Showing posts with label பூமுகன். Show all posts
Showing posts with label பூமுகன். Show all posts

Sunday, November 3, 2013

சிங்களத்தில் பேசுங்கோ..


போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவ ரைக்கும் பயங்கரவாதம், பிரிவினை என்று பேசப்பட்ட விடயங் கள் இல்லையயன்றும் புதிதாக ஜன நாயக நாடொன்று பரிணமித்து இருப் பதாகவும் இலங்கை அரசு சொல் கிறது. ஜனநாயக நாட்டுக்கு இருக்க வேண்டிய பண்புகள், அடிப்படைத் தகுதிகள் என்ற நிலைப்பாட்டில் இலங்கையை இந்த தராசில் எந்தப் பக்கத்தில் வைப்பது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
போருக்குப் பின்னர் வடக்கு, கிழக் கில் அமைதி நிலை ஏற்படுத்தப்பட் டதாக அறிவிக்கப்பட்ட சூழலில் இரண்டு  மாகாணங்களுக்குமே தேர்தல் நடைபெற்றது. கிழக்கு அரசின் வசமாக வடக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ளது.

ஆனால் இந்திய இலங்கை உடன் படிக்கையின் பிரகாரம் ஏற்படுத் தப்பட்ட அரசமைப்பின் பதின்மூன் றாவது திருத்தத்தின் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை.
இதனை விட மாகாண சபைக்கு இருக்கக்கூடிய சில அதிகாரங்களை மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட சில வழிமுறைகள் மூலம் பறித் தெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பொலிஸ் அதிகாரம் மறுப்பு
வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்க ளின் மொழி, கலை, கலாசார பண் பாட்டு  முறைகளை புரிந்து கொள்ளக் கூடிய வகையில் பொலிஸ் நிர்வாகம் அமைய வேண்டும் அதனூடாகவே அமைதியான சூழலை உருவாக்க முடியும். மாறாக தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு எந்த விதத்திலும்   பொருத்தமற்ற சிங்கள மொழி பேசுபவர்கள் தொடர்ந்தும் பணியாற் றுவது இங்கு ஜனநாயக சூழலை ஏற்படுத்துவதற்கு தடையாக இருக் கும். எனவே வடக்கில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப் பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர்  க.வி.விக்னேஸ் வரன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை யும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்வதற்கு தமது கலாசாரத்தை புரிந்து கொள்ளக் கூடிய ஒரு பிரதி நிதியைத் தேடுகின்றனர்.
கருத்து வெளிப்பாடு, பிரச்சினை களை ஒளிவின்றி பேசுதல், நீதி கிடைக் கும் என்ற நம்பிக்கையை கட்டியயழுப் புதல் போன்ற காரணங்களுக்காக தமிழ் மக்கள் தமக்கு சார்பானவர்களையே ‡ பரிச்சயமுடையவர்களையே எதிர் பார்க்கின்றனர்.
ஆனால் வடக்கில் நீண்ட காலமாக இந்தப் பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
பொலிஸ் நிலையங்களில் தமது பிரச்சினைகளை முறையிடச் செல் வோர் மொழி, கலாசாரம், பண்பாடு போன்ற விடயங்களில் நெருக்கடி களை எதிர்நோக்கு கின்றனர்.
சாட்சி கூறச்  செல்பவர்கள் ஏளனம் செய்யப்படுவது, முறைப்பாடு செய்ப வர்கள் அலைக்கழிக்கப்படுவது, அலட்சியப்படுத்தப்படுவது மொழித் தொடர்பாடல் புரியாததால் இரண்டு தரப்பினருமே வெவ்வேறான அர்த் தங்களை கொள்வது என்று மொழி நிலை முரண்பாடுகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

பொலிஸ் பேச்சாளரின் மறுப்பு
புதிதாக தமிழ்ப் பொலிஸாரை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் வடக்குக்கு இல்லை. ஒரு தொகுதி தமிழ் பொலிஸார் ஏற்கனவே இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளனர். தவிர தமிழ் தெரிந்த பொலிஸார் அநேகமானவர் அங்கு கடமையாற்றுகின்றனர். இதற்கு மேலதிகமாக ஆளணிகளை பெருக்க வேண்டிய அவசியம் அங்கு இல்லை. வடக்கில் உள்ள எல்லா பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் தெரிந்த பொலிஸார் உள்ளனர். அங்கு தமி ழில் முறைப்பாடு செய்யவும் முறைப் பாட்டுப் பிரதியை தமிழில் பெற்றுக் கொள்ளவும் வசதிகள் இருக்கின்றன.
எனவே முதலமைச்சர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பொலிஸ் பேச்சாளர் மறுத்திருக்கிறார். 

