாவீரர் தினத்தில்.நவம்பர் 27 ஐ நினைவுகூர்து உரையும் நிகழ்த்தினார்.


நன்றி "உதயன்"(30.11.2011)