தமிழ் தெரியாத பொலிஸார்

இரு தரப்பு வாதங்கள் இப்படி இருக்க இன்றும் வடக்கில் தமிழ் தெரியாத பொலிஸார் கடமையில் இருக்கின் றனர்.
ஓர் இடத்தில் நடக்கும் வன்முறை சம்பவம் தொடர்பில் அதை அவதா னிக்கும் ஒருவர் உடனடியாக தொலை பேசி மூலம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்க முடியாத நிலை காணப் படுகிறது.
சமூக அக்கறை காரணமாக பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவரிடம் "" தமிழ் தெரி யாது. சிங்களத்தில் பேசுங்க'' என்று கூறுகிறார் பொலிஸ் அதிகாரி என்று கவலையுடன் தெரி விக்கிறார் அந்த அக்கறைவாதி.
இன்றும் பல பொலிஸ் நிலை யங்களில் சிங்க ளத்தில் முறைப் பாடு கள் பதிவு செய் யப்படுகின்றன. முறைப்பாடு செய்ய போகும் ஒருவர் தமிழ் தெரிந்த பொலி ஸார் வரும் வரை பொலிஸ் நிலை யத்தில் காத்தி ருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வீதிகளில் போக் குவரத்து ஒழுங்கு முறைகளை சோதனையிடும் சிலருக்கு தமது நிலைப்பாட்டை சரியாக விளங்கப்படுத்த முடியாமல் தமிழ் மக்கள் திண்டாடுகின்றனர்.
அனுமதிப் பத்திரத்துடன் தமது தேவைகளுக்காக காட்டு மரங்கள் , கட்டடப் பொருள்கள் என்பனவற்றை கொண்டு செல்லும் மக்களை இடை மறிக்கும் பொலிஸார் தேவையற்ற வகையில் அணுகுகின்றனர். இது இலஞ்சம் வரை செல்கிறது. வன்னிப் பகுதியில் பொலிஸார் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மக்கள் வெளிப்படுத்திய சம்பவங்கள் பத்திரிகைகள் வாயிலாக அறிய முடிகிறது.

பொலிஸ் கடமையில் இராணுவம்
இவற்றை விட பொலிஸார் செய்ய வேண்டிய பல வேலைகளை வட பகுதியில் இராணுவத்தினர் செய்யும் நிலை அவதானிக்கப்படுகிறது.
விபத்து நடைபெறும் இடம் அல்லது குழு மோதல், பிரச்சினைகள் இடம் பெறும் இடங்களுக்கு முதலில் இரா ணுவத்தினரே வருகின்றனர். இவர் கள் வந்தவுடன் தாமே நீதிபதிகள் போலவும், பொலிஸார்கள் போல வும் நடந்து கொள்கின்றனர். தமக்கு வேண்டியவர்கள் எனில் உடனடி யாக அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி பாதிக்கப்பட் டவர்களை மிரட்டி வெளியேற்றி விடு கின்றனர். குறிப்பாக தென்பகுதியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணி களின் வாகனங்களின் தறிகெட்ட ஓட்டத்தால் விபத்துக்கள் நேருகின் றன. ஆனால் சம்பவ இடத்திற்கு வரும் இராணுவத்தினர் துப்பாக்கி முனையில் காரியத்தை சாதித்து விடுகின்றனர்.
தடயங்களை அழித்தல், குற்றத்தை நியாயப்படுத்தல், குற்றவாளிகளை தப் பிக்கவிடுதல் போன்ற செயற்பாடு களில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.
பாதுகாப்பு என்ற போர்வையில் வீதியில் செல்பவரை இடைமறித்து தொந்தரவு செய்தல், பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.
முல்லைத்தீவில் கடை உரிமையா ளர் ஒருவர் தனது பாரவூர்தியை கடைக்கு முன் நிறுத்தி வைத்ததற் காக இராணுவத்தினரால் அச்சுறுத் தப்பட்டுள்ளார். மறுநாள் காலை கடையை பூட்டி விட்டு விசாரணைக்கு வரு மாறும் அழைக்கப்பட்டிருக்கிறார். இது கடந்த வாரம் முல்லைத்தீவில் இடம்பெற்ற சம்பவம்.
இப்படி பொலிஸாருக்கு உரித்தான கட மைகள் பலவற்றை வட பகுதியில்  இராணுவத்தினர் செய்வதை அவ தானிக்க முடிகிறது.

மக்களுக்கு அச்சுறுத்தல்

ஜனநாயக   நாட்டில் பொலிஸ் நிர்வா கம் துப்பாக்கிகள் அற்ற சாதாரண மனித பண்பு கொண்ட நிர்வாக முறைமை. இங்கு மக்கள் பயமின்றி  சட்ட திட்டங் களுக்கு கட்டுப்பட்டு ஒழுகுவர். ஆனால் இலங்கையில் அப்படி ஒரு நிலை இல்லை. பொலிஸாரும் இரா ணுவத்தினரை போன்று அடக்கு முறைவாதிகளாக தம்மை அறிமுகப் படுத்திக் கொள்கின்றனர். இதனால் தற்போதும் பொலிஸ் மற்றும் இரா ணுவத்தினரை மக்கள் எதிரிகளாக நோக்குகின்றனர்.

நிலைமை மாற வேண்டும்

வடக்கில் அதிகார தொனியிலான பொலிஸ் நிர்வாகம் மாற்றப்பட்டு மக்கள் இயல்பாகச் சென்று தமது பிரச்சினைகளை முறையிட்டு தீர்த் துக் கொள்ளும் நிலை ஏற்படுத்தப் பட வேண்டும்.
ஒரு சம்பவம் தொடர்பாக சாட்சி சொல் பவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மாறாக அவர்களைத் தொந்தரவு செய்வதன் மூலம் சாட்சியாளர்கள் சம்பவம் நடைபெற்ற இடங்களி ருந்து நழுவிச் செல்லும் முறையே தோற்றுவிக்கப்படும். தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள் இருபத்தி நான்கு மணி நேரமும் கடைமை யில் ஈடுபடுத்தப்பட வேண்டும். முறைப் பாடு பதிவு செய்யச் செல்பவர் தமிழ் பேசும் அதிகாரிக்காக காத்திருக்கும் நிலைமை மாற்றப்பட வேண்டும்.

தமிழ்ப் பொலிஸாரை
இணைத்துக் கொள்ளல்

பொலிஸ் தரப்பு தமிழ் இளைஞர் யுவதிகளை சேவையில் இணைத் துக் கொள்வதற்கு விரும்பவில்லை. இதுவே பொலிஸ் பேச்சாளரின் கருத் தில் இருந்து வெளிவருகிறது.
ஆனால் இந்த மனோநிலை மாற்றப் பட வேண்டும். நல்லிணக்கம் ஏற் படுத்தப்பட வேண்டுமாயின் நிர் வாக கட்டமைப்புகளிலும் மாற்றீட்டு கொள்கைகள் அவசியம்.
அதாவது தமிழர்களுக்கு அதிகாரங் களை வழங்குவதால் நெருக்கடி ஏற் படும் என்ற இனத்துவ எண்ணக் கருவை விலக்கி மாகாண அதிகாரங் களுக்கு ஏற்புடையதாக நிர்வாக கட்ட மைப்பை செயல் உரு பெற செய்ய வேண்டும்.

கருத்துக்கு எதிர்க் கருத்து
வட மாகாண சபை இயங்க ஆரம் பித்தது முதல்  சபையால் வெளியி டப்படும் ஒவ்வொரு கருத்துக்கும் அரச தரப்பில் இருந்து எதிர்க் கருத்தே வெளிவருகின்றது. இந்த நிலை எதிர்காலத்தில் நெருக்கடியையே  உருவாக்கும். தமிழ்த் தரப்பு தமக் கான உரிமை விடயங்கள் வலு வாக  இருக்க வேண்டும் என்று விரும் புகின்றது.
அதே சமயம் தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகளை வழங்க அரச தரப்பு சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
ஒருவர் கூற அதற்கு மறுப்பு கூறுவ தற்கு காத்திருப்பது அபாயத்தின்  விளிம் புகளுக்கே அழைத்துச் செல்லும்.

நன்றி சூரியகாந்தி(03.11.2013)

Thursday, March 12, 2009

சிறுகதை “கடையடியில நிண்டு என்னத்தப்படிச்சவன்”


“யாரடா என்ர இடத்தில இருந்தது.இரண்டு நாள் வரேல்ல எண்டா சரி எல்லாம்” என்றபடியே வகுப்பறைக்குள் நுளைந்தான் றமேஸ். “ஓமடா நீ வீட்டில கிடந்திட்டு ஆடிக்கொருக்கா அமாவாளைக்கொருக்கா வருவ இதென்ன தோட்டமா” தோட்டம் செய்வது அவ்வளவு இழக்கனமோ தெரியவில்லைஇ வகுப்பு மெனிற்ரர் கேட்டார்.

மூன்று நாட்கள் பாடசாலைக்குச் செல்லாததால் வகுப்பு மெனிற்ரருக்கும் றமேஸிற்கும் வாக்குவாதம்.

இயற்கை எழில் கொஞ்சும் வயல் நிலங்களும் தோட்ட நிலங்களும் சேர்ந்த சிறிய கிராமத்திலஇ; ஒரு வறிய விவசாயிக்கு மூன்றாவதும் கடைசிப்பையனாகவும் பிறந்தவன் றமேஸ். எதுவோ தகப்பனின் உழைப்பாலும் தாயின் முயற்சியாலும் பாடசாலைக் கல்வியை தொடர்ந்தான்.
தந்தை கஸ்ரப்பட்டு உழகை;கக்கூடியவர்தான் ஆனால் உழகை;கும் பணத்தில் அரைவாசியை தன் உடல்அலுப்பைத் தீர்க்க எடுத்துவிடுவார்.மிகுதி அம்மாவின் கையில் சேரும். “இந்த மனுசன் திருந்தாது. எப்பவும்இப்படித்தான் வீட்டுக்கஸ்ரம் உணராததுகள்” தாய் பொறுப்புள்ளவளய்த்தான் இருக்க வேண்டும்.

றமேசின் தந்தைக்கு வயல் தோட்டம் என்று இருந்தாலும் நின்மதியாய் தொழில் செய்ய முதலீடு ஏதும் இருக்கவில்லை. ஏதோ தன் உழைப்புத்தான் முதலீடும் வருமானமும். அதனாலோ என்னவோ சிவலிங்கத்துக்கு வீட்டில் அக்கறையில்லை. அப்படிச் சொல்வதைவிட ஒரு விரக்தி நிலைதான் அது.
றமேஸ் பள்ளிப்பரவத்தில் சுட்டித்தனம் நிறைந்தவன். ஏடு தெடக்கிய அன்றே தன்னை சிவம் சேறின் மடியில் இருத்தியதற்காக தாய்க்கு வீட்டில் வந்து நல்ல அடி “ஏன் அவற்ற மடியில என்ன இருத்திநீங்க” என்று.

தாய் பார்வதி எப்படியாவது மகனைப் படிப்பித்து முன்னேற்ற வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். காரணம் தகப்பன் ஒரு குடிகாரன் தான் எட்டாம் வகுப்புத்தான் படித்தவள். இருந்தாலும் குடும்ப வறுமை றமேஸின் கல்வியில் பல தடைகளைப் போட்டது.


றமேஸிற்கு பள்ளிக்குப்போவதைவிட தந்தையுடன் தோட்டத்துக்குப்போவதென்றால் நல்லவிருப்பம்;. காரணம் தனக்காக அப்பாவும் அம்மாவும் கஸ்ரபடுகிறார்கள் என்பதை நல்லாவே உணர்ந்திருந்தான். “அம்மா நான் இண்டைக்கு பள்ளிக்கூடம் போகேல்ல அப்பாவோட தோட்டத்துக்கு போகப்போறன்”என்றவாறு வீட்டுக்கு பின்புறமாகப்போனான் றமேஸ். “இல்ல ராசா நேற்ரும் ரீச்சர் கண்டு என்னத்தான் பேசினவா. அப்பாவோட நான் போறன். நீ பள்ளிக்கூடம் போ” என்றவாறே சிவப்பியில் கறந்து வந்த பாலை காச்ச ஆரம்பித்தாள்.

தாயின் உதவியுடன் 9ஆம் தரம் வரை வந்துவிட்டான். “அம்மா பாவம் எனக்hகக மாட்டுக்குப் பின்னால திரியிறா”இது தான் அவனது ஏக்கமாக இருந்தது. அதனால்த்தான் அடிக்கடி பாடசாலைக்குப்போகாமல் நின்று விடுவான். “அம்மா இண்டைக்கு மாடுகள நான் கொண்டு போறன்” என்றான். இல்ல இல்ல எனக்குத்தெரியும் அது நீ நிக்கவேண்டாம்” “அப்பிடி என்றால் பள்ளிக்கூடம் போயிற்று வந்து என்னை மாறிவிடு” சொல்லிக்கொண்டு நேற்றப் பிடுங்கிய மிளகாய் பழத்தை காயப்போட சென்றாள்.

அம்மாவின் விருப்பப்படியே றமேஸ் பாடசாலைக்குப்போய்விட்டு வந்து தாயை தேடிப்போனான். போகும் வளியில்; ரீயூசனுக்கு போன வகுப்பு பொடியனுகள். “எங்கடா றமேஸ்? மாடு அம்மா வைச்சிருக்கிறா மாறிவிடப்போறன். ஏன்ரா மாடு மாடு என்று சாகிற ரீயூசனுக்கு வந்து பாக்கலாமே” நக்கலாகக் கேட்டான் ரூபன்.

உண்மையில் அவன் மாடு மாடு என்று சாகிறான்தான். காரணம் அவைதான் அந்தக்குடும்பத்தைப் பொறுத்தவரை குல தெய்வங்கள். அவைக்கு சிவப்பி கறுப்பி வெள்ளையம்மா குண்டாத்த என்று செல்லப் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்.வயிறு பட்டிணிஇல்லாமல் தூங்க அவைதான் அந்த குடும்பத்தின் தாய்ப் பறவைகள்.

வகுப்பு ரீச்சரும் சரி பாட ரீச்சரும் சரி றமேஸை பேசுவது அதிகம். காரணம் வீட்டுக்கஸ்ரம் அவர்களுக்கும் தெரியும். “ஏதோ கஸ்ரப்பட்டு அதுகள் படிப்பிக்குதுகள் நீ நல்லாப் படிக்க வேணும்” என்று தினமும் சொல்லுவினம்.தமிழ் பாட ரீச்சர் றமேஸின் வீட்டுக்கு பக்கத்து வீதியில்த்தான் இருக்கிறா. அடிக்கடி தாயிடம் எல்லாவற்றையும் சொல்லுவா.

“அம்மா நீங்கள் தான் அவன வீட்டில மறிக்காம அனுப்போணும்.கஸ்ரம் கஸ்ரம் என்று சொல்லி அதுகளின்ர வாழ்க்கையையும் கஸ்ரமாக்கக்கூடாது”

வீட்டுக்கு வந்த பார்வதி றமேஸை கூப்பிட்டு “தம்பி ரீச்சர் எனக்குத்தான் பேசிறா. நீ இனி ஓழுங்கா பள்ளிக்குடம் போ! அவ வீட்டில ரீயூசன் சொல்லிக்கொடுக்கிறா அங்மையும் உன்ன அனுப்பச்சொன்னவா. இண்டையில இருந்து அங்கயும் போ”என்று அன்பாகச் சொன்னாள்.

தாயும் கல்வியை வெறுக்கவில்லை பிள்ளையும் கல்வியை மறுக்கவில்லை. ஆனால் இவர்களது குடும்பச்சூழல் இதுபோன்ற விரிசலிகளையும் அக்கறையின்மையையும் தோற்றுவிக்க ஏதுவாக இருந்தது.ரீச்சர் றமேஸிடம் தான் கற்பிக்கும் பாடங்களுக்கு கட்டணம் அறவிடவில்லை. க.பொ.த சாதாரணதரம் படிக்கும்போதுதான் ரீயூனுக்குப்போனான். தான் எப்படியாவது படித்துவவிடவேண்டும் அம்மாவின் கனவை நினைவாக்க பேண்டும் என்பதில் குறியாக இருந்த றமேஸ் சாதாரண தரப்பரீட்சையில் முதல்தரத்தில் சித்தி பெறவில்லை இரண்டாம் முறை 8பாடங்களில் சித்திபெற்றான்.

அவனது உயர்கல்விப்படிப்பிற்கு அந்தக்கிராமத்தில் வசதி இருக்கவில்லை. அயல் பிரதேசத்துக்கு அல்லது 20முஅ கடந்துதான் கற்கவேண்டியிருந்தது.

தனது கிராமத்து மருத்துவமனை மருத்துவரின் உதவியுடன் ஒரு ஆண்கள் விடுதியில் தங்கிநின்று கல்லூரி ஒன்றில் கலைப்பிரிவில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தான் றமேஸ்.
இடையிடையே வீட்டிற்கு வந்து போவான். பார்வதியும் தான் பொத்திப்பொத்தி வைத்திருந்த பணத்தை கொடுத்து ஏதோ சமாளித்தாள். றமேஸ் வீட்டு நிலையை நன்கு உணர்ந்ததால் அதற்கு ஏற்றால் போலவே செலவுகளையும் வைத்துக்கொண்டான்.இங்கும் அவனால் முதல்தடவையில் சித்தியடையமுடியவில்லை.

இரண்டாவது தடவைக்கு பரீட்சைக்கு விண்ணப்பித்துவிட்டு ஒரு தையல்கடையில் வேலைக்கு சேர்ந்துகொண்டான். கிழமை நாட்களில் காலை8.00 மணிமுதல் இரவு 8.00மணிவரை கடையில் வேலை செய்துவிட்டு அதன்பின்பு தான் தங்கியிருந்த றூமிற்குப் போய் படிப்பான்.சனி ஞாயிறு தினங்களில் ரீயூசனுக்குப்போவான்.

அவன் தங்கியிருந்த றூமிற்கு பக்கத்துவீட்டு அன்ரிகூடகேட்பா “தம்பி இப்பிடி படிச்சு எப்படி பாஸ் பண்ணப்போற”என்று. அன்ரிக்கு தெரியாது அவனது வீட்டு நிலை;. றமேஸ் தன்னைப்பற்றி அனாவசியமாக யாரிடமும் கதைப்பதுமில்லை. கேட்டால் சொல்வதுமில்லை.

எது எப்படியோ அவன் பல்கலைக்கழகம் தெரிவாகிவிட்டான் என்ற செய்தியை அவனது பல நண்பர்கள் நம்பவில்லை. “அடேய் அவன் சுட்டிலக்கத்த மாறிச்சொல்லுறான். வடிவா பாக்கச்சொல்லு” “என்னடா கடயடியில நிண்டு என்னத்தப்படிச்சவன்” என்று பேசிக்கொண்டனர்.

தாயின் ஆசையிலும் ஆசிரியர்களின் வழிகாட்டலிலும் நல்ல நம்பிக்கை கொண்டதால் றமேஸ் இன்று பல்கலைக்கழகத்தில்.உண்மையில் குடும்பச் சுமை அவனது கல்லிக்கு பாரமாகவன்றி படிக்கற்களாக இருந்திருக்கிறது என்பதிலும் பார்க்க அவன் அவ்வாறு மாற்றியிருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.

Friday, February 20, 2009

வெளிச்சத்தின் கனவால் சிதறிப்போன எண்ணங்கள்.

வழமைபோல் எனது அறையில் நான்மட்டுமே. ஏதோ பெரிய வேலைமுடித்துவிட்டு வீடுதிரும்பியவன் போல களைத்த முகத்துடன் சேட்டைக்கழற்றிவிட்டு கட்டிலில் சாய்ந்தேன். மிளிர்ந்துகொண்டிருந்த ரீயூப்லைற்றைச்சுற்றி, விடியல் இதுதான் என்றெண்ணி தமது உல்லாசமான இறக்கைகளுடன் விட்டில் பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன. ஆதிசயக்கண்களுடன், அவர்களின் வாழ்வுபற்றிய கனவுடன் நான். காரணம் எனக்கொரு நண்பன் இருக்கின்றான். அவனுக்கு விட்டில்கள் என்றால் பிரியம். நண்பன் என்கிறேன் அவனுக்கு விட்டில்கள் என்றால் பிரியம் என்கிறேன் என்று குழம்பலாம், ஆனால் எனது நண்பன் யாருமல்ல ஐந்தறிவுள்ள நற்குணமுள்ள வீட்டுப்பல்லிதான். அவனுக்கும் எனக்குமுள்ள உறவு, நெருக்கம் பற்றி கேள்விகள் எழலாம், பெரிதாக ஏதுமில்லை. நான் நினைப்பதை சரிவராது என்று முற்கூட்டியே சொல்லிவிடும் திறமையால் அவ்வளவு உறவு.

இப்போதெல்லாம்நான்நினைப்பதொன்றுநடப்பதுவேறொன்று.இதுஎனக்கானதுமட்டுமல்லதமிழ்மக்களுக்கும்.நண்பனைபகலில்சந்தித்துக்கொள்வதுகுறைவு. இரவில்த்தான்வருவான்சாப்பாட்டிற்கோ, என்னுடன்கதைக்க வோதெரியவில்லை.நான்நினைப்பதுஇரண்டுநோக்கத்துக்காகவும்வருகின்றானென்று.

ஆதலால்அவனுக்காகமின்விளக்கைஅணைக்காமல்காத்திருப்பேன்.இவ்வளவிற்குள்எனதுநண்பன்ஊனமானவன்தனதுவாலைஎதன்காரணமாகவோஇழந்திருக்கிறான்.ஆனால்இதுவரைக்கும்அந்தநிலைபற்றிநான்கேட்கவுமில்லை,அவன்சொல்லவுமில்லை.இப்போதெல்லாம்முன்அனுபவம்இசம்பவம்என்றுஎதையும்யாருடனும்கேடுப்பழகிக்கொள்ளமுடியாது.அப்படிசற்று இறங்கிப்பழகினால்ஆபத்து. அதுவும்நெருக்கடிதான்.

அதனால்அவனதுஊனத்தைப்பற்றிநான்பொருட்படுத்தியதில்லை.தனதுஉயிர்வாழ்விற்காகவெனஎனதுஅறையைபயன்படுத்துகின்றானோ,அல்லதுநான்தனியேஇருக்கின்றேன்என்றுபார்க்கின்றானோதெரியவில்லை.வருவதும்போவதும்வழமையாகிவிட்டது.


இப்போதெல்லாம்ஆபத்துக்களைநாங்கள்தேடிச்செல்லத்தேவையில்லைஅதுவேபட்டங்களுடனும்பரிசுகளுடனும்எம்மைத்தேடிவரும்.நண்பன்அப்படிப்பட்டவனில்லை. பாவம்ஐந்தறிவுமட்டுமல்ல, இயலாதவனும்கூட. நம்பிக்கைபற்றிஎப்படிநியாயப்படுத்துவது. அதுதான்ஆபத்தானதே. விட்டில்கள்தம்வாழ்வைஅர்ப்பணிக்கஅங்குவருகின்றார்களோ,மாறாகசிறுபொழுதேனும்ஒளியில்வாழ்ந்துவிட்டுமற்றவர்வாழ்விற்குவழிசமைக்கிறார்களோதினமும்மாறிமாறிஇவைநடந்தேறுகின்றன.வருகிறார்கள்நண்பனின்பசியும்போகின்றது.
த்தனையோஉயிர்கள்விளக்கொளியையும்காணமுடியாமல்பேரிரைச்சல்களையும்,வெடிப்பொலிகளையும் வாழ்வின் இராகமாக ஏற்று எண்ணாத் தேவைகளை பூர்த்திசெய்யமுடியாமல்வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இயலாத நண்பனையும், அவனது வீரத்தையும் பரீட்சிக்க பலவிட்டில்கள் தமது சாகசங்களைக் காட்டபாவம் வாலையிழந்தவன் தன்பரீட்சியத்தால்அவர்களை மடக்குவதும் என்கண்களில் படும். எதுவானாலும் விட்டில்கள் சிறிதுகாலம்தான் வாழ்பவை. விட்டிலுக்கு பறக்க இருக்கும் சுதந்திரம் பல்லிக்கில்லை. வாலை இழந்த நண்பன் கஸ்ரப்பட்டு இடத்திற்கிடம் மாறி இயன்றளவு முயற்சியால் தன்இலக்கைஅடைந்துவிடுவான். “கடினஉழைப்பும்தளராமனமும்உயிர்வாழ்வதற்குமட்டுமல்லஇஉயிரைக்கொடுக்கவும்தேவைஉண்மைதான்.இன்றுங்கூட எம்மக்களின் வாழ்வு இந்தநிலையில்த்தான். பல்லிவேட்டையில் தோற்றதில்லை…….
பலர் பல்லியைப் பற்றிபலகதைபேசுவார்கள். பல்லிசொற்பலன், உச்சத்துப்பல்லி அச்சமில்லை,பக்கத்துப்பல்லிபயமில்லை. இதையும்விடதிருப்பி ஏசுவோரும்கூட, இவையெல்லாம் முன்னோர்களின் மூடநம்பிக்கை. இதை இப்பவும் ஆதரிப்போரும் உளர். இருந்தும் வெளியில் நான்நாலும்தெரிந்தவன், நவீனத்துவம் அடைந்தவன் என்பதையும் மறுப்பதில்லை. எங்காவது பல்லி சொல்லிக் கேட்டால் உடனே நிலத்தில் சுண்டுவதும், இப்போ என்னநினைத்தனான் அறுந்தபல்லி குறுக்க பாயுது என்று தடுமாறுவர். ஆவ்வளவிற்கு பல்லி என்னதான் சொன்னது மரபை ஆதரிப்போர் இதுபற்றி என்னசொல்கின்றனரோ? சிலமனிதர்கள் கதைப்பதே பல்லிபோன்றுதான் என்பர். பாவம்ந்தளவிற்கு என்னதான் சொல்கின்றது. பல்லியின் மொழியை யார்படித்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கை அற்றவரின் தேடல் விளக்கம்தான் இவை என்று சொல்ல முடியும். அன்பு, அறிவு,அறம் அனைத்தும் தன்னிடம் இருக்கையில் அதைஅறியாது வெளியில் தேடுவது இன்று ஒரு போதும் ஏற்கமுடியாததே. நம்பிக்கையின் துணையுடன்தான் இருப்பு உறுதிப்படுத்தப்படுகையில் மூடக்கொள்கை அதைக்கூறுபோட விளைகின்றது.
சாதாரணமாக நள்ளிரவில் அவன் எனக்குநன்றி சொல்லிவிட்டுப் போய்விடுவான். எனக்கு அப்போதும் கூடதூக்கம் வரவில்லை. மாடிக் கட்டிடங்களில் வசித்தாலும் புழுதிநிலத்தின் வாசனையும், பூத்துக் குலுங்கும் வயல்நிலங்களும் மனதுக்குள் வந்து வண்ணத்திரையில் கோலமாய் தெரிகின்றன. இப்போ புழுதிகிளம்பும்படியாகவும், புகைமூடும்படியாகவும் பாலைவனமாகி, அன்றைய கரிகால சோழனும் கலிங்கத்துப் பரணியுமாகிவருகிறது எமதுநிலம். எப்படிதூக்கம்வரும். ல்லாமே போலிஎன்று தெரிந்த பிறகும் வாழ்வை வெறுக்கமனம் தயாரில்லை. ஏனென்றால் நம்பிக்கையின் அத்திவாரம் அவ்வளவு உரமாக இருக்கின்றது.
மனதுக்கு சஞ்சலமாக இருக்கும்போது தூக்கம் எப்படிவரும்.பேனாக்கள், பொத்தகங்கள் எல்லாம் வெறும் சடப்பொருட்களாகவே இன்று. எதிலும் உயிரைக்காண முடியாது. காரணம் அதைவிட மேலான கருவிகள்மலிந்துகிடக்கின்றன. கைகள் எதற்கு நகர்ந்தாலும் நில்என்று தடுக்கபலகைகள். பேரம்பேசவாவது ஒருவர் முனைந்தால் பெயரைகூட விட்டுவைக்க முடியாதாம். மனம் திறந்து மற்றவர்களிடம் பேசுவதென்பது இன்றுசுலபமானதல்ல. போகுமிடமெல்லாம் படுகொலைகள், சித்திரவதைகள் உரிமைமீறல்கள் என்று தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. தமிழினப் படுகொலைகள் நாடுகடந்து பேசப்பட்டாலும் வாயளவிலேயே நின்றுவிடுகின்றன. அந்நியநாட்டுப் படைகளை தமிழன் என்றுவருணித்த சிங்களதேசம், உண்மைத் தமிழனை எப்படிஅணுகும்? புறக்கணிப்புக்கள் இருக்கும்போது, புறகணிப்புக்கள் எப்படி மாறப்போகின்றன? பொறுமை இருப்பை இழக்கவைத்தது. தினமும் ஒருவிடியல் கனவுடன் எம் இருப்பு தொடர்கின்றது.